ஏடி ஜன்மமிதி3 ஹா ஓ ராம
அனுபல்லவி
ஏடி ஜன்மமிதி3 எந்து3கு 1கலிகெ3னு
எந்தனி 2ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
சரணம்
சரணம் 1
ஸாடி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாட3னி தன(கேடி)
சரணம் 2
ஸாரெகு முத்யால ஹாரயுரமு பாலு
காரு மோமுனு கன்னுலார ஜூட3னி தன(கேடி)
சரணம் 3
3இங்கி3தமெரிகி3ன ஸங்கீ3த லோலுனி
பொங்கு3சு தனிவார கௌகி3லிஞ்சனி தன(கேடி)
சரணம் 4
ஸாக3ர ஸ1யனுனி த்யாக3ராஜ நுதுனி
வேக3மே ஜூட3க 4வேகெ3னு ஹ்ரு2த3யமு (ஏடி)
பொருள் - சுருக்கம்
ஓ இராமா!
- என்ன பிறவியிது? ஐயகோ!
- என்ன பிறவியிது? எதற்குண்டானது? எவ்வளவென்று பொறுப்பேன்?
- நிகரற்ற, மதனர் கோடி அழகனை, அடிக்கடி நோக்கி, உரையாடாத தனக்கு,
- எவ்வமயமும், முத்தார மார்பினை, பால் வடியும் முகத்தினைக் கண்ணாரக் காணாத தனக்கு,
- இங்கிதமறிந்த, இசைப் பிரியனை, பூரிப்புடன், உவகை தீர அணைக்காத தனக்கு,
- நிகரற்ற, மதனர் கோடி அழகனை, அடிக்கடி நோக்கி, உரையாடாத தனக்கு,
- என்ன பிறவியிது?
- கடற்றுயில்வோனை, தியாகராசனால் போற்றப் பெற்றோனை, விரைவாகக் காணாது, வெந்தது உள்ளம்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏடி/ ஜன்மமு/-இதி3/ ஹா/ ஓ ராம/
என்ன/ பிறவி/ இது/ ஐயகோ/ ஓ இராமா/
அனுபல்லவி
என்ன/ பிறவி/ இது/ எதற்கு/ உண்டானது/
எந்தனி/ ஸைரிந்து/ ஹா/ ஓ ராம/ (ஏடி)
எவ்வளவென்று/ பொறுப்பேன்/ ஐயகோ/ ஓ இராமா/
சரணம்
சரணம் 1
ஸாடி/ லேனி/ மார/ கோடி/ லாவண்யுனி/
நிகர்/ அற்ற/ மதனர்/ கோடி/ அழகனை/
மாடி மாடிகி/ ஜூசி/ மாடலு/-ஆட3னி/ தனகு/-(ஏடி)
அடிக்கடி/ நோக்கி/ உரை/ ஆடாத/ தனக்கு/ என்ன...
சரணம் 2
ஸாரெகு/ முத்யால/ ஹார/-உரமு/ பாலு/
எவ்வமயமும்/ முத்து/ ஆர/ மார்பினை/ பால்/
காரு/ மோமுனு/ கன்னுலார/ ஜூட3னி/ தனகு/-(ஏடி)
வடியும்/ முகத்தினை/ கண்ணார/ காணாத/ தனக்கு/ என்ன...
சரணம் 3
இங்கி3தமு/-எரிகி3ன/ ஸங்கீ3த/ லோலுனி/
இங்கிதம்/ அறிந்த/ இசை/ பிரியனை/
பொங்கு3சு/ தனிவி/-ஆர/ கௌகி3லிஞ்சனி/ தனகு/-(ஏடி)
பூரிப்புடன்/ உவகை/ தீர/ அணைக்காத/ தனக்கு/ என்ன...
சரணம் 4
ஸாக3ர/ ஸ1யனுனி/ த்யாக3ராஜ/ நுதுனி/
கடல்/ துயில்வோனை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/
வேக3மே/ ஜூட3க/ வேகெ3னு/ ஹ்ரு2த3யமு/ (ஏடி)
விரைவாக/ காணாது/ வெந்தது/ உள்ளம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கலிகெ3னு - கலிகெ3னோ.
2 - ஸைரிந்து - ஸைரிந்துனு.
4 - வேகெ3னு - வேகெ3னி : 'வேகெ3னு' என்பதே சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - இங்கி3தமெரிகி3ன - இங்கிதமறிந்த - தியாகராஜர், தனது 'ஏமனி மாடாடி3திவோ' என்ற கீர்த்தனையில், 'யாரார் உள்ளம் எப்படிப்பட்டதெனத் தெரிந்து, அவரவருக்குத் தகுந்த வகையில், எப்படித்தான் பேசினாயோ?' என்று வியக்கின்றார்.
இந்த கீர்த்தனை, 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இந்தப் பாடலில், பிரகலாதன் இறைவனைக் காணாது, எங்ஙனம் மனம் நொந்தான் என்பதனை விவரிக்கின்றார்.
கடற்றுயில்வோன் - பாற்கடலில் அரவணையில் துயிலும் அரி
Top
Updated on 27 Feb 2010
No comments:
Post a Comment