1எவரு தெலியனு பொய்யெத3ரு
விவரமு லேனி பூஜலு 2ஜேஸெத3ரு
சரணம்
சரணம் 1
முத3முன பருல ரூகலகு பர
ஸுத3துலகாஸி1ஞ்சி தா கூடு3டகு
உத3ரமு நிம்புட கொரகு சால
ஊரனூர 3திரிகெ3த3ராவரகு (எ)
சரணம் 2
கொன்ன தொத்துல மாட மீர லேக
அன்ன தம்முல தல்லி தண்ட்3ருல நேர-
மென்னுடே பனி கானி ஸாரமைன
பன்னக3 ஸ1யன நீ பத3மு நம்மெத3ரா (எ)
சரணம் 3
ஆலு பி3ட்3ட3லனு நம்மெத3ரு வாரி-
காஸி1ஞ்சி பருல கொம்பலு முஞ்செத3ரு
காலுனி வல்ல நிண்டா3ரு ராம
கஷ்டமு ஜெந்தி3 பு4வினி புட்டெத3ரு (எ)
சரணம் 4
பெத்3த3லதோ கல்லலாடி3 ராம
பு3த்3தி4 லேனி த4னிகுல தா வேடி3
வத்3த3ன வாரிதோ மோடி3 இட்லு
ப்ரொத்3து3 போவுட கானி பதிதுல கூடி3 (எ)
சரணம் 5
ஈஸுன மரியாத3 லேது3 நிண்டு3
காஸு கல்கி3ன வானிகன்னிட வாது3
ஆஸ நீயெட3 கல்க3 போது3 நிஜ
தா3ஸுலு எவரோ கன சேத காது3 (எ)
சரணம் 6
பன்னுக3 4மனகே ஸ1க்தியனி
5அன்னி கல்லலனுசுனு தொ3ங்க3 ப4க்தி
அன்ன இதே3டி விரக்தி ராம
கன்ன தண்ட்3ரி 6இதி3யா பேத3 யுக்தி (எ)
சரணம் 7
யோகு3லு மேனெருக3 லேக தமகே
க3தியனி த்4யானிந்துரு கா3க
போ4கி3 ஸ1யன ஏலுகோக ராம
த்யாக3ராஜுனிபை நீகிங்க பராகா (எ)
பொருள் - சுருக்கம்
அரவணையோனே! இராமா! ஈன்ற தந்தையே!
- எவர் அறியலாயினர்?
- விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்.
- களிப்புடன், பிறர் பணத்திற்கு, பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு,
- தான் (அவற்றை) அடையவும், வயிறு நிரப்புவதற்கும்,
- மிக்கு ஊரூராகத் திரிந்தனர், அதுவரை;
- கொண்ட மனைவியரின் சொல் மீர இயலாது,
- அண்ணன், தம்பியர், தாய், தந்தையரின் குற்றம் காண்பதுவே பணியன்றி,
- சாரமான உனது திருவடியினை நம்பினரா?
- இல்லாள், மக்களை நம்பினர்;
- அவருக்கு ஆசைப்பட்டு, பிறர் குடும்பங்களைக் குலைத்தனர்;
- நமனால் நிறைய துன்பமடைந்து, (பின்னர்) புவியில் பிறந்தனர்;
- பெரியோர்களிடம் பொய் கூறி,
- அறிவற்ற செல்வந்தர்களை தாம் இரந்து,
- (அப்படி) வேண்டாம் என்றவரிடம் சினந்து, இப்படியாக,
- வீழ்ந்தோருடன் கூடி, பொழுது போகுமேயன்றி;
- பொறாமையினால் மரியாதை இல்லை;
- மிக்கு செல்வம் படைத்தோனுக்கு, எதனிலும் வாது;
- அன்பு உன்னிடம் தோன்றாது;
- உண்மையான தொண்டவர்கள் எவரோ, காணக் கையாலாகாது;
- தமக்கே மிக்கு வல்லமையென,
- 'யாவும் பொய்'யென, கள்ள பக்தியுடன்,
- ஈதென்ன பற்றின்மை?
