Showing posts with label Dhanyasi Raga. Show all posts
Showing posts with label Dhanyasi Raga. Show all posts

Saturday, October 23, 2010

தியாகராஜ கிருதி - ஸங்கீ3த ஞானமு - ராகம் த4ன்யாஸி - Sangita Jnanamu - Raga Dhanyasi

பல்லவி
ஸங்கீ3த ஞானமு ப4க்தி வினா
ஸன்-மார்க3மு கலதே3 மனஸா

அனுபல்லவி
1ப்4ரு2ங்கி3 நடேஸ1 ஸமீரஜ க4டஜ
மதங்க3
2நாரதா3து3லுபாஸிஞ்சே (ஸ)

சரணம்
ந்யாயாந்யாயமு 3தெலுஸுனு ஜக3முலு
4மாயா-மயமனி 3தெலுஸுனு து3ர்-கு3ண
காயஜாதி3 ஷட்3-ரிபுல 4ஜயிஞ்சு
கார்யமு 3தெலுஸுனு 4த்யாக3ராஜுனிகி (ஸ)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

  • பிருங்கி முனி, நடேசன், வாயு மைந்தன், குடமுனி, மதங்கர், நாரதர் ஆகியோர் வழிபடும் இசையின் அறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

    • நியாயம், அந்நியாயம் தெரியும்,
    • உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
    • தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும்.

  • தியாகராசனுக்கு இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

    (அல்லது)

    • நியாயம், அந்நியாயம் தெரியும்,
    • உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
    • தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும் தியாகராசனுக்கு.

  • இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸங்கீ3த/ ஞானமு/ ப4க்தி/ வினா/
இசை/ யறிவு/ பக்தி/ யின்றி/

ஸன்மார்க3மு/ கலதே3/ மனஸா/
நன்னெறி/ சேர்க்காதே/ மனமே/


அனுபல்லவி
ப்4ரு2ங்கி3/ நட-ஈஸ1/ ஸமீரஜ/ க4டஜ/
பிருங்கி முனி/ நடேசன்/ வாயு மைந்தன்/ குடமுனி/

மதங்க3/ நாரத3/-ஆது3லு/-உபாஸிஞ்சே/ (ஸ)
மதங்கர்/ நாரதர்/ ஆகியோர்/ வழிபடும்/ இசை...


சரணம்
ந்யாய/-அந்யாயமு/ தெலுஸுனு/ ஜக3முலு/
நியாயம்/ அந்நியாயம்/ தெரியும்/ உலகங்கள்/

மாயா/-மயமு/-அனி/ தெலுஸுனு/ து3ர்/-கு3ண/
மாயை/ மயம்/ என/ தெரியும்/ தீய/ குண/

காயஜ/-ஆதி3/ ஷட்3/-ரிபுல/ ஜயிஞ்சு/
காமம்/ முதலான/ ஆறு/ (உட்)பகைவரை/ வெல்லும்/

கார்யமு/ தெலுஸுனு/ த்யாக3ராஜுனிகி/ (ஸ)
வகை/ தெரியும்/ தியாகராசனுக்கு/ இசை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உபாஸிஞ்சே - உபாஸிஞ்சு.

4 - மாயா-மயமனி - ஜயிஞ்சு - த்யாக3ராஜுனிகி : மாயா-மயமனே - ஜயிஞ்சே - த்யாக3ராஜுனிகே.

Top

மேற்கோள்கள்
1 - ப்4ரு2ங்கி3 - பிருங்கி முனி - சிவனடியார் - வண்டாக மாறி சிவனை வழிபட்டவர் - பிருங்கி-1 and பிருங்கி-2

1 - மதங்க3 - மதங்கர். மதுரை மீனாட்சி, மதங்க முனிவரின் மகள் எனப்படும் - அதனால் அவளுக்கு 'மாதங்கி' என்று பெயர். காளிதாசரின் 'சியாமளா தண்டக'த்திலும் அங்ஙனமே குறிப்பிடப்பட்டுள்ளது - 'மாதங்க கன்யா' (மாதங்கரின் புதல்வி) என்று. வால்மீகி ராமாயணத்தில், வாலியை சபித்தவருக்கும், மதங்கர் என்றே பெயர்.

பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த, 'ப்3ரு2ஹத்3தே3ஸி1' என்ற இசையைப் பற்றிய நூல் இயற்றிய மதங்கரைப் பற்றிய குறிப்பு

1 - ப்4ரு2ங்கி3 ஸமீரஜ க4டஜ மதங்க3 - பிருங்கி முனிவர், அகத்தியர், மதங்கர் மற்றும் அனுமனைப் பற்றி இசைக்கலைக் குறிப்புக்கள் நோக்கவும்

Top

மதங்கர் -
கந்த னால்வகைப் பால மூலிதப்
பிரபந்தங் கள்தன் பெயராற் செய்து
வாயு மதங்கற் குபதே சித்தனன்
அவனனு மற்குமீ ரொன்பா னாகும்
சித்தர் தமக்குஞ் செப்பினன் றானே. ....44

அனுமன் -
அனுமன் விவாதிகள் கருவ மடங்க
அசல முருகக் குண்டகக் கிரியாவெனும்
இராகம் பாடி யடக்கி மேலும்
சன்னிய ராக மாறாயிரஞ் சமைத்ததற்
கனும கடக மெனும்பெய ரணிந்தனன். ....45

Top

பிருங்கி -
நந்தி நாட்டிய நிருத்திய நிருத்தம்
ஒரோ வொன்றையு மிருவகை யுஞற்றி
அவற்றையுங் கஞ்சக் கருவி யாதிய
வாத்திய விலக்கணம் பிருங்கி முனிவர்
உருத்திர கணிகைய ரவர்சுதர்க் குரைத்தனர். ....55

அகத்தியர் -
அகத்திய னவயவ பேதநா லேழனுள்
ஒரோ வொன்றை யிரண்டின் டுஞற்றி
அவற்றை நான்கொடு நந்நான் காக்கிச்
சிவன்சிவை முறையே வொருமையைத் தெரிந்து
ராச சேகர வழுதிக் கிசைத்தனன். ....56

Top

விளக்கம்
3 - தெலுஸுனு - தெரியும் - எல்லா புத்தகங்களிலும் இச்சொல்லுக்கு, 'தியாகராஜருக்குத் தெரியும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கீர்த்தனை, தியாகராஜர், தனது மனதிற்கு அறிவுரையாகக் கூறுவதனால், அங்ஙனம் பொருள் கொள்வது சரியாகாது என்று நான் கருதுகின்றேன். எனினும் இரண்டு விதமாகவும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

நடேசன் - சிவன்
வாயு மைந்தன் - அனுமன்
குடமுனி - அகத்தியர்
மாயைமயம் - தோன்றி மறையும் தன்மை
ஆறு உட்பகைவர் - இச்சை, கோபம், பேராசை, ஈயாமை, செருக்கு, காழ்ப்பு

Top


Updated on 24 Oct 2010

Friday, October 22, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம தா3ஸ - ராகம் த4ன்யாஸி - Sri Rama Dasa - Raga Dhanyasi

பல்லவி
1ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் அன
நீரஜ நேத்ர நீகேல 2ஸந்தே3ஹமு

சரணம்
சரணம் 1
க3ட்டு கான ரானி கு3ண்ட ராம
3பட்டுக தா3ட நீ பேரு தெப்பண்ட (ஸ்ரீ)


சரணம் 2
4காமாதி3 நக்ர பா3த4 தீர்ப
ராமய்ய நீ சேதி சக்ரமு லேதா3 (ஸ்ரீ)


சரணம் 3
சல 5சித்தமனு அலலகு ராம
செலகு3 நீ வாம ஹஸ்தமு வைரியகு3னு (ஸ்ரீ)


சரணம் 4
மத3 மத்ஸரமுலனு க3ஜமுலகு நீ
பத3 6கமலாங்குஸ1 ரேக2 அங்குஸ1மு (ஸ்ரீ)


சரணம் 5
ஸோ1காது3லனு பர்வதமுலகு நீ
கராங்கித வஜ்ர ரேக2 வஜ்ரமு (ஸ்ரீ)


சரணம் 6
அஹமனு ஜட3த்வமணசி ப்3ரோவ
ஸஹஜமௌ நீ சேதி ஸ1ரமுலு லேவா (ஸ்ரீ)


சரணம் 7
7து3ஷ்-கர்மமனு கொண்ட3லெக3ய 8ஸேய
நிஷ்-கல்மஷ 9பவனஜுடு3ண்டு3 10ஸத3ய (ஸ்ரீ)


சரணம் 8
ஜனன மரணமனு ஸுடி3னி நில்ப
க4னமைன நீயாக்3ஞ காத3னு வடி3னி (ஸ்ரீ)


சரணம் 9
ஜாதிகொகரு 11கூடி3னாரமு ப்ரீதி
சேத தெலுஸுகொண்டிமி நாம 11ஸாரமு (ஸ்ரீ)


சரணம் 10
பன்னுக3 ப4வமதி 12கோ4ரமு ராம
நின்னு வினான்ய 12தை3வமுலனு கோரமு (ஸ்ரீ)


சரணம் 11
வர கு3ண ராஜாதி4 ராஜ ராம
பரம பாவன பாலித த்யாக3ராஜ (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! இராமா! இராமைய்யா! தயாளா! நற்பண்புகளோனே! அரசர்க்கரசே! முற்றிலும் புனிதனே! தியாகராசனைப் பேணுவோனே!

  • 'இராமனின் தொண்டருக்கடியவன் நான்' என்றால், உனக்கேன் ஐயம்?

    • கரை காணமுடியாத கடல்; பற்றிக்கொண்டு தாண்டுவதற்கு, உனது பெயர் தெப்பமாம்!
    • இச்சை முதலான முதலைகளின் தொல்லைகளைத் தீர்க்க, உனது கை ஆழியுண்டன்றோ!
    • நிலையற்ற மனமெனும் அலைகளுக்கு, ஒளிரும், உனது இடது கை எதிரியாகும்;
    • செருக்கு, பொறாமையெனும் யானைகளுக்கு உனது கமலத் திருவடியின் வளைந்த கோடுகள் அங்குசமாகும்;
    • துயரங்கள் ஆகியவை எனும் மலைகளுக்கு, உனது கைகளிலுள்ள ஆழ்ந்த கோடுகள் குலிசமாகும்;
    • 'நான்' எனும் அறிவீனத்தையடக்கி, (என்னைக்) காக்க, இயற்கையான உனது கையம்புகளுண்டன்றோ!
    • தீவினைகளெனும் மலைகளைப் பறக்கடிக்க, களங்கமற்ற, வாயு மைந்தன் உண்டு;
    • பிறப்பு இறப்பெனும் சுழலை நிறுத்த, வல்லமைமிகு உனது ஆட்சியன்றோ, காலத்தின் மீது!

    • சாதிக்கொருவர் கூடினோம்; காதலுடன், தெரிந்துகொண்டோம் (உனது) பெயரின் சாரத்தினை;
    • நேர்த்தியான பிறவிக்கடல் மிக்கு கோரமானது; உன்னைத் தவிர மற்ற கடவுளரை வேண்டோம்.


