Sunday, February 7, 2010

தியாகராஜ கிருதி - ரகு4 நாயக - ராகம் ஹம்ஸ த்4வனி - Raghu Nayaka - Raga Hamsa Dhvani

பல்லவி
ரகு4 நாயக நீ பாத3 யுக3
ராஜீவமுல நே விட3 ஜால ஸ்ரீ (ரகு4)

அனுபல்லவி
அக4 ஜாலமுல 1பா3ர-தோ3லி
நன்னாத3ரிம்ப நீவே க3தி காத3 ஸ்ரீ (ரகு4)

சரணம்
4வ ஸாக3ரமு தா3ட லேக நே
3லு கா3ஸி-படி3 நீ மருகு3 ஜேரிதினி
அவனிஜாதி4பாஸ்1ரித ரக்ஷக
2ஆனந்த3-கர ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ரகு4)


பொருள் - சுருக்கம்
  • இரகு நாயகா! புவிமகள் கேள்வா! சார்ந்தோரைக் காப்போனே! ஆனந்தமளிப்போனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

    • உனது திருவடியிணைத் தாமரைகளை நான் விடேன்;
      • (எனது) பாவக் குவியலினை துர விரட்டி, என்னை யாதரிக்க நீயே கதியன்றோ?
      • பிறவிக்கடலினைத் தாண்டவியலாது, நான் மிக்கு துயருற்று, உனது நீழலை யடைந்தேன்;

    • உனது திருவடியிணைத் தாமரைகளை நான் விடேன்



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ரகு4/ நாயக/ நீ/ பாத3/ யுக3/
    இரகு/ நாயகா/ உனது/ திருவடி/ இணை/

    ராஜீவமுல/ நே/ விட3 ஜால/ ஸ்ரீ/ (ரகு4)
    தாமரைகளை/ நான்/ விடேன்/ ஸ்ரீ/ ரகு நாயகா...


    அனுபல்லவி
    அக4/ ஜாலமுல/ பா3ர/-தோ3லி/
    (எனது) பாவ/ குவியலினை/ துர/ விரட்டி/

    நன்னு/-ஆத3ரிம்ப/ நீவே/ க3தி/ காத3/ ஸ்ரீ/ (ரகு4)
    என்னை/ ஆதரிக்க/ நீயே/ கதி/ அன்றோ/ ஸ்ரீ/ ரகு நாயகா...


    சரணம்
    4வ/ ஸாக3ரமு/ தா3ட/ லேக/ நே/
    பிறவி/ கடலினை/ தாண்ட/ இயலாது/ நான்/

    3லு/ கா3ஸி/-படி3/ நீ/ மருகு3/ ஜேரிதினி/
    மிக்கு/ துயர்/ உற்று/ உனது/ நீழலை/ யடைந்தேன்/

    அவனிஜா/-அதி4ப/-ஆஸ்1ரித/ ரக்ஷக/
    புவிமகள்/ கேள்வா/ சார்ந்தோரை/ காப்போனே/

    ஆனந்த3/-கர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ரகு4)
    ஆனந்தம்/ அளிப்போனே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ இரகு நாயகா...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - பா3ர-தோ3லி - பா3ர-த்3ரோலி.

    2 - ஆனந்த3-கர - ஆனந்தா3கர.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்



    Updated on 07 Feb 2010
  • No comments: