கருணயேலாக3ண்டேனீ வித4மே
கல்யாண ஸுந்த3ர ராம
அனுபல்லவி
1பரமாத்முடு3 ஜீவாத்முடு3 ஒகடை3
பரகு3சுண்டு3 ப4க்த பராதீ4னுனி (க)
சரணம்
சரணம் 1
அன்ரு2தம்பா3ட3டு3 அல்புல வேட3டு3
ஸு-ந்ரு2புல கொலுவடு3 2ஸூர்யுனி மரவடு3 (க)
சரணம் 2
மாம்ஸமு முட்டடு3 மது4வுனு த்ராக3டு3 பர-
ஹிம்ஸல ஸேயடு3 எருகனு மரவடு3 (க)
சரணம் 3
3மூடீ3ஷணமுல வாட3டு3 4ஜீவன்-
முக்துடை3 திருகு3 முத3முனு ஜூபடு3 (க)
சரணம் 4
வஞ்சன ஸேயடு3 5வருலதோ பொ3ங்கடு3
சஞ்சல சித்துடை3 ஸௌக்2யமு விடு3வடு3 (க)
சரணம் 5
6ஸாக்ஷியனி தெலிஸி7யந்து3 லக்ஷ்யமு விடு3வடு3
கஞ்ஜாக்ஷுனி த்யாக3ராஜ ரக்ஷகுடை3ன வானி (க)
பொருள் - சுருக்கம்
கலியாண சுந்தரராமா!
- கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
- பரமான்மா, சீவான்மா ஒருவனாகி யொளிரும் தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவனின்,
- கமலக்கண்ணனின்,
- தியாகராசனைக் காப்பவனாகிய அவனின்,
- பரமான்மா, சீவான்மா ஒருவனாகி யொளிரும் தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவனின்,
- கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
- மெய்யல்லாதது பேசான்;
- அற்பர்களை வேண்டான்;
- நன்மன்னரிடமும் சேவை செய்யான்;
- சூரியனை மறவான்;
- இறைச்சியைத் தொடான்;
- கள்ளருந்தான்;
- பிறருக்குத் தீங்கிழையான்;
- கற்றதனை மறவான்;
- மூவாசைகளை பயன்படுத்தான்;
- சீவன் முத்தனாகித் திரியும் களிப்பினை வெளிப்படுத்தான்;
- வஞ்சனை செய்யான்;
- சான்றோரிடம் பொய் பேசான்;
- அலையும் மனத்தினனாகி, (தனது) சுகத்தினை வீடான்;
- சாட்சியெனத் தெரிந்து, எட்டவேண்டிய இலக்கினை வீடான்.
- மெய்யல்லாதது பேசான்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/-ஏலாகு3/-அண்டே/-ஈ/ வித4மே/
கருணை/ எங்ஙனம்/ என்றால்/ இந்த/ விதமே/
கல்யாண/ ஸுந்த3ர/ ராம/
கலியாண/ சுந்தர/ ராமா/
அனுபல்லவி
பரமாத்முடு3/ ஜீவாத்முடு3/ ஒகடை3/
பரமான்மா/ சீவான்மா/ ஒருவனாகி/
பரகு3சு-உண்டு3/ ப4க்த/ பர-அதீ4னுனி/ (க)
யொளிரும்/ தொண்டரை/ பேணுவதில் ஈடுபட்டவனின்/ கருணை...
சரணம்
சரணம் 1
அன்ரு2தம்பு3/-ஆட3டு3/ அல்புல/ வேட3டு3/
மெய்யல்லாதது/ பேசான்/ அற்பர்களை/ வேண்டான்/
ஸு-ந்ரு2புல/ கொலுவடு3/ ஸூர்யுனி/ மரவடு3/ (க)
நன்மன்னரிடமும்/ சேவை செய்யான்/ சூரியனை/ மறவான்/
சரணம் 2
மாம்ஸமு/ முட்டடு3/ மது4வுனு/ த்ராக3டு3/ பர/-
இறைச்சியை/ தொடான்/ கள்/ அருந்தான்/ பிறருக்கு/
ஹிம்ஸல/ ஸேயடு3/ எருகனு/ மரவடு3/ (க)
தீங்கு/ இழையான்/ கற்றதனை/ மறவான்/
சரணம் 3
மூடு3/-ஈஷணமுல/ வாட3டு3/ ஜீவன்/
மூன்று/ ஆசைகளை/ பயன்படுத்தான்/ சீவன்/
முக்துடை3/ திருகு3/ முத3முனு/ ஜூபடு3/ (க)
முத்தனாகி/ திரியும்/ களிப்பினை/ வெளிப்படுத்தான்/
சரணம் 4
வஞ்சன/ ஸேயடு3/ வருலதோ/ பொ3ங்கடு3/
வஞ்சனை/ செய்யான்/ சான்றோரிடம்/ பொய் பேசான்/
சஞ்சல/ சித்துடை3/ ஸௌக்2யமு/ விடு3வடு3/ (க)
அலையும்/ மனத்தினனாகி/ (தனது) சுகத்தினை/ வீடான்/
சரணம் 5
ஸாக்ஷி/-அனி/ தெலிஸி/-அந்து3/ லக்ஷ்யமு/ விடு3வடு3/
சாட்சி/ என/ தெரிந்து/ எட்டவேண்டிய/ இலக்கினை/ வீடான்/
கஞ்ஜ/-அக்ஷுனி/ த்யாக3ராஜ/ ரக்ஷகுடை3ன/ வானி/ (க)
கமல/ கண்ணனின்/ தியாகராசனை/ காப்பவனாகிய/ அவனின்/ கருணை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - வருலதோ - பருலதோ : 'பருலதோ' என்பது சரியென்றால், 'பிறரிடம் பொய் பேசான்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால், அத்தகைய பொருள் சரியென்று தோன்றவில்லை.
