Showing posts with label Nada Namakriya Raga. Show all posts
Showing posts with label Nada Namakriya Raga. Show all posts

Monday, December 20, 2010

தியாகராஜ கிருதி - கருணா ஜலதே4 - ராகம் நாத நாமக்ரிய - Karunaa Jaladhe - Raga Nada Namakriya

பல்லவி
கருணா ஜலதே4 தா31ரதே2
கமனீயானன ஸுகு3ண நிதே4

சரணம்
சரணம் 1
நீ மயமேகா31னிலனு-
நேமனி நே தூ3ருது3னு
(க)


சரணம் 2
நிஜ தா3ஸுல அனுப4வமொகடி
நினு தெலியனி ஜன மதமொகடி (க)


சரணம் 3
வலசுசு நாமமு ஸேயுது3ரே 2நினு
தலசுசு
ப்ரொத்3து3 போகொ3ட்டுது3ரே (க)


சரணம் 4
ஸு-க்ரு2தமுலொப்பகி3ந்துரே நீ
ப்ரக்ரு2தினி தெலிஸியேகி3ந்துரே (க)


சரணம் 5
மனஸாரக3 பூஜிந்துரே 3நினு
மாடி மாடிகி
யோஜிந்துரே (க)


சரணம் 6
நினு 4கனுலகு கன கோருது3ரே 5நவ
நிது4
ப்3பி3ன ஸுக2முனு கோரரே (க)


சரணம் 7
நீவன்னிடயனி பல்குது3ரே
6நீவே தானனி குலுகுது3ரே (க)


சரணம் 8
தமலோ 7மெலகு3சுனுந்து3ரே
தாரக ரூபுனி கந்து3ரே (க)


சரணம் 9
பா43வத ப்ரஹ்லாத3 ஹித ராம
பா4வுக 8த்யாக3ராஜ நுத (க)


பொருள் - சுருக்கம்
  • கருணைக்கடலே, தசரதன் மைந்தா! விரும்பத்தகு வதனமுடை நற்பண்புச் செல்வமே!
  • பெருந் தொண்டன் பிரகலாதனுக்கினிய இராமா! பேறுடைத் தியாகராசன் போற்றுவோனே!

  • உனது இயல்பேயன்றோ (யாவும்) புவியினில்! (இதில்) என்னவென்று நான் குறை கூறுவேன்?

  • உண்மையான தொண்டர்களின் அனுபவமொன்று; உன்னையறியா மக்களின் கருத்து வேறொன்று;

  • (உண்மையான தொண்டர்கள்) -
    • காதலுடன் (உனது) திருநாமம் உரைப்பரே! உன்னை நினைந்துப் பொழுதைக் கழிப்பரே!
    • உனது நற்செயல்களை ஒப்புவிப்பரே! உனது இயற்கையை யறிந்து, அவ்வழி நடப்பரே!
    • உன்னை மனதார வழிபடுவரே! உன்னை திரும்பத் திரும்ப மனதில் யோசிப்பரே!
    • உன்னைக் கண்களால் காண விழைவரே! நவ நிதிகள் பெற்ற சுகத்தினையும் வேண்டரே!
    • நீயே யாவற்றிலும் (உள்ளாய்) என்பரே! நீயே தானெனப் பெருமிதமுறுவரே!
    • தம்மிலேயே திளைத்திருப்பரே! தாரக உருவத்தோனைக் காண்பரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ ஜலதே4/ தா31ரதே2/
கருணை/ கடலே/ தசரதன்/ மைந்தா/

கமனீய/-ஆனன/ ஸுகு3ண/ நிதே4/
விரும்பத்தகு/ வதனமுடை/ நற்பண்பு/ செல்வமே/


சரணம்
சரணம் 1
நீ/ மயமேகா3/-இலனு/-
உனது/ இயல்பேயன்றோ/ (யாவும்) புவியினில்/

ஏமனி/ நே/ தூ3ருது3னு/ (க
(இதில்) என்னவென்று/ நான்/ குறை கூறுவேன்/


சரணம் 2
நிஜ/ தா3ஸுல/ அனுப4வமு/-ஒகடி/
உண்மையான/ தொண்டர்களின்/ அனுபவம்/ ஒன்று/

நினு/ தெலியனி/ ஜன/ மதமு/-ஒகடி/ (க)
உன்னை/ யறியா/ மக்களின்/ கருத்து/ வேறொன்று/


சரணம் 3
வலசுசு/ நாமமு/ ஸேயுது3ரே/ நினு/
காதலுடன்/ (உனது) திருநாமம்/ உரைப்பரே/ உன்னை/