  • 'இராமனின் தொண்டருக்கடியவன் நான்' என்றால், உனக்கேன் ஐயம்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ தா3ஸ/ தா3ஸ:/-அஹம்/ அன/
ஸ்ரீ ராமனின்/ தொண்டருக்கு/ அடியவன்/ நான்/ என்றால்/

நீரஜ/ நேத்ர/ நீகு/-ஏல/ ஸந்தே3ஹமு/
கமல/ கண்ணா/ உனக்கு/ ஏன்/ ஐயம்/


சரணம்
சரணம் 1
க3ட்டு/ கான/ ரானி/ கு3ண்ட/ ராம/
கரை/ காண/ முடியாத/ கடல் (குளம்)/ இராமா/

பட்டுக/ தா3ட/ நீ/ பேரு/ தெப்ப-அண்ட/ (ஸ்ரீ)
பற்றிக்கொண்டு/ தாண்டுவதற்கு/ உனது/ பெயர்/ தெப்பமாம்/


சரணம் 2
காம/-ஆதி3/ நக்ர/ பா3த4/ தீர்ப/
இச்சை/ முதலான/ முதலைகளின்/ தொல்லைகளை/ தீர்க்க/

ராமய்ய/ நீ/ சேதி/ சக்ரமு/ லேதா3/ (ஸ்ரீ)
இராமைய்யா/ உனது/ கை/ ஆழி/ உண்டன்றோ/


சரணம் 3
சல/ சித்தமு/-அனு/ அலலகு/ ராம/
நிலையற்ற/ மனம்/ எனும்/ அலைகளுக்கு/ இராமா/

செலகு3/ நீ/ வாம/ ஹஸ்தமு/ வைரி/-அகு3னு/ (ஸ்ரீ)
ஒளிரும்/ உனது/ இடது/ கை/ எதிரி/ ஆகும்/


சரணம் 4
மத3/ மத்ஸரமுலு/-அனு/ க3ஜமுலகு/ நீ/
செருக்கு/ பொறாமை/ யெனும்/ யானைகளுக்கு/ உனது/

பத3/ கமல/-அங்குஸ1/ ரேக2/ அங்குஸ1மு/ (ஸ்ரீ)
திருவடி/ கமலத்தின்/ வளைந்த/ கோடுகள்/ அங்குசமாகும்/


சரணம் 5
ஸோ1க/-ஆது3லு/-அனு/ பர்வதமுலகு/ நீ/
துயரங்கள்/ ஆகியவை/ எனும்/ மலைகளுக்கு/ உனது/

கர-அங்கித/ வஜ்ர/ ரேக2/ வஜ்ரமு/ (ஸ்ரீ)
கைகளிலுள்ள/ ஆழ்ந்த (வலிய)/ கோடுகள்/ குலிசமாகும்/


சரணம் 6
அஹம்/-அனு/ ஜட3த்வமு/-அணசி/ ப்3ரோவ/
'நான்'/ எனும்/ அறிவீனத்தை/ யடக்கி/ (என்னைக்) காக்க/

ஸஹஜமௌ/ நீ/ சேதி/ ஸ1ரமுலு/ லேவா/ (ஸ்ரீ)
இயற்கையான/ உனது/ கை/ அம்புகள்/ உண்டன்றோ/


சரணம் 7
து3ஷ்-கர்மமு/-அனு/ கொண்ட3லு/-எக3ய ஸேய/
தீவினைகள்/ எனும்/ மலைகளை/ பறக்கடிக்க/

நிஷ்-கல்மஷ/ பவனஜுடு3/-உண்டு3/ ஸத3ய/ (ஸ்ரீ)
களங்கமற்ற/ வாயு மைந்தன்/ உண்டு/ தயாளா/


சரணம் 8
ஜனன/ மரணமு/-அனு/ ஸுடி3னி/ நில்ப/
பிறப்பு/ இறப்பு/ எனும்/ சுழலை/ நிறுத்த/

க4னமைன/ நீ/-ஆக்3ஞ/ காத3னு/ வடி3னி/ (ஸ்ரீ)
வல்லமைமிகு/ உனது/ ஆட்சி (ஆணை)/ யன்றோ/ காலத்தின் மீது/


சரணம் 9
ஜாதிகி/-ஒகரு/ கூடி3னாரமு/ ப்ரீதி சேத/
சாதிக்கு/ ஒருவர்/ கூடினோம்/ காதலுடன்/

தெலுஸுகொண்டிமி/ நாம/ ஸாரமு/ (ஸ்ரீ)
தெரிந்துகொண்டோம்/ (உனது) பெயரின்/ சாரத்தினை/


சரணம் 10
பன்னுக3/ ப4வமு/-அதி/ கோ4ரமு/ ராம/
நேர்த்தியான/ பிறவிக்கடல்/ மிக்கு/ கோரமானது/ இராமா/

நின்னு/ வினா/-அன்ய/ தை3வமுலனு/ கோரமு/ (ஸ்ரீ)
உன்னை/ தவிர/ மற்ற/ கடவுளரை/ வேண்டோம்/


சரணம் 11
வர/ கு3ண/ ராஜ/-அதி4 ராஜ/ ராம/
நற்/ பண்புகளோனே/ அரசர்க்கு/ அரசே/ இராமா/

பரம/ பாவன/ பாலித/ த்யாக3ராஜ/ (ஸ்ரீ)
முற்றிலும்/ புனிதனே/ பேணுவோனே/ தியாகராசனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - தா3ஸோஹம் அன - தா3ஸோஹம்.
2 - ஸந்தே3ஹமு - ஸந்தே3ஹம்.

3 - பட்டுக - பட்டுகோ. இந்த சொல்லுக்கு 'பற்றிக்கொண்டு' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், 'பட்டுக' என்ற சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை.
4 - காமாதி3 - காமாது3லனு.
5 - சித்தமனு அலலகு - சித்தமனு அலலகுனு.
7 - து3ஷ்-கர்மமனு - து3ஷ்-கர்மமுலனு.
8 - ஸேய - ராம.
9 - பவனஜுடு3ண்டு3 - பவனஜுடு3ண்ட3.
11 - கூடி3னாரமு - ஸாரமு : கூடி3னாரம் - ஸாரம்.
12 - கோ4ரமு - தை3வமுலனு கோரமு : கோ4ரம் - தை3வமுலனு கோரம்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் - இதற்கு ஆந்திராவைச் சேர்ந்த 'பத்ராசல ராமதாஸரின் தொண்டன்' என்றும் பொருள் கொள்ளலாம். தியாகராஜர் தமது 'ப்3ரு2ந்தா3வன லோல' என்று தோடி ராக கீர்த்தனையிலும், 'க்ஷீர ஸாக3ர ஸ1யன' என்ற தேவ காந்தாரி ராக கீர்த்தனையிலும் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

6 - அங்குஸ1 ரேக2 - இது (இறைவனின்) கால் கோடுகளையோ அல்லது குலசத்தைப் போன்ற வளைந்த காலின் வடிவத்தினையோ குறிக்கலாம்.

10 - ஸத3ய - இது இறைவனின் அடைமொழியாகக் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை அனுமனைக் குறிப்பதாகவும் ('அனுமன் கருணையோடுள்ளான்' என்று) கொள்ளலாம்.

Top

கரை காணமுடியாத கடல் - உலக வாழ்வெனும் கடல்
இச்சை முதலான - உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, ஈயாமை, செருக்கு, காழ்ப்பு
ஆழி - திருமாலின் சக்கரம்
யானைகளுக்கு - யானைகளை அடக்க
குலிசம் - (இந்திரனின்) வச்சிராயுதம்
(இந்திரன், மலைகளை, குலிசத்தினால் தூளாக்கினான் எனப்படும்)
வாயு மைந்தன் - அனுமன்
நேர்த்தியான - நேர்த்தியாகத் தோற்றமளிக்கும்

Top


Updated on 23 Oct 2010

Tuesday, October 19, 2010

தியாகராஜ கிருதி - ஸ்1யாம ஸுந்த3ராங்க3 - ராகம் த4ன்யாஸி - Syama Sundaranga - Dhanyasi Raga

பல்லவி
ஸ்1யாம ஸுந்த3ராங்க3 ஸகல 1ஸ1க்தியு நீவேரா

அனுபல்லவி
2தாமஸ ரஹித கு3ண ஸாந்த்3ர
த4ரனு வெலயு ராமசந்த்3ர (ஸ்1யாம)

சரணம்
து3ஷ்ட த3னுஜ மத3 விதா3ர ஸி1ஷ்ட ஜன ஹ்ரு2த3ய விஹார
3இஷ்ட தை3வமு நீவேரா இலனு த்யாக3ராஜு வேரா (ஸ்1யாம)


பொருள் - சுருக்கம்
  • கார்வண்ண அழகிய வடிவோனே!
  • தாமத குணமற்ற, நற்பண்புகள் நிறைந்தோனே! புவியில் ஒளிரும் இராமசந்திரா!
  • தீய அவுணர் செருக்கினை அழித்தோனே! அறிஞர் (நல்லொழுக்கத்தோர்) உள்ளத்துறைவோனே!

    • அனைத்து சக்திகளும் நீயே, ஐயா!
    • எனக்குகந்த தெய்வம் நீயே, ஐயா!
    • இங்கு தியாகராசன் (உன்னின்று) வேறா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்1யாம/ ஸுந்த3ர/-அங்க3/ ஸகல/ ஸ1க்தியு/ நீவேரா/
கார்வண்ண/ அழகிய/ வடிவோனே/ அனைத்து/ சக்திகளும்/ நீயே, ஐயா/


அனுபல்லவி
தாமஸ/ ரஹித/ கு3ண/ ஸாந்த்3ர/
தாமத குணம்/ அற்ற/ நற்பண்புகள்/ நிறைந்தோனே/

த4ரனு/ வெலயு/ ராமசந்த்3ர/ (ஸ்1யாம)
புவியில்/ ஒளிரும்/ இராமசந்திரா/


சரணம்
து3ஷ்ட/ த3னுஜ/ மத3/ விதா3ர/ ஸி1ஷ்ட ஜன/ ஹ்ரு2த3ய/ விஹார/
தீய/ அவுணர்/ செருக்கினை/ அழித்தோனே/ அறிஞர் (நல்லொழுக்கத்தோர்)/ உள்ளத்து/ உறைவோனே/

இஷ்ட/ தை3வமு/ நீவேரா/ இலனு/ த்யாக3ராஜு/ வேரா/ (ஸ்1யாம)
(எனக்கு) உகந்த/ தெய்வம்/ நீயே, ஐயா/ இங்கு/ தியாகராசன்/ (உன்னின்று) வேறா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - தாமஸ ரஹித - தாமத குணம் - முக்குணங்களிலொன்று - இருள்வழி - கடவுள் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். ஆயினும், இவ்விடத்தில், இச்சொல், விசுவாமித்திரர், இராமனுக்கும், இலக்குவனுக்கும் உபதேசித்த, தூக்கம், பசி, தாகம் ஆகிய தாமத குணங்களை வெல்லும் வல்லமை படைத்த, 'ப3லை', 'அதிப3லை' என்ற மந்திரங்களைக் குறிப்பிடலாம். வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 22 நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஸ1க்தியு - சக்திகள் - தெய்வங்களைக் குறிக்கும். தியாகராஜர், இராமனைத் தன் மனதுக்குகந்த தெய்வமாக வழிபட்டாலும், தெய்வங்கள் யாவும், உருவற்ற, பரம்பொருளின் வடிவே என்று அவர் உறுதியாக நம்பியது, அவருடைய பல கீர்த்தனைகளினின்றும் தெரியவருகின்றது.

3 - இஷ்ட தை3வமு - மனதுக்குகந்த தெய்வம். ஒவ்வொருவரும், அவரவர் மனப்பாங்கிற்பேற்ப, குடும்ப வழிமுறைக் கேற்ப, தமது மனதுக்குகந்த தெய்வ வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்கின்றனர். அங்ஙனம், தியாகராஜரின் மனதுக்குகந்த தெய்வம் இராமன்.