Top
மேற்கோள்கள்
3 - மூடீ3ஷணமுல - மூவாசைகள் - மனைவி, மக்கள், செல்வம்
4 - ஜீவன்-முக்துடை3 திருகு3 - சீவன் முத்தனாகித் திரியும் - சீவன் முத்தனின் நிலையென்ன என்பதனை, ஆதி சங்கரர் தனது ஜீவன்-முக்தானந்த லஹரியில் விளக்கியுள்ளார்.
Top
விளக்கம்
1 - பரமாத்முடு3 ஜீவாத்முடு3 ஒகடை3 - பரமான்மாவும், சீவான்மாவும் ஒருவனாகி யொளிரும் தொண்டர் - சீவன்முத்தரானோர் - எந்த நிலையினை, 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நான் பிரமமே), 'ப்3ரஹ்மைவாஹம்' (பிரமமே நான்), 'ஹம்ஸ' (நான் அவனே), 'ஸோஹம்' (அவன் நானே) ஆகிய மகா வாக்கியங்கள் குறிப்பிடுகின்றவோ அந்நிலை.
2 - ஸூர்யுனி மரவடு3 - இந்த புவியின் படைப்பிற்கும், பேணுதலுக்கும் சூரியன் வெளிப்படையான காரணமானதால், மறைகளில் சூரியனை மிக்குயர்வாகக் கூறப்படும். அதனால், தியாகராஜர் 'சூரியனை மறவான்' என்று கூறியிருக்கலாம். அல்லது, அந்தணர்கள் இயற்றும், 'சந்தியா வந்தனம்' எனப்படும் அன்றாடக் கடமை, சூரியனைக் குறித்தது என்பதனாலும் இருக்கலாம்.
6 - ஸாக்ஷியனி தெலிஸி - சாட்சியெனத் தெரிந்து - இறைவன் இவ்வுலக சீவன்களுள் சாட்சியாக இருப்பதனால், இறைவனைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால், அனுபல்லவியில் கூறப்படும் (பரமான்மா, சீவான்மா ஒருவனாகி ஒளிரும்) தொண்டரின் நிலையினைக் கருத்தில் கொண்டு, இது தொண்டர்களையே குறிப்பதாகக் கருதுகின்றேன். அத்தகைய தொண்டன், விருப்பு, வெறுப்பின்றி கடமைகளை இயற்றி, பயனைத் துறந்து உலகினில் இயங்குவான் என்பதனைத் தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.
Top
7 - அந்து3 - இச்சொல்லுக்கு இரண்டு பொருட்களுண்டு - 'அதனில்' என்றும், 'எட்டவேண்டிய' என்றும். 'அதனில்' என்பது இவ்விடத்தில் பொருந்தாது. எனவே, அடுத்துவரும், 'லக்ஷ்யமு' (இலக்கு) என்று சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'எட்டவேண்டிய' (இலக்கு) என்று மொழிபெயர்க்கப்பட்டது.
தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவன் - இறைவன்
சுகத்தினை வீடான் - சீவன்முத்தனாகித் திரியும் சுகத்தினை
எட்டவேண்டிய இலக்கு - மோக்கம் எனப்படும் வீடு.
Top
Updated on 05 Mar 2010
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
5வருலதோ பொ3ங்கடு3 என்பதற்கு சான்றோரிடம் பொய் பேசான் என்று பொருள் கூறியுள்ளீர்.
மற்றும்
” - வருலதோ - பருலதோ : 'பருலதோ' என்பது சரியென்றால், 'பிறரிடம் பொய் பேசான்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால், அத்தகைய பொருள் சரியென்று தோன்றவில்லை.” என்று பொருள் கூறியுள்ளீர்.
பருலதோ சரியென்று எனக்குத் தோன்றுகின்றது. சான்றோரிடம் பொய் பேசான் என்றால் மற்றவர்களோடு பொய் பேசுவான் என்பது தொக்கி நிற்கவில்லையா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'பொய் பேசாமை' என்பது கோட்பாடாகும். இவருடன் பேசலாம், அவருடன் பேசக்கூடாது என்று பாகுபாடு செய்ய இயலாது.
'அந்ரு2தம்பா3ட3டு' என்று முதல் சரணத்திலேயே கூறிவிட்டு, பின்னர் நான்காவது சரணத்தில் 'பொ3ங்கடு3' என்று கூறுவது மிகையாகும்.
எதுகை, மோனை ஒவ்வோர் சரணத்தின் முதலில் மட்டுமல்ல, நடுவிலும் வரலாம். அதன்படி நோக்கினால், 'வஞ்சன' என்பதற்கு 'வருலதோ' என்பது பொருந்தும்.
மேலும், நான் பொருள் எழுதுமுன், புத்தகங்களில், பாரம்பரியமாகக் கொள்ளப்பட்டுள்ள பொருளினையும் கவனித்த பின்னரே எழுதுகின்றேன். அதன்படி 'வருலதோ' என்பதே பாரம்பரிய சொல்லாகத் தெரிகின்றது.
நீங்கள் கூறுவதுடன் நான் முற்றிலும் சம்மதித்தாலும், கிருதி அங்ஙனம் இருக்கையில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
வணக்கம்
கோவிந்தன்.
Post a Comment