கர்மமே 1ப3லவந்தமாயா தல்லி
2காயாரோஹண ஜாயா
அனுபல்லவி
நிர்மலமகு3 நாக3 புரமுன நெலகொன்ன
3நீலாயதாக்ஷி ஸகல லோக ஸாக்ஷி (க)
சரணம்
சரணம் 1
த4ரனு த4னிகுல கோரினா நா
பரிதாபமுல் தீர்ப லேரைரியனி
ஸரகு3ன நே ப3யலு-தே3ரி வச்சி
பரம பாவனி நீ ஸன்னிதி4 4ஜேரினா (க)
சரணம் 2
5வாரிதி4 மதி3 க3ர்விஞ்சியீ
வஸுத4கு தா ரானெஞ்சி நின்னு
ஸாரெகு கனி 6தல வஞ்சியுண்டு3
தீ4ர-தனமு கல்கு3 நினு 7பொட3கா3ஞ்சினா (க)
சரணம் 3
காஸாஸ லேனி நா மதி3கி நீ
8கருணயே த4னமனி பலிகி
நிண்டா3ஸதோ வச்சி ஸன்னிதி4கி நிஜ
தா3ஸுடை3ன ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (க)
பொருள் - சுருக்கம்
- தாயே! காயாரோகணர் இல்லாளே!
- தூய்மையான நாகபுரத்தில் நிலைபெற்ற கருந்தடங்கண்ணீ! அனைத்துலக சாட்சியே!
- முற்றிலும் புனிதமானவளே!
- ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா?
- புவியில், செல்வந்தரைக் கோரினாலும், எனது பரிதாபத்தினைத் தீர்க்க இயலாரென,
- உடனே, நான் புறப்பட்டு வந்து,
- புவியில், செல்வந்தரைக் கோரினாலும், எனது பரிதாபத்தினைத் தீர்க்க இயலாரென,
- உனது சன்னிதி யடைந்தாலும், ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா?
- வாரிதியோன், மதி செருக்குற்று, இந்த நிலத்துள் தான் புக எண்ணி,
- உன்னை எப்போழ்தும் கண்டு, தலை தாழ்த்தியிருக்கும், தீரத்தனமுடைத்த,
- வாரிதியோன், மதி செருக்குற்று, இந்த நிலத்துள் தான் புக எண்ணி,
- உன்னை தரிசித்தாலும், ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா?
- பணத்தாசை இல்லாத எனதுள்ளத்திற்கு, உனது கருணையே செல்வமென்று உரைத்து,
- நிரம்ப ஆசையுடன் வந்து சன்னிதிக்கு,
- பணத்தாசை இல்லாத எனதுள்ளத்திற்கு, உனது கருணையே செல்வமென்று உரைத்து,
- உண்மைத் தொண்டனாகிய இத்தியாகராசனுக்கு ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கர்மமே/ ப3லவந்தமு/-ஆயா/ தல்லி/
ஊழ்வினையே/ வலுக்கட்டாயம்/ ஆனதா/ தாயே/
காயா-ஆரோஹண/ ஜாயா/
காயாரோகணர்/ இல்லாளே/
அனுபல்லவி
நிர்மலமகு3/ நாக3/ புரமுன/ நெலகொன்ன/
தூய்மையான/ நாக/ புரத்தில்/ நிலைபெற்ற/
நீல-ஆயத-அக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (க)
கருந்தடங்கண்ணீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/
சரணம்
சரணம் 1
த4ரனு/ த4னிகுல/ கோரினா/ நா/
புவியில்/ செல்வந்தரை/ கோரினாலும்/ எனது/
பரிதாபமுல்/ தீர்ப/ லேரைரி/-அனி/
பரிதாபத்தினை/ தீர்க்க/ இயலார்/ என/
ஸரகு3ன/ நே/ ப3யலு-தே3ரி/ வச்சி/
உடனே/ நான்/ புறப்பட்டு/ வந்து/
பரம/ பாவனி/ நீ/ ஸன்னிதி4/ ஜேரினா/ (க)
முற்றிலும்/ புனிதமானவளே/ உனது/ சன்னிதி/ யடைந்தாலும்/ ஊழ்வினையே...
சரணம் 2
வாரிதி4/ மதி3/ க3ர்விஞ்சி/-ஈ/
வாரிதியோன்/ மதி/ செருக்குற்று/ இந்த/
வஸுத4கு/ தா/ ரானு/-எஞ்சி/ நின்னு/
நிலத்துள்/ தான்/ புக/ எண்ணி/ உன்னை/
ஸாரெகு/ கனி/ தல/ வஞ்சி/-உண்டு3/
எப்போழ்தும்/ கண்டு/ தலை/ தாழ்த்தி/ யிருக்கும்/
தீ4ர-தனமு/ கல்கு3/ நினு/ பொட3கா3ஞ்சினா/ (க)
தீரத்தனம்/ உடைத்த/ உன்னை/ தரிசித்தாலும்/ ஊழ்வினையே...
