Saturday, February 19, 2011

தியாகராஜ கிருதி - ஏமனி நெர நம்மு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Emani Nera Nammu - Raga Saurashtram - Nauka Charitram

பல்லவி
ஏமனி நெர நம்முகொந்து3மு க்ரு2ஷ்ணா
எந்து3கிந்த வாது3

சரணம்
சரணம் 1
ஜலகமாடு3 வேள 1வலுவலு தா3சி
மம்மலயிம்பக3 லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 2
முதி3தல ரம்மனி திலகமுலிடி3 பண்ட
மோவி நொக்க லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 3
முனு நீவு 2வென்னனாரகி3ஞ்சி தருணுல
மோமுன 3பூஸி போ-லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 4
வதி3னெகா3ரி சந்த3முன வச்சி பாவட3
வத3லிஞ்சி போ-லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 5
தொ3ரிகிதிவனி சாடி3 செப்ப போதே தல்லி
உரமுனனுண்ட3 லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 6
காமிஞ்சி 4யக்3ஞ பத்னுலு வேட33 வேணு
கா3னமொனர்ப லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 7
ஆ நாடு3 5பொங்க3லி நீகிடி3 கொன்னாள்ளு
6வானனுண்ட3 லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


சரணம் 8
4ரனு த்யாக3ராஜ வினுதுனி பலுகுலு
தப்பி போவன லேதா3 க்ரு2ஷ்ணா (ஏ)


பொருள் - சுருக்கம்
  • கண்ணா!

  • என்னவென்று முழுதாக நம்பிக்கொள்வோம்?
  • எதற்கித்தனை வாது?

    • நீராடும்போது, துணிகளை யொளித்து, எம்மை அலையவைக்கவில்லையா?
    • பெண்களை வரச்சொல்லி, திலகங்களிட்டு, பற்களினால் (அவர்) உதடுகளைக் கடிக்கவில்லையா?
    • முன்பு, நீ வெண்ணை யுண்டு, பெண்களின் முகத்தில் பூசிப் போகவில்லையா?
    • மைத்துனி மாதிரி வந்து, பாவாடையை அவிழ்த்துப் போகவில்லையா?
    • அகப்பட்டாயென, கோள் சொல்லப்போனால், தாயின் மடியிலிருக்கவில்லையா?
    • ஆசைப்பட்டு, அந்தணர்கள் மனைவியர் வேண்ட, குழல் இசைக்கவில்லையா?
    • அன்று பொங்கல் உனக்கிட, சில நாட்கள் (விடா) மழை இருக்கவில்லையா?
    • புவியில், தியாகராசன் போற்றுவோனின் சொற்கள் தப்பிப் போகாதெனவில்லையா?


  • என்னவென்று முழுதாக நம்பிக்கொள்வோம்?
  • எதற்கித்தனை வாது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-அனி/ நெர/ நம்முகொந்து3மு/ க்ரு2ஷ்ணா/
என்ன/ என்று/ முழுதாக/ நம்பிக்கொள்வோம்/ கண்ணா/

எந்து3கு/-இந்த/ வாது3/
எதற்கு/ இத்தனை/ வாது/


சரணம்
சரணம் 1
ஜலகமு/-ஆடு3/ வேள/ வலுவலு/ தா3சி/ மம்மு/-
நீர்/ ஆடும்/ போது/, துணிகளை/ யொளித்து/ எம்மை/

அலயிம்பக3 லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
அலையவைக்கவில்லையா/ கண்ணா/


சரணம் 2
முதி3தல/ ரம்மு/-அனி/ திலகமுலு/-இடி3/ பண்ட/
பெண்களை/ வர/ சொல்லி/ திலகங்கள்/ இட்டு/ பற்களினால்/

மோவி/ நொக்க லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
(அவர்) உதடுகளை/ கடிக்கவில்லையா/ கண்ணா/