- இஃதா இவ்வேழையின் வழிமுறை?
- களிப்புடன், பிறர் பணத்திற்கு, பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு,
- யோகியர்கள் உடல் நினைவின்றி,
- தமக்கே கதியென்று தியானிப்பரே யன்றி,
- (என்னை) ஆண்டுகொள்ளாது, தியாகராசன் மீது உனக்கின்னும் அசட்டையா?
- எவர் அறியலாயினர்?
- விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ தெலியனு பொய்யெத3ரு/
எவர்/ அறியலாயினர்/
விவரமு/ லேனி/ பூஜலு/ ஜேஸெத3ரு/
விவரம்/ அற்ற/ வழிபாடுகள்/ செய்தனர்/
சரணம்
சரணம் 1
முத3முன/ பருல/ ரூகலகு/ பர/
களிப்புடன்/ பிறர்/ பணத்திற்கு/ பிற/
ஸுத3துலகு/-ஆஸி1ஞ்சி/ தா/ கூடு3டகு/
பெண்டிருக்கு/ ஆசைப்பட்டு/ தான்/ (அவற்றை) அடையவும்/
உத3ரமு/ நிம்புட கொரகு/ சால/
வயிறு/ நிரப்புவதற்கும்/ மிக்கு/
ஊர/-ஊர/ திரிகெ3த3ரு/-ஆவரகு/ (எ)
ஊர்/ ஊராகத்/ திரிந்தனர்/ அதுவரை/
சரணம் 2
கொன்ன/ தொத்துல/ மாட/ மீர/ லேக/
கொண்ட/ மனைவியரின்/ சொல்/ மீர/ இயலாது/
அன்ன/ தம்முல/ தல்லி/ தண்ட்3ருல/ நேரமு/-
அண்ணன்/ தம்பியர்/ தாய்/ தந்தையரின்/ குற்றம்/
என்னுடே/ பனி/ கானி/ ஸாரமைன/
காண்பதுவே/ பணி/ யன்றி/ சாரமான/
பன்னக3/ ஸ1யன/ நீ/ பத3மு/ நம்மெத3ரா/ (எ)
அரவு/ அணையோனே/ உனது/ திருவடியினை/ நம்பினரா/
சரணம் 3
ஆலு/ பி3ட்3ட3லனு/ நம்மெத3ரு/ வாரிகி/-
இல்லாள்/ மக்களை/ நம்பினர்/ அவருக்கு/
ஆஸி1ஞ்சி/ பருல/ கொம்பலு/ முஞ்செத3ரு/
ஆசைப்பட்டு/ பிறர்/ குடும்பங்களை/ குலைத்தனர்/
காலுனி வல்ல/ நிண்டா3ரு/ ராம/
நமனால்/ நிறைய/ இராமா/
கஷ்டமு/ ஜெந்தி3/ பு4வினி/ புட்டெத3ரு/ (எ)
துன்பம்/ அடைந்து/ (பின்னர்) புவியில்/ பிறந்தனர்/
சரணம் 4
பெத்3த3லதோ/ கல்லலு/-ஆடி3/ ராம/
பெரியோர்களிடம்/ பொய்/ கூறி/ இராமா/
பு3த்3தி4/ லேனி/ த4னிகுல/ தா/ வேடி3/
அறிவு/ அற்ற/ செல்வந்தர்களை/ தாம்/ இரந்து/
வத்3து3/-அன வாரிதோ/ மோடி3/ இட்லு/
(அப்படி) வேண்டாம்/ என்றவரிடம்/ சினந்து/ இப்படியாக/
ப்ரொத்3து3/ போவுட/ கானி/ பதிதுல/ கூடி3/ (எ)
பொழுது/ போகுமே/ யன்றி/ வீழ்ந்தோருடன்/ கூடி/
சரணம் 5
ஈஸுன/ மரியாத3/ லேது3/ நிண்டு3/
பொறாமையினால்/ மரியாதை/ இல்லை/ மிக்கு/
காஸு/ கல்கி3ன வானிகி/-அன்னிட/ வாது3/
செல்வம்/ படைத்தோனுக்கு/ எதனிலும்/ வாது/
ஆஸ/ நீயெட3/ கல்க3 போது3/ நிஜ/
அன்பு/ உன்னிடம்/ தோன்றாது/ உண்மையான/
தா3ஸுலு/ எவரோ/ கன/ சேத காது3/ (எ)
தொண்டவர்கள்/ எவரோ/ காண/ கையாலாகாது/
சரணம் 6
பன்னுக3/ மனகே/ ஸ1க்தி/-அனி/
மிக்கு/ தமக்கே/ வல்லமை/ யென/
அன்னி/ கல்லலு/-அனுசுனு/ தொ3ங்க3/ ப4க்தி/
'யாவும்/ பொய்/' யென/ கள்ள/ பக்தியுடன்/
அன்ன/ இதி3/-ஏடி/ விரக்தி/ ராம/
தந்தையே/ ஈது/ என்ன/ பற்றின்மை/ இராமா/
கன்ன/ தண்ட்3ரி/ இதி3யா/ பேத3/ யுக்தி/ (எ)
ஈன்ற/ தந்தையே/ இஃதா/ (இந்த) ஏழையின்/ வழிமுறை/
சரணம் 7
யோகு3லு/ மேனு/-எருக3/ லேக/ தமகே/
யோகியர்கள்/ உடல்/ நினைவு/ இன்றி/ தமக்கே/
க3தி/-அனி/ த்4யானிந்துரு/ கா3க/
கதி/ என்று/ தியானிப்பரே/ யன்றி/
போ4கி3/ ஸ1யன/ ஏலுகோக/ ராம/
அரவு/ அணையோனே/ (என்னை) ஆண்டுகொள்ளாது/ இராமா/
த்யாக3ராஜுனிபை/ நீகு/-இங்க/ பராகா/ (எ)
தியாகராசன் மீது/ உனக்கு/ இன்னும்/ அசட்டையா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலியனு பொய்யெத3ரு - தெலியனு பொய்யேரு - தெலிய பொய்யேரு.
2 - ஜேஸெத3ரு - ஜேஸேரு.
3 - திரிகெ3த3ராவரகு - திரிகே3ராவரகு.
5 - கல்லலனுசுனு - கல்லனுசுனு : 'கல்லலனுசுனு' என்பதே சரியாகும்.
6 - இதி3யா - இதா3 : 'இதி3யா' என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - எவரு தெலியனு பொய்யெத3ரு - யார் அறியலாயினர்?. 2-வது சரணத்தில் கூறிய 'உனது திருவடியினை நம்பினரா?', 5-வது சரணத்தில் கூறிய 'அன்பு உன்னிடம் தோன்றாது', 6-வது சரணத்தில் கூறிய 'இஃதா ஏழையின் வழிமுறை?' ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், 'மக்கள், இறைவனிடம் பற்று கொள்ளாது, மற்ற பணிகளில் ஈடுபட்டு நேரத்தைக் கழிக்கின்றனரே' என தியாகராஜர் எண்ணுகின்றார் என்பது தெரியவரும்.
4 - மனகே ஸ1க்தி - நமக்கே வல்லமை. இதற்கு அடுத்து வரும் 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'வல்லமை' என்பது 'அணிமா சித்திகளை'க் குறிக்காது. தியாகராஜர், பொதுவாக 'வல்லமை' என்று கூறுகின்றார்.
5 - அன்னி கல்லலனுசுனு - 'யாவும் பொய்' - உலகினை மாயை யெனல் - இவ்விடத்தில், 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'ஊருக்கு உபதேசம்' செய்பவரைப் பற்றி தியாகராஜர் கூறுகின்றார் என்பது விளங்கும்.
அதுவரை - அவற்றினை யடையும் வரை
தமக்கே கதி - இறைவனையே கதியென
Top
Updated on 28 Oct 2010
No comments:
Post a Comment