தலசுசு/ ப்ரொத்3து3/ போகொ3ட்டுது3ரே/ (க)
நினைந்து/ பொழுதை/ கழிப்பரே/


சரணம் 4
ஸு-க்ரு2தமுலு/-ஒப்பகி3ந்துரே/ நீ/
(உனது) நற்செயல்களை/ ஒப்புவிப்பரே/ உனது/

ப்ரக்ரு2தினி/ தெலிஸி/-ஏகி3ந்துரே/ (க)
இயற்கையை/ யறிந்து/, (அவ்)வழி நடப்பரே/


சரணம் 5
மனஸாரக3/ பூஜிந்துரே/ நினு/
(உன்னை) மனதார/ வழிபடுவரே/ உன்னை/

மாடி/ மாடிகி/ யோஜிந்துரே/ (க)
திரும்ப/ திரும்ப/ (மனதில்) யோசிப்பரே/


சரணம் 6
நினு/ கனுலகு/ கன/ கோருது3ரே/ நவ/
உன்னை/ கண்களால்/ காண/ விழைவரே/ நவ/

நிது4லு/-அப்3பி3ன/ ஸுக2முனு/ கோரரே/ (க)
நிதிகள்/ பெற்ற/ சுகத்தினையும்/ வேண்டரே/


சரணம் 7
நீவு/-அன்னிட/-அனி பல்குது3ரே/
நீயே/ யாவற்றிலும் (உள்ளாய்)/ என்பரே/

நீவே/ தானு/-அனி/ குலுகுது3ரே/ (க)
நீயே/ தான்/ என/ பெருமிதமுறுவரே/


சரணம் 8
தமலோ/ மெலகு3சுனு/-உந்து3ரே/
தம்மிலேயே/ திளைத்து/ இருப்பரே/

தாரக/ ரூபுனி/ கந்து3ரே/ (க)
தாரக/ உருவத்தோனை/ காண்பரே/


சரணம் 9
பா43வத/ ப்ரஹ்லாத3/ ஹித/ ராம/
பெருந் தொண்டன்/ பிரகலாதனுக்கு/ இனிய/ இராமா/

பா4வுக/ த்யாக3ராஜ/ நுத/ (க)
பேறுடை/ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - இலனுநேமனி நே தூ3ருது3னு - இலனு ஏமனி நே தூ3ருது3னு.

2 - நினு தலசுசு - தலசுசு.

3 - நினு மாடி மாடிகி - மாடி மாடிகி.

4 - கனுலகு கன - கனுலனு கன.

8 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ நுத ராம.

Top

மேற்கோள்கள்
5 - நவ நிது4லு - நவ நிதி - கச்சப, கற்ப, சங்க, நந்த, நீல, பதும, மகா, மகாபதும, முகுந்த நிதிகள் - குபேரனின் நவநிதிகள்

6 - நீவே தானனி - நீயே தானென - சாரூப்பியம் எனப்படும் இறைவனுடன் உருவ ஒற்றுமை - இது குறித்து, ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி' (செய்யுள் 28) நோக்கவும் -

"உனது வழிபாட்டினால், 'சாரூப்பியம்' (உன்னுருவும் பெறல்);
'சிவ', 'மகாதேவ' என்று உனது திருநாமங்கள் உரைப்பதனால், 'சாமீப்பியம்' (உனதண்மை);
சிவ பக்தியில் ஈடுபட்ட மக்களின் இணக்கத்தினால், உரையாடலினால், 'சாலோக்கியம்' (உனதுலகம் உறைதல்);
பவானியின் மணாளா! அசைவன மற்றும் அசையாதனவாகிய உனது வடிவத்தின் தியானத்தினால், 'சாயுச்சியம்' (உன்னோடொன்றுதல்);
இங்ஙனம், இறைவா! இந்த உடலிலேயே பிறவியின் பயன் அடைவேன்.
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
7 - மெலகு3சு - இச்சொல்லுக்கு, சமஸ்கிருத 'ஸஞ்சார' (உடனுறைதல்) என்ற பொருளாகும். இச்சொல்லினை (ஸஞ்சார) தியாகராஜரின் 'மானஸ ஸஞ்சரரே ராமே', 'எந்த3ரோ மஹானுபா3வுலு' (2-வது ஸ்வர சாகித்தியம்) மற்றும் 'ஸுந்த3ர தர தே3ஹம்' (3-வது சரணம்) என்ற கீர்த்தனைகளில் நோக்கவும்.

தாரக உருவத்தோன் - ராமன் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலினைக் கடத்துவிப்பது.