Top


Updated on 20 Oct 2010

தியாகராஜ கிருதி - ராமாபி4ராம மனஸு - ராகம் த4ன்யாஸி - Ramaabhirama Manasu - Raga Dhanyasi

பல்லவி
ராமாபி4ராம மனஸு ரஞ்ஜில்ல பல்க ராதா3

அனுபல்லவி
1ஈ மஹினி வெலஸினதே3மி ஸதா3 நாதோ (ரா)

சரணம்
ப3ங்கா3ரு மேடி பான்புபை பா4மா மணி 2ஜானகி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி 3செலுவொந்த3 நின்னு கனி
பொங்கு3சு மல்லெ விருல பூஜிஞ்சு வேள ஸ்ரீ ஹரி
ஸங்கீ3தமு 4பாடு3மனி ஸ்வாமி த்யாக3ராஜுனிதோ (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! களிப்பூட்டுவோனே! அரியே! இறைவா!

  • மனது மகிழப் பேசலாகாதா?

  • இப்புவியில் (நான்) புகழ்பெற்றென்ன? (அல்லது) இப்புவியில் தாங்கள் திகழ்ந்தென்ன?

    • உயர் பொன் மஞ்சத்தின்மீது, (உனது) சிறந்த இல்லாள், சானகி,
    • அலங்கரித்துக்கொண்டு, காதலுடன், உன்னை நோக்கி,
    • பெருமிதத்துடன், மல்லிகைப் பூக்களால் தொழும் வேளை,

  • 'சங்கீதம் பாடு' எனத் தியாகராசனிடம் மனது மகிழக் கூறலாகாதா?

  • எப்பொழுதும், என்னுடன், மனது மகிழப் பேசலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ மனஸு/ ரஞ்ஜில்ல/ பல்க ராதா3/
இராமா/ களிப்பூட்டுவோனே/ மனது/ மகிழ/ பேசலாகாதா/


அனுபல்லவி
ஈ/ மஹினி/ வெலஸினதி3/-ஏமி/ ஸதா3/ நாதோ/ (ரா)
இந்த/ புவியில்/ (நான்) புகழ்பெற்று (தாங்கள்) (திகழ்ந்து)/ என்ன/ எப்பொழுதும்/ என்னுடன்/ இராமா...


சரணம்
ப3ங்கா3ரு/ மேடி/ பான்புபை/ பா4மா/ மணி/ ஜானகி/
பொன்/ உயர்/ மஞ்சத்தின்மீது/ (உனது) இல்லாள்/ சிறந்த/ சானகி/

ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி/ செலுவொந்த3/ நின்னு/ கனி/
அலங்கரித்துக்கொண்டு/ காதலுடன்/ உன்னை/ நோக்கி/

பொங்கு3சு/ மல்லெ/ விருல/ பூஜிஞ்சு/ வேள/ ஸ்ரீ ஹரி/
பெருமிதத்துடன்/ மல்லிகை/ பூக்களால்/ தொழும்/ வேளை/ ஸ்ரீ ஹரி/

ஸங்கீ3தமு/ பாடு3மு/-அனி/ ஸ்வாமி/ த்யாக3ராஜுனிதோ/ (ரா)
'சங்கீதம்/ பாடு/' என/ இறைவா/ தியாகராசனிடம்/ இராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஜானகி - ஸ்ரீ ஜானகி.

3 - செலுவொந்த3 - செலுவொந்த3க3.

4 - பாடு3மனி ஸ்வாமி - பாடு3மனு ஸாமி : 'பாடு3மனி' என்ற சொல்லினால், சரணத்தினை பல்லவியுடன் இணைக்கலாம். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஈ மஹினி வெலஸினதே3மி - புத்தகங்களில், இதற்கு 'தாங்கள் புவியில் அவதரித்தென்ன?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சரணத்தினில், தியாகராஜர், இறைவன் முன்னிலையில் தன்னைப் பாடும்படி உத்திரவிட, இறைவனை வேண்டுகின்றார். அதாவது, தியாகராஜர், மற்றவர்கள் தன் பாடலைக் கேட்டு தன்னை புகழ்வதைக் காட்டிலும், இறைவன் முன்னிலையில், இறைவன் வேண்டுதலுக்கிணங்கி, பாடுவதையே பேறெனக் கருதுகின்றார். எனவே, இதற்கு, 'புவியில் நான் புகழ்பெற்றென்ன?' என்ற பொருள் அதிகம் பொருந்தும். இரண்டு பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Top


Updated on 19 Oct 2010

Monday, October 18, 2010

தியாகராஜ கிருதி - நீ சித்தமு நிஸ்1சலமு - ராகம் த4ன்யாஸி - Ni Chittamu Nischalamu - Raga Dhanyasi

பல்லவி
நீ சித்தமு 1நிஸ்1சலமு
நிர்மலமனி
நின்னே நம்மினானு

அனுபல்லவி
நா சித்தமு வஞ்சன சஞ்சலமனி
நன்னு 2விட3னாட3குமி ஸ்ரீ ராம (நீ)

சரணம்
கு3ருவு 3சில்ல கி3ஞ்ஜ கு3ருவே 4ப்4ரமரமு
கு3ருடே3 பா4ஸ்கருடு3 கு3ருடே3 ப4த்3ருடு3
கு3ருடே3 உத்தம க3தி கு3ருவு நீவனுகொண்டி
5த4ரனு தா3ஸுனி ப்3ரோவ த்யாக3ராஜ நுத (நீ)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசன் போற்றுவோனே!

  • உனது மனம் சலனமற்றது, மாசற்றதென உன்னையே நம்பினேன்.
  • எனது மனம் வஞ்சகமானது, சஞ்சலமானது என என்னை விட்டுவிடாதே.

    • குரு தேற்றாக்கொட்டை;
    • குருவே குளவி;
    • குருவே பகலவன்;
    • குருவே மங்களமானவன்;
    • குருவே உத்தமமான புகல்;

  • குரு நீயெனக் கருதினேன்.

  • புவியில் (இத்)தொண்டனைக் காக்க, உனது மனம் சலனமற்றது, மாசற்றதென உன்னையே நம்பினேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ சித்தமு/ நிஸ்1சலமு/
உனது/ மனம்/ சலனமற்றது/

நிர்மலமு/-அனி/ நின்னே/ நம்மினானு/
மாசற்றது/ என/ உன்னையே/ நம்பினேன்/


அனுபல்லவி
நா/ சித்தமு/ வஞ்சன/ சஞ்சலமு/-அனி/
எனது/ மனம்/ வஞ்சகமானது/ சஞ்சலமானது/ என/

நன்னு/ விட3னு-ஆட3குமி/ ஸ்ரீ ராம/ (நீ)
என்னை/ விட்டுவிடாதே/ ஸ்ரீ ராமா/


சரணம்
கு3ருவு/ சில்ல/ கி3ஞ்ஜ/ கு3ருவே/ ப்4ரமரமு/
குரு/ தேற்றா/ கொட்டை/ குருவே/ குளவி/

கு3ருடே3/ பா4ஸ்கருடு3/ கு3ருடே3/ ப4த்3ருடு3/
குருவே/ பகலவன்/ குருவே/ மங்களமானவன்/

கு3ருடே3/ உத்தம/ க3தி/ கு3ருவு/ நீவு/-அனுகொண்டி/
குருவே/ உத்தமமான/ புகல்/ குரு/ நீயென/ கருதினேன்/

த4ரனு/ தா3ஸுனி/ ப்3ரோவ/ த்யாக3ராஜ/ நுத/ (நீ)
புவியில்/ (இத்)தொண்டனை/ காக்க/ தியாகராசன்/ போற்றுவோனே/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நிஸ்1சலமு நிர்மலமனி - நிர்மலமு நிஸ்1சலமனி.

2 - விட3னாட3குமி - விட3னாட3குமீ.

Top

மேற்கோள்கள்
3 - சில்ல கி3ஞ்ஜ - தேற்றாக் கொட்டை (Botanical name - strychnos potatorum) - நீரைத் தெளிவாக்கும் - சீடனின் மனதைத் தெளிவாக்க குரு.

கபீர் தாசரும் இம்மாதிரியே பாடியுள்ளார் - கபீர் தாசரின் செய்யுட்கள் -

"குரு வண்ணான், சீடன் துணி, கடவுளின் பெயர் சவுக்காரம்;
உறுதியெனும் கல்லினில் துவைக்க, ஒப்பற்ற (வெண்மை) ஒளி தோன்றும்." (15)

தேற்றா மரம் - திருவாரூர் தல விருட்சம்

Top

4 - ப்4ரமரமு - bhramara-kITa-nyAya - குளவி - புழு நியாயம் - "குளவி, தன்னினமல்லாத மற்ற புழுக்களைத் தனது கூட்டிற்குக் கொண்டுவந்து, அவற்றினைக் கொட்டிக் கொட்டி, தன்னினமாக்குமென்பர். அதுபோன்று, 'நானே பிரமம்' (aham brahmAsmi) என்று தியானிப்பதனால், சீவான்மா, பிரமமே ஆகின்றான்."

'குளவி, புழுக்களைக் கொட்டிக் கொட்டித் தன்னினமாக்கும்' என்ற நம்பிக்கை, குளவிகளின் முட்டையிடும் தன்மையினைப் பொருத்து இருக்கலாம். குளவிகள் மற்ற புழுக்களின் முட்டைகளைத் தனது இனத்திற்கு உணவாக்குகின்றது. இது ஆங்கிலத்தில் 'parasitize' எனப்படும். குளவி.

Top

விளக்கம்
5 - த4ரனு தா3ஸுனி ப்3ரோவ - புவியில் இத்தொண்டனைக் காக்க - இங்கு, இதனைப் பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதனை, 'கு3ருவு நீவனுகொண்டி' என்பதுடன் இணைத்து, 'புவியில் இத்தொண்டனைக் காக்க, உன்னை குருவெனக் கருதினேன்' என்றும் பொருள் கொள்ளலாம்.

பகலவன் - மன இருளை நீக்க

Top

Sunday, October 17, 2010

தியாகராஜ கிருதி - த்4யானமே - ராகம் த4ன்யாஸி - Dhyaname - Raga Dhanyasi

பல்லவி
த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே 1மனஸா

அனுபல்லவி
வான நீட முனுக3 முனுக3 லோனி
வஞ்சன த்3ரோஹமனு கர 2போனா (த்4யா)

சரணம்
பர த4ன 3நாரீமணுலனு தூ3ரி
பர நிந்த3ல பர ஹிம்ஸல மீரி
த4ரனு வெலயு ஸ்ரீ ராமுனி கோரி
த்யாக3ராஜு தெலுஸுகொன்ன ராம (த்4யா)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • தியானமே புனித கங்கை நீராடலாகுமே.

    • மழை நீரில் நனைய நனைய, உள்ள, வஞ்சனை, துரோகமெனும் கறைகள் போமோ?

    • பிறர் பொருள், பெண்மணிகளை வெறுத்து,
    • பிறரைத் தூற்றல், பிறரை துன்புறுத்தலை மீறி,
    • புவியில் ஒளிரும் இராமனை வேண்டி,

  • தியாகராசன் தெரிந்துகொண்ட இராம தியானமே புனித கங்கை நீராடலாகுமே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த்4யானமே/ வரமைன/ க3ங்கா3/ ஸ்நானமே/ மனஸா/
தியானமே/ புனித/ கங்கை/ நீராடலாகுமே/ மனமே/


அனுபல்லவி
வான/ நீட/ முனுக3/ முனுக3/ லோனி/
மழை/ நீரில்/ நனைய/ நனைய/ உள்ள/

வஞ்சன/ த்3ரோஹமு/-அனு/ கர/ போனா/ (த்4யா)
வஞ்சனை/ துரோகம்/ எனும்/ கறைகள்/ போமோ/


சரணம்
பர/ த4ன/ நாரீமணுலனு/ தூ3ரி/
பிறர்/ பொருள்/ பெண்மணிகளை/ வெறுத்து/

பர/ நிந்த3ல/ பர/ ஹிம்ஸல/ மீரி/
பிறரை/ தூற்றல்/ பிறரை/ துன்புறுத்தலை/ மீறி/

த4ரனு/ வெலயு/ ஸ்ரீ ராமுனி/ கோரி/
புவியில்/ ஒளிரும்/ ஸ்ரீ ராமனை/ வேண்டி/

த்யாக3ராஜு/ தெலுஸுகொன்ன/ ராம/ (த்4யா)
தியாகராசன்/ தெரிந்துகொண்ட/ இராம/ தியானமே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனஸா - ஓ மனஸா.

