Showing posts with label Innaallu Daya. Show all posts
Showing posts with label Innaallu Daya. Show all posts

Wednesday, June 3, 2009

தியாகராஜ கிருதி - இன்னாள்ளு த3ய - ராகம் நாராயண கௌ3ள - Innaallu Daya - Raga Narayana Gaula

பல்லவி
இன்னாள்ளு 13ய ராகுன்ன வைனமேமி
இபுடை3ன தெலுபவய்ய

அனுபல்லவி
2சின்ன நாடனுண்டி3 நின்னே கானி
நேனன்யுல நம்மிதினா ஓ 3ராம (இன்னாள்ளு)

சரணம்
சரணம் 1
அல நாடு3 தரணி ஸுதார்தினி தீர்பனு
வெலஸி நில்வக3 லேதா3 அதி3யு கா3
3லமு ஜூப லேதா3 வானி
நேரமுலகு தாளுகொனி செலிமி ஜேஸி
பத3முல 44க்தினீயக3 லேதா3 நாயந்து3 நீகி(ன்னாள்ளு)


சரணம் 2
4ன க3ஜாஸ்1வமுலு தனகு கலுக3 ஜேயு-
மனி நே நின்னடி3கி3தினா இங்க நே
கனகமிம்மனினானா ஸ்ரீ ராம நா
மனஸுன நினு குல த4னமுக3
ஸம்ரக்ஷணமு ஜேஸிதி கானி மரசிதினா (இன்னாள்ளு)


சரணம் 3
5தல்லி தண்ட்3ருலன்ன தம்முலு நீவனி
உல்லமு ரஞ்ஜில்ல பெத்33லதோனு
கல்லலாட3க மொல்ல ஸுமமுல நீ
சல்லனி 6பத3முல கொல்லலாடு3சு வெத3
சல்லிதி கானி த்யாக3ராஜுனிபை நீகி(ன்னாள்ளு)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா!
  • என்னிடமுனக்கு இத்தனை நாள் தயை வாராதிருக்கும் விவரமென்ன? இப்போழ்தாவது தெரிவியுமய்யா


  • சிறு வயது முதலே உன்னையேயன்றி நான் மற்றவரை நம்பினேனா?


    • அன்று பரிதி மைந்தனின் துயர் தீர்ப்பதற்கு, ஒளிர்ந்து நிற்கவில்லையா?

    • அஃதன்றி, வல்லமையைக் காட்டவில்லையா?

    • அவனுடைய தவறுகளைப் பொறுத்து, தோழமை கொண்டு, திருவடிகளின் பற்றினையருளவில்லையா?


    • செல்வம், யானை, குதிரைகள் தனக்குண்டாகச் செய்வாயென நானுன்னை வேண்டினேனா?

    • மேலும், நான் பொன் வேண்டினேனா?

    • எனது மனத்தினிலுன்னை குலச் செல்வமாகப் பாதுகாத்தேனேயன்றி, மறந்தேனா?


    • தாய், தந்தையர், அண்ணன், தம்பியர் நீயென உள்ளம் களிக்க,

    • பெரியோரிடம் பொய் பகராது,

    • முல்லை மலர்களை, உனது குளிர்ந்த திருவடிகளைக் கொள்ளை கொண்டு, தூவினேனன்றோ?


  • தியாகராசன் மீதுனக்கு இத்தனை நாள் தயை வாராதிருக்கும் விவரமென்ன? இப்போழ்தாவது தெரிவியுமய்யா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ளு/ த3ய/ ராக/-உன்ன/ வைனமு/-ஏமி/
இத்தனை நாள்/ தயை/ வாராது/ இருக்கும்/ விவரம்/ என்ன/