Top


Updated on 21 Dec 2010

Friday, December 17, 2010

தியாகராஜ கிருதி - ஜய மங்களம் - ராகம் நாத நாமக்ரிய - Jaya Mangalam - Raga Nada Namakriya

பல்லவி
ஜய மங்க3ளம் நித்ய ஸு14 மங்க3ளம்

சரணம்
சரணம் 1
மங்க3ளம் அவனி ஸுதா நாது2னிகி
மங்க3ளம் அரவிந்தா3க்ஷுனிகி
மங்க3ளம் அத்3பு4த சாரித்ருனிகி
மங்க3ளம் ஆதி3 தே3வுனிகி (ஜய)


சரணம் 2
ஸுந்த3ர வத3னுனிகி ஸு-தே3ஹுனிகி
ப்3ரு2ந்தா3ரக க3ண வந்த்3யுனிகி
மந்த3ர த4ருனிகி மன
மாத4வுனிகி ஸு142லது3னிகி (ஜய)


சரணம் 3
இன குலமுன வெலஸின ராமுனிகி
ஜனக வசன பரிபாலுனிகி
மனஸிஜ கோடி லாவண்யுனிகி
கனக ஸிம்ஹாஸன நிலயுனிகி (ஜய)


சரணம் 4
மந்தா3னில போ4ஜ ஸ1யனுனிகி
1மந்தா3கினீ வர ஜனகுனிகி
மந்த3 ஜனக ஸ1த ஸங்காஸு1னிகி
2மந்தா3 ரூபுனிகி ஹரிகி (ஜய)


சரணம் 5
இந்த்3ராத்3யஷ்ட தி3கீ31 நுதுனிகி
சந்த்3ராதி3த்ய ஸு-நயனுனிகி
3ஜேந்த்3ருனி ஸம்ரக்ஷிஞ்சின ராம
சந்த்3ருனிகி ஜக3த்3ரூபுனிகி (ஜய)


சரணம் 6
ராஜ ஸே12ர ப்ரியுனிகி 3மௌனி
ராஜ ராஜ
பூஜிதுனிகி த்யாக3-
ராஜ வினுதுனிகி வர 43
ராஜாதி3
4க்த வரது3னிகி (ஜய)


பொருள் - சுருக்கம்
  • ஜய மங்களம்.
  • என்றும் சுப மங்களம்.

  • மங்களம், புவியின் மகள் மணாளனுக்கு!
  • மங்களம், கமலக் கண்ணனுக்கு!
  • மங்களம், வியத்தகு நடத்தை யுடையோனுக்கு!
  • மங்களம், முதற்கடவுளுக்கு!

    • எழில் முகத்தோனுக்கு,
    • நல்லுடலோனுக்கு,
    • வானோர்கள் வணங்குவோனுக்கு,
    • மந்தர மலை சுமந்தோனுக்கு,
    • எமது மாதவனுக்கு,
    • நற்பயன் அருள்வோனுக்கு,

    • பரிதி குலத்தில் தோன்றிய இராமனுக்கு,
    • தந்தை சொல் காத்தவனுக்கு,
    • மதனர் கோடி நிகர் எழிலுடையோனுக்கு,
    • தங்க சிங்காதனத்தில் அமர்வோனுக்கு,

    • மென் காற்றுண்போன் அணையோனுக்கு,
    • மந்தாகினியை ஈன்ற புனிதனுக்கு,
    • சனியை யீன்றோன் (பரிதி) நூறு உதித்தாற்போன்றோனுக்கு,
    • மந்தார (தரு) உருவினனுக்கு,
    • அரிக்கு,

    • இந்திரன் முதலாக எண்-திசைமன்னர் போற்றுவோனுக்கு,
    • மதி, பரிதிக் கண்களோனுக்கு,
    • கரியரசனைக் காத்த இராம சந்திரனுக்கு,
    • பல்லுலக உருவத்தோனுக்கு,

    • பிறைசூடிக்கு இனியோனுக்கு,
    • முனிவரிற் சிறந்தோர் மற்றும் அரசர்கள் தொழுவோனுக்கு,
    • தியாகராசன் போற்றுவோனுக்கு,
    • உயர் கரி யரசன் முதலான தொண்டருக்கருள்வோனுக்கு,

  • ஜய மங்களம்.
  • என்றும் சுப மங்களம்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு14/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/


சரணம்
சரணம் 1
மங்க3ளம்/ அவனி/ ஸுதா/ நாது2னிகி/
மங்களம்/ புவியின்/ மகள்/ மணாளனுக்கு/