2 - போனா - போவுனா.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - நாரீமணுலனு - பெண்மணிகளை - வரியின் முதலில் வரும், 'பர' (பிற) என்ற சொல், 'நாரீமணுலனு' (பெண்மணிகளை) என்ற சொல்லுக்கும் அடைமொழியென்று கருதுகின்றேன். ஆனால், தியாகராஜர், தியானத்திற்கு இடைஞ்சலென, மனைவியையும் சேர்த்து, 'பெண்மணிகளை' என்று பொதுவாகக் கூறுவதாகவும் கொள்ளலாம்

Top


Updated on 18 Oct 2010

தியாகராஜ கிருதி - ஜானகீ நாயக - ராகம் த4ன்யாஸி - Janaki Nayaka - Dhanyasi Raga

பல்லவி
ஜானகீ நாயக நீகு ஜய மங்க3ளம் ந்ரு2ப
1ஸூனு ஸுந்த3ரமுனகு ஸு1ப4 மங்க3ளம் 2ஹரே (ஜா)

சரணம்
சரணம் 1
பா2லமுனகு நீது3 கபோலமுனகு மங்க3ளம்
நீல வர்ண நீ பலு வஜ்ராலமுனகு மங்க3ளம் (ஜா)


சரணம் 2
யௌவனமுனகு சிரு நவ்வுனகு மங்க3ளம்
து3வ்வினயலகல மீதி3 புவ்வுலகு மங்க3ளம் (ஜா)


சரணம் 3
மாடலகு ரத்னால கிரீடமுனகு மங்க3ளம்
நாடக ஸூத்ர தா4ர நீ தேட கண்ட்3லகு மங்க3ளம் (ஜா)


சரணம் 4
பா3ணமுனகு குஸும பா3ண ஜனக மங்க3ளம்
ஜாண தனமுனகு லோக த்ராணமுனகு மங்க3ளம் (ஜா)


சரணம் 5
உங்க3ரமுனகு நீ த்3ரு2ஷ்டாங்க3முனகு மங்க3ளம்
பொங்கு3சு பத3முலனுண்டு3 க3ங்க3குனு மங்க3ளம் (ஜா)


சரணம் 6
நீ கு3ண ஜாலமுனகு நித்ய ஸு1ப4 மங்க3ளம்
நாக3 ஸ1யன பாலித த்யாக3ராஜ மங்க3ளம் (ஜா)


பொருள் - சுருக்கம்
  • நீல வண்ணா!
  • (உலக) நாடக சூத்திரதாரி!
  • மலர் வில்லோனை ஈன்றோனே!
  • அரவணையோனே! தியாகராசனைப் பேணுவோனே!

  • ஓ ஜானகி மணாளா! உனக்கு ஜய மங்களம்!
  • (தசரத) மன்னன் மகனின் எழிலுக்கு சுப மங்களம்!

    • நெற்றிக்கு, உனது கன்னங்களுக்கு மங்களம்!
    • உனது பற்கள் வைரங்களுக்கு மங்களம்!

    • இளமைக்கு, புன்னகைக்கு மங்களம்!
    • வாரிய சுருளல்கள் மீதான மலர்களுக்கு மங்களம்!

    • சொற்களுக்கு, இரத்தின மகுடத்திற்கு மங்களம்!
    • உனது தெளிந்த கண்களுக்கு மங்களம்!

    • அம்புகளுக்கு மங்களம்!
    • அறிவுக் கூர்மைக்கு, உலகைக் காக்கும் திறனுக்கு மங்களம்!

    • கணையாழிக்கு, உனது புலப்படும் உறுப்புகளுக்கு மங்களம்!
    • களித்து, உனது திருவடியிலுள்ள கங்கைக்கும் மங்களம்!


  • உனது பண்புக் குவியலுக்கு என்றென்றும் நன்மங்களம்!

  • ஓ ஜானகி மணாளா! உனக்கு ஜய மங்களம்!
  • (தசரத) மன்னன் மகனின் எழிலுக்கு சுப மங்களம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜானகீ/ நாயக/ நீகு/ ஜய/ மங்க3ளம்/ ந்ரு2ப/
ஜானகி/ மணாளா/ உனக்கு/ ஜய/ மங்களம்/ (தசரத) மன்னன்/

ஸூனு/ ஸுந்த3ரமுனகு/ ஸு1ப4/ மங்க3ளம்/ ஹரே/ (ஜா)
மகனின்/ எழிலுக்கு/ சுப/ மங்களம்/ ஓ/ ஜானகி...


சரணம்
சரணம் 1
பா2லமுனகு/ நீது3/ கபோலமுனகு/ மங்க3ளம்/
நெற்றிக்கு/ உனது/ கன்னங்களுக்கு/ மங்களம்/

நீல/ வர்ண/ நீ/ பலு/ வஜ்ராலமுனகு/ மங்க3ளம்/ (ஜா)
நீல/ வண்ணா/ உனது/ பற்கள்/ வைரங்களுக்கு/ மங்களம்/


சரணம் 2
யௌவனமுனகு/ சிரு நவ்வுனகு/ மங்க3ளம்/
இளமைக்கு/ புன்னகைக்கு/ மங்களம்/

து3வ்வின/-அலகல/ மீதி3/ புவ்வுலகு/ மங்க3ளம்/ (ஜா)
வாரிய/ சுருளல்கள்/ மீதான/ மலர்களுக்கு/ மங்களம்/


சரணம் 3
மாடலகு/ ரத்னால/ கிரீடமுனகு/ மங்க3ளம்/
சொற்களுக்கு/ இரத்தின/ மகுடத்திற்கு/ மங்களம்/

நாடக/ ஸூத்ர/ தா4ர/ நீ/ தேட/ கண்ட்3லகு/ மங்க3ளம்/ (ஜா)
(உலக) நாடக/ சூத்திர/ தாரி/ உனது/ தெளிந்த/ கண்களுக்கு/ மங்களம்!