சரணம் 3
முனு/ நீவு/ வென்னனு/-ஆரகி3ஞ்சி/ தருணுல/
முன்பு/ நீ/ வெண்ணை/ யுண்டு/ பெண்களின்/

மோமுன/ பூஸி/ போ-லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
முகத்தில்/ பூசி/ போகவில்லையா/ கண்ணா/


சரணம் 4
வதி3னெகா3ரி/ சந்த3முன/ வச்சி/ பாவட3/
மைத்துனி/ மாதிரி/ வந்து/ பாவாடையை/

வத3லிஞ்சி/ போ-லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
அவிழ்த்து/ போகவில்லையா/ கண்ணா/


சரணம் 5
தொ3ரிகிதிவி/-அனி/ சாடி3/ செப்ப/ போதே/ தல்லி/
அகப்பட்டாய்/ என/ கோள்/ சொல்ல/ போனால்/ தாயின்/

உரமுனனு/-உண்ட3 லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
மடியில்/ இருக்கவில்லையா/ கண்ணா/


சரணம் 6
காமிஞ்சி/ யக்3ஞ/ பத்னுலு/ வேட33/ வேணு/
ஆசைப்பட்டு/ அந்தணர்கள்/ மனைவியர்/ வேண்ட/ குழல்/

கா3னமு-ஒனர்ப லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
இசைக்கவில்லையா/ கண்ணா/


சரணம் 7
ஆ நாடு3/ பொங்க3லி/ நீகு/-இடி3/ கொன்னாள்ளு/
அன்று/ பொங்கல்/ உனக்கு/ இட/ சில நாட்கள்/

வான/-உண்ட3 லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
(விடா) மழை/ இருக்கவில்லையா/ கண்ணா/


சரணம் 8
4ரனு/ த்யாக3ராஜ/ வினுதுனி/ பலுகுலு/
புவியில்/ தியாகராசன்/ போற்றுவோனின்/ சொற்கள்/

தப்பி/ போவு/-அன லேதா3/ க்ரு2ஷ்ணா/ (ஏ)
தப்பி/ போகாது/ எனவில்லையா/ கண்ணா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், ஒவ்வொரு சரணத்திலும், கடைசியில், 'க்ரு2ஷ்ணா' என்ற சொல் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சில புத்தகங்களில், இந்த சொல் காணப்படவில்லை.

3 - பூஸி போ-லேதா3 - பூய லேதா3.

Top

மேற்கோள்கள்
1 - வலுவலு தா3சி - துணிகளை ஒளித்து. பாகவத புராணம் 10.22 நோக்கவும்.

2 - வென்னனாரகி3ஞ்சி - வெண்ணை யுண்டு. பாகவத புராணம் 10.8 நோக்கவும்.

4 - யக்3ஞ பத்னுலு - அந்தணர்கள் மனைவியர் - பாகவத புராணம் 10.23 நோக்கவும்.

6 - வானனுண்ட3 லேதா3 - விடா மழை யிருக்கவில்லையா? - பாகவத புராணம் 10.24 மற்றும் 10.25 நோக்கவும்.

பாகவத புராணம் - ஆங்கில மொழிபெயர்ப்பு.

Top

விளக்கம்
5 - பொங்க3லி - வழிபாட்டினில், கடவுளர்க்கு இடப்படும் படையல்.

இப்பாடல், 'நௌக சரித்ரம்' 'ஓடக்கதை' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். ஆய்ச்சியர், கண்ணை நம்பாது, இப்பாடலில், அவனுடைய பல குறும்புகளை விவரிக்கின்றனர். இப்பாடலின் பல்லவி, எல்லா ஆய்ச்சியரும் பாடுவதாகவும், சரணம் ஒவ்வொன்றும் ஒரு ஆய்ச்சி பாடுவதாகவும் அமைந்துள்ளது.

தியாகராசன் போற்றுவோன் - கண்ணன்

Top


Updated on 19 Feb 2011

1 comment:

Unknown said...

மிகவும் மகிழ்ச்சி. சீரிய பணி.வாழ்த்துகள்.