சரணம் 3
காஸு-ஆஸ/ லேனி/ நா/ மதி3கி/ நீ/
பணத்தாசை/ இல்லாத/ எனது/ உள்ளத்திற்கு/ உனது/
கருணயே/ த4னமு/-அனி/ பலிகி/
கருணையே/ செல்வம்/ என்று/ உரைத்து/
நிண்டு3/-ஆஸதோ/ வச்சி/ ஸன்னிதி4கி/ நிஜ/
நிரம்ப/ ஆசையுடன்/ வந்து/ சன்னிதிக்கு/ உண்மை/
தா3ஸுடை3ன/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (க)
தொண்டனாகிய/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ ஊழ்வினையே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப3லவந்தமாயா - ப3லவந்தமாயெ : 'ப3லவந்தமாயெ' என்பதற்கு 'வலுக்கட்டாயமானது' என்று பொருளாகும். சரணங்களில் கூறியவற்றை நோக்குகையில், தியாகராஜர், 'வலுக்கட்டாயமானதா?' என்று தாயிடம் கேட்பதாகவே பொருள் கொள்ளவேண்டும். எனவே, 'ப3லவந்தமாயெ' என்பது பொருந்தாது.
4 - ஜேரினா - ஜேரி நா : பிற்குறிப்பிட்ட முறையில், 'நா' (எனது) என்பதனைப் பல்லவியுடன் இணைப்பதாகும். அப்படிச் செய்தால், 'ஜேரி' (சேர்ந்து) என்பதுடன் சரணத்தின் பொருள் நிறைவுறாது இருக்கின்றது. பொருள் நிறைவுற, 'சேர்ந்தாலும்' - 'ஜேரினா' என்றுதான் இருக்கவேண்டும்.
Top
7 - பொட3கா3ஞ்சினா - பொட3கா3ஞ்சி நா : மேலே கூறியது போன்று, 'நா' (எனது) என்பதனைப் பல்லவியுடன் இணைத்தால், சரணத்தின் பொருள் நிறைவுறாது இருக்கின்றது. எனவே 'தரிசித்தாலும்' - 'பொட3கா3ஞ்சினா' என்றுதான் இருக்கவேண்டும்.
அப்படியே பொருள் கொள்ளும்போதும், இச்சரணத்தில், இதற்கு முன் வரும், 'கனி' (கண்டு) என்ற சொல்லினால், இச்சரணத்திற்கு சரிவரப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. மேலும், இந்த சரணத்தினைப் பல்லவியுடன் இணைத்து, 'தரிசித்தாலும் ஊழ்வினை வலுக்கட்டாயமானதா?' என்று பொருள் கொண்டால், கடல், தாயை தரிசித்தபின்னும், எல்லையைக் கடந்து, நகருள் புகுந்ததாகத் தான் பொருள்படும்.(குறிப்பிட்ட கோயில் கடற்கரையில் உள்ளது).
8 - கருணயே - கருணே.
Top
மேற்கோள்கள்
2 - காயாரோஹண - 'காயாரோஹணத் தலம்' என்பதற்கு, 'ஊழியின் போது, அனைத்துயிர்களும் சிவனுடன் ஐக்கியமாகும் தலம்' என்று பொருளாகும். இச்சொல், குஜராத் மாநிலத்தில் தோன்றிய, 'லகுலிச பாசுபத சைவ சமய'த்துடன் இணைந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த சமயம், தமிழ்நாட்டில், மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் விரிவாகப் பரவியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இன்றைய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 'பரோடா' (வடோதரா) அருகில், 'கார்வான்' என்ற ஊரில், 'காயாரோஹண சுவாமி' ஆலயம் உள்ளது. 'காயாரோஹணம்' பற்றிய வரலாறுக் குறிப்பும், 'லகுலிஸ சைவ சமயம்' பற்றிய குறிப்பும் நோக்கவும்.
3 - நீலாயதாக்ஷி - கருந்தடங்கண்ணி - 'நாக புரம்' எனப்படும் நாகப்பட்டினம் கோயில்.
Top
விளக்கம்
5 - வாரிதி4 மதி3 க3ர்விஞ்சி - கடலரசன் செருக்குற்று - நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதி, கடலரிப்புக்குப் பெயர் போனது. 2004 ஆண்டின் சுனாமியினால் நாகப்பட்டினம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதற்குமுன், நாகப்பட்டினத்தை யடுத்த 'பூம்புகார்' என்ற சோழர் தலைநகரத்தினை, கடல் கொண்டதாக வரலாறு கூறும். தியாகராஜர், இங்கு விவரிப்பது எந்த காலத்தினைச் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரியவில்லை. ஆனால், இரண்டாவது சரணத்தில், தியாகராஜர் கூறியதை நோக்குகையில், கடல், கோயிலைத் தாண்டி, நகருள் புகுந்ததாகத் தெரிகின்றது.
Top
6 - தல வஞ்சியுண்டு3 - தலை தாழ்த்தியிருக்கும் - பெண்கள், தலை தாழ்த்துவது, பொதுவாக, நாணத்தினாலும், அவமானத்தினாலும் ஆகும். ஆனால், இவ்விடத்தில், இதனை அடுத்து வரும், 'தீரத்தனம்' என்ற சொல்லினால், அம்மை தலை தாழ்த்தியிருப்பது, திண்ணத்தினைக் காட்டும்.
காயாரோகணர் - திருநாகைக்காரோணம் - நாகப்பட்டினம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
கருந்தடங்கண்ணி - நீலாயதாட்சி
வாரிதியோன் - கடல்
Top
Updated on 29 Dec 2010
No comments:
Post a Comment