சரணம் 4
பா3ணமுனகு/ குஸும/ பா3ண/ ஜனக/ மங்க3ளம்/
அம்புகளுக்கு/ மலர்/ வில்லோனை/ ஈன்றோனே/ மங்களம்/

ஜாண தனமுனகு/ லோக/ த்ராணமுனகு/ மங்க3ளம்/ (ஜா)
அறிவுக் கூர்மைக்கு/ உலகை/ காக்கும் திறனுக்கு/ மங்களம்/


சரணம் 5
உங்க3ரமுனகு/ நீ/ த்3ரு2ஷ்ட/-அங்க3முனகு/ மங்க3ளம்/
கணையாழிக்கு/ உனது/ புலப்படும்/ உறுப்புகளுக்கு/ மங்களம்/

பொங்கு3சு/ பத3முலனு/-உண்டு3/ க3ங்க3குனு/ மங்க3ளம்/ (ஜா)
களித்து/ உனது/ திருவடியில்/ உள்ள/ கங்கைக்கும்/ மங்களம்/


சரணம் 6
நீ/ கு3ண/ ஜாலமுனகு/ நித்ய/ ஸு1ப4/ மங்க3ளம்/
உனது/ பண்பு/ குவியலுக்கு/ என்றென்றும்/ நன்/ மங்களம்/

நாக3/ ஸ1யன/ பாலித/ த்யாக3ராஜ/ மங்க3ளம்/ (ஜா)
அரவு/ அணையோனே/ பேணுவோனே/ தியாகராசனை/ மங்களம்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸூனு - ஸூன.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஹரே - இச்சொல், 'ஓ' என்று விளிப்பதாகும். ஆனால், இச்சொல்லுக்கு 'அரியே' என்றும் பொருள் கொள்ளலாம்.

நாடக சூத்திரதாரி - உலகமெனும் நாடகத்தினை இயக்குவோன்

Top


Updated on 17 Oct 2010

Saturday, October 16, 2010

தியாகராஜ கிருதி - எந்து3 பா3யரா - ராகம் த4ன்யாஸி - Endu Baayaraa - Raga Dhanyasi

பல்லவி
எந்து3 பா3யரா த3ய இன குல 1திலகா த3ய (எ)

சரணம்
சரணம் 1
இந்து3 வத3ன குந்த3 ரத3ன மந்த3ர த4ர நீ த3ய (எ)


சரணம் 2
ஸா1ந்த பூ4ஷ ப4க்த போஷ ஸ1ரணு ஸே1ஷ ஸா1யி (எ)


சரணம் 3
ஸ்1ரித ஸ1ரண்ய ஸுர வரேண்ய க்ரு2த ஸு-புண்ய த4ன்ய த3ய (எ)


சரணம் 4
நாக3 ராஜ த4ர நுதாஜ த்யாக3ராஜ 2வரதா3 த3ய (எ)


பொருள் - சுருக்கம்
  • பரிதி குலத்திலகமே!
  • மதி முகத்தோனே! முல்லைப் பற்களோனே! மந்தர மலையைச் சுமந்தோனே!
  • மனவமைதியை அணிவோனே! தொண்டரைப் பேணுவோனே! அரவணைத் துயில்வோனே!
  • சார்ந்தோர் புகலே! வானோர் வணங்கத் தக்கோனே! நல்வினை செய்தோருக்குப் பேறருள்வோனே!
  • அரவரசனையணிவோன் போற்றும், பிறவாதவனே! தியாகராசனுக்கருள்வோனே!

    • உனதருள் எங்கு போனதய்யா?
    • நீயே புகல்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3/ பா3யரா/ த3ய/ இன/ குல/ திலகா/ த3ய/ (எ)
எங்கு/ போனதய்யா/ அருள்/ பரிதி/ குலத்திலகமே/ அருள்/ (எங்கு)


சரணம்
சரணம் 1
இந்து3/ வத3ன/ குந்த3/ ரத3ன/ மந்த3ர/ த4ர/ நீ/ த3ய/ (எ)
மதி/ முகத்தோனே/ முல்லை/ பற்களோனே/ மந்தர மலையை/ சுமந்தோனே/ உனது/ அருள்/ எங்கு...


சரணம் 2
ஸா1ந்த/ பூ4ஷ/ ப4க்த/ போஷ/ ஸ1ரணு/ ஸே1ஷ/ ஸா1யி/ (எ)
மனவமைதியை/ அணிவோனே/ தொண்டரை/ பேணுவோனே/ (நீயே) புகல்/ அரவணை/ துயில்வோனே/


சரணம் 3
ஸ்1ரித/ ஸ1ரண்ய/ ஸுர/ வரேண்ய/ க்ரு2த/ ஸு-புண்ய/ த4ன்ய/ த3ய/ (எ)
சார்ந்தோர்/ புகலே/ வானோர்/ வணங்கத் தக்கோனே/ செய்தோருக்கு/ நல்வினை/ பேறருள்வோனே/ அருள்/ எங்கு...


சரணம் 4
நாக3/ ராஜ/ த4ர/ நுத/-அஜ/ த்யாக3ராஜ/ வரதா3/ த3ய/ (எ)
அரவு/ அரசனை/ யணிவோன்/ போற்றும்/ பிறவாதவனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ அருள்/ எங்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - திலகா - திலக.

2 - வரதா3 - வரத3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
மனவமைதியை அணிவோனே - மனவமைதியே அணிகலனாக,
அரவரசன் - சேடன்
அரவரசனை அணிவோன் - சிவன்

Top


Updated on 16 Oct 2010