மங்க3ளம்/ அரவிந்த3/-அக்ஷுனிகி/
மங்களம்/ கமல/ கண்ணனுக்கு/

மங்க3ளம்/ அத்3பு4த/ சாரித்ருனிகி/
மங்களம்/ வியத்தகு/ நடத்தை யுடையோனுக்கு/

மங்க3ளம்/ ஆதி3/ தே3வுனிகி/ (ஜய)
மங்களம்/ முதற்/ கடவுளுக்கு/


சரணம் 2
ஸுந்த3ர/ வத3னுனிகி/ ஸு-தே3ஹுனிகி/
எழில்/ முகத்தோனுக்கு/ நல்லுடலோனுக்கு/

ப்3ரு2ந்தா3ரக க3ண/ வந்த்3யுனிகி/
வானோர்கள்/ வணங்குவோனுக்கு/

மந்த3ர/ த4ருனிகி/ மன/
மந்தர மலை/ சுமந்தோனுக்கு/ எமது/

மாத4வுனிகி/ ஸு14/ ப2லது3னிகி/ (ஜய)
மாதவனுக்கு/ நற்/ பயன் அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 3
இன/ குலமுன/ வெலஸின/ ராமுனிகி/
பரிதி/ குலத்தில்/ தோன்றிய/ இராமனுக்கு/

ஜனக/ வசன/ பரிபாலுனிகி/
தந்தை/ சொல்/ காத்தவனுக்கு/

மனஸிஜ/ கோடி/ லாவண்யுனிகி/
மதனர்/ கோடி (நிகர்)/ எழிலுடையோனுக்கு/

கனக/ ஸிம்ஹாஸன/ நிலயுனிகி/ (ஜய)
தங்க/ சிங்காதனத்தில்/ அமர்வோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 4
மந்த3/-அனில/ போ4ஜ/ ஸ1யனுனிகி/
மென்/ காற்று/ உண்போன்/ அணையோனுக்கு/

மந்தா3கினீ/ வர/ ஜனகுனிகி/
மந்தாகினி/ புனித/ ஈன்றோனுக்கு/

மந்த3/ ஜனக/ ஸ1த/ ஸங்காஸு1னிகி/
சனியை/ யீன்றோன் (பரிதி)/ நூறு/ உதித்தாற்போன்றோனுக்கு/

மந்தா3ர/ ரூபுனிகி/ ஹரிகி/ (ஜய)
மந்தார (தரு)/ உருவினனுக்கு/ அரிக்கு/ ஜய மங்களம்...


சரணம் 5
இந்த்3ர/-ஆதி3/-அஷ்ட/ தி3க்/-ஈஸ1/ நுதுனிகி/
இந்திரன்/ முதலாக/ எண்/-திசை/ மன்னர்/ போற்றுவோனுக்கு/

சந்த்3ர/-ஆதி3த்ய/ ஸு-நயனுனிகி/
மதி/ பரிதி/ கண்களோனுக்கு/

3ஜ/-இந்த்3ருனி/ ஸம்ரக்ஷிஞ்சின/ ராம/
கரி/ யரசனை/ காத்த/ இராம/

சந்த்3ருனிகி/ ஜக3த்/-ரூபுனிகி/ (ஜய)
சந்திரனுக்கு/ பல்லுலக/ உருவத்தோனுக்கு/ ஜய மங்களம்...


சரணம் 6
ராஜ/ ஸே12ர/ ப்ரியுனிகி/ மௌனி/
பிறை/ சூடிக்கு/ இனியோனுக்கு/ முனிவரிற்/

ராஜ/ ராஜ/ பூஜிதுனிகி/
சிறந்தோர்/ (மற்றும்) அரசர்கள்/ தொழுவோனுக்கு/

த்யாக3ராஜ/ வினுதுனிகி/ வர/ க3ஜ/
தியாகராசன்/ போற்றுவோனுக்கு/ உயர்/ கரி/

ராஜ/-ஆதி3/ ப4க்த/ வரது3னிகி/ (ஜய)
யரசன்/ முதலான/ தொண்டருக்கு/ அருள்வோனுக்கு/ ஜய மங்களம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - மந்தா3கினீ - மந்தாகினி - கங்கையின் மற்றொரு பெயர்

2 - மந்தா3 - மந்தார தரு - பாற்கடல் கடைந்த போது தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றாகிய, விரும்பியதருளும் வானோர் தரு.

Top

விளக்கம்
3 - மௌனி ராஜ ராஜ - இதனை, 'மௌனி ராஜ' மற்றும் 'ராஜ' என்றோ, 'மௌனி' மற்றும் 'ராஜ ராஜ' என்றோ பொருள் கொள்ளலாம். முதலிற் கூறிய முறையில் இங்கு பொருள் கொள்ளப்பட்டது. 'மௌனி ராஜ' என்பதற்கு 'வால்மீகி' என்றும் பொருள் கொள்ளலாம்.

4 - 3ஜ ராஜ - கரியரசன் - ஐந்தாவது சரணத்திலும், இதே சொல் வருகின்றது. ஆனால், இதற்கு வேறு ஏதும் பொருள் கொள்வதற்கு இடமில்லை.

புவியின் மகள் - சீதை
மென் காற்றுண்போன் - பாம்பு - சேடனைக் குறிக்கும்
பிறைசூடி - சிவன்
கரியரசன் - கஜேந்திரன்

Top


Updated on 18 Dec 2010