இபுடை3ன/ தெலுபு/-அய்ய/
இப்போழ்தாவது/ தெரிவியும்/ அய்யா/


அனுபல்லவி
சின்ன/ நாடனு/-உண்டி3/ நின்னே/ கானி/
சிறு/ வயது/ முதலே/ உன்னையே/ யன்றி/

நேனு/-அன்யுல/ நம்மிதினா/ ஓ/ ராம/ (இன்னாள்ளு)
நான்/ மற்றவரை/ நம்பினேனா/ ஓ/ இராமா/


சரணம்
சரணம் 1
அல நாடு3/ தரணி/ ஸுத/-ஆர்தினி/ தீர்பனு/
அன்று/ பரிதி/ மைந்தனின்/ துயர்/ தீர்ப்பதற்கு/

வெலஸி/ நில்வக3 லேதா3/ அதி3யு/ கா3க/
ஒளிர்ந்து/ நிற்கவில்லையா/ அஃது/ அன்றி/

3லமு/ ஜூப லேதா3/ வானி/
வல்லமையை/ காட்டவில்லையா/ அவனுடைய/

நேரமுலகு/ தாளுகொனி/ செலிமி/ ஜேஸி/
தவறுகளை/ பொறுத்து/ தோழமை/ கொண்டு/

பத3முல/ ப4க்தினி/-ஈயக3 லேதா3/ நா-அந்து3/ நீகு/-(இன்னாள்ளு)
திருவடிகளின்/ பற்றினை/ யருளவில்லையா/ என்னிடம்/ உனக்கு/ இத்தனை நாள்...


சரணம் 2
4ன/ க3ஜ/-அஸ்1வமுலு/ தனகு/ கலுக3/ ஜேயுமு/-
செல்வம்/ யானை/ குதிரைகள்/ தனக்கு/ உண்டாக/ செய்வாய்/

அனி/ நே/ நின்னு/-அடி3கி3தினா/ இங்க/ நே/
என/ நான்/ உன்னை/ வேண்டினேனா/ மேலும்/ நான்/

கனகமு/-இம்மு/-அனினானா/ ஸ்ரீ ராம/ நா/
பொன்/ தருவாய்/ என்றேனா (வேண்டினேனா)/ ஸ்ரீ ராமா/ எனது/

மனஸுன/ நினு/ குல/ த4னமுக3/
மனத்தினில்/ உன்னை/ குல/ செல்வமாக/

ஸம்ரக்ஷணமு ஜேஸிதி/ கானி/ மரசிதினா/ (இன்னாள்ளு)
பாதுகாத்தேனே/ யன்றி/ மறந்தேனா/


சரணம் 3
தல்லி/ தண்ட்3ருலு/-அன்ன/ தம்முலு/ நீவு/-அனி/
தாய்/ தந்தையர்/ அண்ணன்/ தம்பியர்/ நீ/ யென/

உல்லமு/ ரஞ்ஜில்ல/ பெத்33லதோனு/
உள்ளம்/ களிக்க/ பெரியோரிடம்/

கல்லலு/-ஆட3க/ மொல்ல/ ஸுமமுல/ நீ/
பொய்/ பகராது/ முல்லை/ மலர்களை/ உனது/

சல்லனி/ பத3முல/ கொல்லலு/-ஆடு3சு/
குளிர்ந்த/ திருவடிகளை/ கொள்ளை/ கொண்டு/

வெத3/ சல்லிதி/ கானி/ த்யாக3ராஜுனிபை/ நீகு/-(இன்னாள்ளு)
விதை/ இறைத்தேன் (தூவினேன்)/ அன்றோ/ தியாகராசன் மீது/ உனக்கு/ இத்தனை நாள்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3ய ராகுன்ன - த3ய ராகுந்த : 'த3ய ராகுந்த' தவறாகும்.

2 - சின்ன நாடனுண்டி3 - சின்ன நாட3னுண்டி3 : 'சின்ன நாடனுண்டி3' சரியான சொல்லாகும்.

3 - ராம (இன்னாள்ளு) - ராம நீகி(ன்னாள்ளு)

4 - 4க்தினீயக3 - ப4க்தீயக3

5 - தல்லி தண்ட்3ருலன்ன - தல்லி தண்ட்3ரியன்ன

6 - பத3முல - பத3மு

Top

மேற்கோள்கள்

விளக்கம்

பரிதி மைந்தன் - சுக்கிரீவன்

Top


Updated on 03 Jun 2009