Wednesday, November 10, 2010

தியாகராஜ கிருதி - ஸரிவாரிலோன - ராகம் பி4ன்ன ஷட்3ஜம் - Sarivarilona - Raga Bhinna Shadjam

பல்லவி
1ஸரிவாரிலோன சௌக 2சாலதா3யெனா

அனுபல்லவி
பொருகி3ண்ட்3ல வாரல சேதி
பூஜ ஜூசி ஜூசி 3சல்லனாயெனா (ஸ)

சரணம்
4தாருமாரு பல்கு வாரிலோ
தத்தரிஞ்சக3
ஜூட3 ந்யாயமா
5பாரமார்தி2குல து3:க2 6ஜாலமுல
பா3ப லேதா3 ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஸ)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • சமமானவர்களிடை (எனது) இழிவு போதவில்லையா?

    • அண்டை வீட்டார்களின் வழிபாட்டினைக் கண்டு கண்டு (உள்ளம்) குளிர்ந்ததா?
    • தாறுமாறு பகர்வோரிடை (என்னைத்) தத்தளிக்கக் காணல் நியாயமா?
    • மெய்ந்நெறி நிற்போரின் துன்பங்களைத் தீர்க்கவில்லையா?


  • சமமானவர்களிடை (எனது) இழிவு போதவில்லையா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரிவாரிலோன/ சௌக/ சாலது3-ஆயெனா/
சமமானவர்களிடை/ (எனது) இழிவு/ போதவில்லையா/


அனுபல்லவி
பொருகு3/-இண்ட்3ல வாரல சேதி/
அண்டை/ வீட்டார்களின்/

பூஜ/ ஜூசி/ ஜூசி/ சல்ல-ஆயெனா/ (ஸ)
வழிபாட்டினை/ கண்டு/ கண்டு/ (உள்ளம்) குளிர்ந்ததா/


சரணம்
தாருமாரு/ பல்கு வாரிலோ/
தாறுமாறு/ பகர்வோரிடை/

தத்தரிஞ்சக3/ ஜூட3/ ந்யாயமா/
(என்னைத்) தத்தளிக்க/ காணல்/ நியாயமா/

பாரமார்தி2குல/ து3:க2 ஜாலமுல/
மெய்ந்நெறி நிற்போரின்/ துன்பங்களை/

பா3ப லேதா3/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ஸ)
தீர்க்கவில்லையா/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸரிவாரிலோன - ஸரிவாரலோன.

2 - சாலதா3யெனா - சாலதா3யெனோ.

3 - சல்லனாயெனா - சல்லனாயெனோ.

4 - தாருமாரு பல்கு வாரிலோ தத்தரிஞ்சக3 - தாருமாரு பல்கு வாரலு தத்தரிஞ்சக3 : பிற்கூறியது, நேரெதிரான பொருள் தருவதால் தவறாகும்.

6 - ஜாலமுல - ஜாலமு : 'ஜாலமு' என்ற சொல் பன்மையினைக் குறிக்கும். எனவே, இதனை 'ஜாலமுல' என்று மேலும் பன்மைப்படுத்துதல் சரியாகுமா என்று தெரியவில்லை.

Top

மேற்கோள்கள்
5 - பாரமார்தி2குல - மெய்ந்நெறி நிற்போர் - 'ஸ்வாமி தேசிகனின் 'பரமார்த்த துதி' நோக்கவும்.

Top

விளக்கம்
2 - சாலதா3யெனா - போதவில்லையா - கடிந்துகொள்ளல்.

3 - சல்லனாயெனா - உள்ளம் குளிர்ந்ததா - கேலிச்சொல்.

Top


Updated on 10 Nov 2010

No comments: