ஜக3தா3னந்த3 காரக
ஜய ஜானகீ ப்ராண நாயக
அனுபல்லவி
க3க3னாதி4ப ஸத்குலஜ ராஜ ராஜேஸ்1வர
ஸு-கு3ணாகர 1ஸுர ஸேவ்ய ப4வ்ய தா3யக
ஸதா3 ஸகல (ஜ)
சரணம்
சரணம் 1
அமர தாரக நிசய குமுத3 ஹித
பரிபூர்ணானக4 ஸுர ஸுர பூ4ஜ
த3தி4 பயோதி4 வாஸ ஹரண
ஸுந்த3ர-தர வத3ன ஸுதா4-மய வசோ-
ப்3ரு2ந்த3 கோ3விந்த3 ஸானந்த3
மா-வராஜராப்த ஸு1ப4 கரானேக (ஜ)
சரணம் 2
2நிக3ம நீரஜாம்ரு2தஜ
போஷகானிமிஷ வைரி வாரித3 ஸமீரண
க2க3 துரங்க3 3ஸத்கவி ஹ்ரு2தா3லயாக3ணித
வானராதி4ப நதாங்க்4ரி யுக3 (ஜ)
சரணம் 3
இந்த்3ர நீல மணி ஸன்னிபா4பக4ன
சந்த்3ர ஸூர்ய நயனாப்ரமேய
4வாகீ3ந்த்3ர ஜனக ஸகலேஸ1 5ஸு1ப்4ர
நாகே3ந்த்3ர ஸ1யன ஸ1மன வைரி ஸன்னுத (ஜ)
சரணம் 4
பாத3 விஜித மௌனி ஸா1ப ஸவ
பரிபால 6வர மந்த்ர க்3ரஹண லோல
பரம ஸா1ந்த சித்த ஜனகஜாதி4ப
ஸரோஜ ப4வ வரதா3கி2ல (ஜ)
சரணம் 5
ஸ்ரு2ஷ்டி ஸ்தி2த்யந்த-காரகாமித
காமித ப2லதா3ஸமான கா3த்ர
ஸ1சீ பதி நுதாப்3தி4 மத3 7ஹரானுராக3
ராக3 ராஜித கதா2 ஸார ஹித (ஜ)
சரணம் 6
ஸஜ்ஜன மானஸாப்3தி4 ஸுதா4-கர
குஸும விமான ஸுரஸா ரிபு கராப்3ஜ
லாலித சரணாவ-கு3ணாஸுர க3ண
மத3 ஹரண ஸனாதனாஜ நுத (ஜ)
சரணம் 7
8ஓங்கார பஞ்ஜர கீர புர
ஹர ஸரோஜ ப4வ கேஸ1வாதி3
ரூப வாஸவ ரிபு ஜனகாந்தக கலா-
த4ர கலா த4ராப்த க்4ரு2ணா-கர
ஸ1ரணாக3த ஜன பாலன ஸு-மனோ-
ரமண நிர்விகார நிக3ம ஸாரதர (ஜ)
சரணம் 8
கர த்4ரு2த ஸ1ர ஜாலாஸுர
மதா3பஹரணாவனீ ஸுர ஸுராவன
கவீன பி3லஜ மௌனி க்ரு2த சரித்ர
ஸன்னுத ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ஜ)
சரணம் 9
புராண 9புருஷ ந்ரு2-வராத்மஜாஸ்1ரித
பராதீ4ன க2ர விராத4 ராவண
வி-ராவணானக4 பராஸ1ர மனோ-
ஹராவிக்ரு2த த்யாக3ராஜ ஸன்னுத (ஜ)
சரணம் 10
அக3ணித கு3ண கனக சேல
10ஸால வித3ளனாருணாப4 ஸமான
சரணாபார 11மஹிமாத்3பு4த ஸு-கவி ஜன
ஹ்ரு2த்ஸத3ன ஸுர முனி க3ண விஹித
கலஸ1 நீர நிதி4ஜா ரமண பாப க3ஜ
ந்ரு2-ஸிம்ஹ வர த்யாக3ராஜாதி3 நுத (ஜ)
பொருள் - சுருக்கம்
- உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- விண்ணரசனின் நற்-குலத்தோன்றலே! மாமன்னர் ஈசனே! நற்குணச் சுரங்கமே! வானோர் தொழும், பேறருள்வோனே! எவ்வமயமும், அனைத்துலகிற்கும் களிப்பூட்டுவோனே!
- அமரரெனும் தாரைகளிடை, குமுத நண்பனே (மதியே)! முழுமுதலே! பாவமற்றோனே! வானோரின் உம்பர் தருவே! தயிர், வெண்ணெய், (ஆய்ச்சியரின்) உடைகளைத் திருடுவோனே! எழிலான வதனத்தோனே! அமிழ்தூறுஞ் சொற்களோனே, கோவிந்தா! களித்திருப்போனே! மா மணாளா! மூப்பற்றோர்க் கினியோனே! நலமருள்வோனே! பல்லுலகிற்கும் களிப்பூட்டுவோனே!
- மறைகளெனும் கமலத் தேனிலுத்த நாதத்தினைப் பேணுவோனே! கண்ணிமையாதார் பகையெனும் முகிலுக்குப் புயலே! கருட வாகனனே! நற்கவிகள் இதயத்துறைவோனே! எண்ணற்ற வானரர்கள் தலைவன் வணங்கும் திருவடி இணையோனே! உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- இந்திர நீலமணி நிகருடலோனே! மதி, பரிதிக் கண்களோனே! அளவிடற்கரியனே! நாவரசி மணாளன் தந்தையே! யாவர்க்கும் ஈசனே! தூயோனே! அரவரசன் அணையோனே! நமன் பகைவன் போற்றும் உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- திருவடியினால் முனிவர் சாபம் களைந்தோனே! வேள்வி காத்தோனே! உயர் மந்திரத்தினை உணர்ந்தோரை விரும்புவோனே! முற்றிலும் அமைதியான சித்தத்தோனே! சனகன் மகள் கேள்வா! மலரோனுக் கருள்வோனே! அனைத்துலகிற்கும் களிப்பூட்டுவோனே!
- படைத்தல், காத்தல், அழித்தல் புரிவோனே! அளவின்றி விரும்பிய பயனருள்வோனே! நிகரற்ற உருவத்தோனே! சசி மணாளன் போற்றும், கடலின் செருக்கினை ஒடுக்குவோனே! காதல், இசையோடு ஒளிரும் காதையின் சாரத்துறைவோனே! (காதல், இசையோடு, காதை சாரம் இயற்றுவோருக்கினியோனே!) உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- நன்மக்களின் மனக்கடலின் அமுது பொழிவோனே (மதியே)! புட்பக விமானத்தோனே! சுரசையின் பகைவன் கர கமலங்களினால் வருடப்பெற்ற திருவடிகளோனே! தீய குணமுடைத்த அசுரர்களின் செருக்கை யடக்கியோனே! என்றுமிருப்போனே! பிறவாதவன் போற்றும் உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- ஓங்காரமெனும் கூண்டுக் கிளியே! புரம் எரித்தோன், மலரோன், கேசவன் முதலான உருவத்தோனே! வாசவனின் பகைவன் தந்தைக்கு, நமனுக்குப் பிறை சூடி போன்றோனே! பிறைசூடியின் நண்பனே! கருணை புரிவோனே! சரணடைந்த மக்களைக் காப்போனே! நல்லுள்ளத்தோரை மகிழ்விப்போனே! மாற்றமற்றோனே! மறை பகரும் ஒப்பற்றோனே! உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- கரங்களில் எண்ணற்ற அம்புகளேந்துவோனே! அசுரர்களின் செருக்கினையழித்தோனே! அந்தணர்கள், வானோரைக் காப்போனே! கவி மன்னனாம், புற்றிலுதித்த முனி இசைத்த சரிதத்தில், சிறக்கப் போற்றப் பெற்றோனே! தியாகராசன் போற்றும் உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- பழம்பொருளே! உயர் (தசரத) மன்னன் மைந்தா! சார்ந்தோரைப் பேணுதலில் ஈடுபட்டோனே! கரன், விராதன், இராவணர்களை வதைத்தோனே! பாவமற்றோனே! பராசர முனிவரின் உள்ளம் கவர்வோனே! மாற்றமற்றோனே! தியாகராசன் சிறக்கப் போற்றும் உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- எண்ணிறந்த பண்புகளோனே! பொன்னாடைகளோனே! சால மரங்களைத் துளைத்தோனே! இளங்காலைப் பரிதி நிகர் (சிவந்த) திருவடிகளோனே! அளவற்ற மகிமைகளோனே! அற்புத நற்கவிகளின் இதயத்துறைவோனே! வானோர், முனிவர்களுக்கு மிக்கினியோனே! கலசக் கடலுதித்தவள் மணாளா! பாவங்களெனும் கரிகளுக்கு நரசிங்கமே! உயர் தியாகராசன் முதலானோர் போற்றும் உலகிற்குக் களிப்பூட்டுவோனே!
- சானகி மணாளா, போற்றி!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜக3த்/-ஆனந்த3/ காரக/
உலகிற்கு/ களிப்பு/ ஊட்டுவோனே/
ஜய/ ஜானகீ/ ப்ராண/ நாயக/
போற்றி/ சானகி/ உயரின்/ தலைவா (மணாளா)/
அனுபல்லவி
க3க3ன/-அதி4ப/ ஸத்-குலஜ/ ராஜ ராஜ/-ஈஸ்1வர/
விண்/ அரசனின்/ நற்-குலத்தோன்றலே/ மாமன்னர்/ ஈசனே/
ஸு-கு3ண/ ஆகர/ ஸுர/ ஸேவ்ய/ ப4வ்ய/ தா3யக/
நற்குண/ சுரங்கமே/ வானோர்/ தொழும்/ பேறு/ அருள்வோனே/
ஸதா3/ ஸகல/ (ஜ)
எவ்வமயமும்/ அனைத்து/ உலகிற்கும்...
சரணம்
சரணம் 1
அமர/ தாரக நிசய/ குமுத3/ ஹித/
அமரரெனும்/ தாரைகளிடை/ குமுத/ நண்பனே (மதியே)/
பரிபூர்ண/-அனக4/ ஸுர/ ஸுர/ பூ4ஜ/
முழுமுதலே/ பாவமற்றோனே/ வானோரின்/ உம்பர்/ தருவே/
த3தி4/ பயோதி4/ வாஸ/ ஹரண/
தயிர்/ வெண்ணெய்/ (ஆய்ச்சியரின்) உடைகளை/ திருடுவோனே/
ஸுந்த3ர-தர/ வத3ன/ ஸுதா4-மய/ வசோ-ப்3ரு2ந்த3/
எழிலான/ வதனத்தோனே/ அமிழ்தூறும்/ சொற்களோனே/
கோ3விந்த3/ ஸ-ஆனந்த3/
கோவிந்தா/ களித்திருப்போனே/
மா/-வர/-அஜர/-ஆப்த/ ஸு1ப4/ கர/-அனேக/ (ஜ)
மா/ மணாளா/ மூப்பற்றோர்க்கு/ இனியோனே/ நலம்/ அருள்வோனே/ பல/ உலகிற்கும்...
சரணம் 2
நிக3ம/ நீரஜ/-அம்ரு2தஜ/
மறைகளெனும்/ கமல/ தேனிலுத்த (நாதத்தினை)/
போஷக/-அனிமிஷ/ வைரி/ வாரித3/ ஸமீரண/
பேணுவோனே/ கண்ணிமையாதார்/ பகையெனும்/ முகிலுக்கு/ புயலே/
க2க3/ துரங்க3/ ஸத்-கவி/ ஹ்ரு2த்/-ஆலய/-அக3ணித/
பறவை (கருட)/ வாகனனே/ நற்கவிகள்/ இதயத்து/ உறைவோனே/ எண்ணற்ற/
வானர/-அதி4ப/ நத/-அங்க்4ரி/ யுக3/ (ஜ)
வானரர்கள்/ தலைவன்/ வணங்கும்/ திருவடி/ இணையோனே/
சரணம் 3
இந்த்3ர/ நீல/ மணி/ ஸன்னிப4/-அபக4ன/
இந்திர/ நீல/ மணி/ நிகர்/ உடலோனே/
சந்த்3ர/ ஸூர்ய/ நயன/-அப்ரமேய/
மதி/ பரிதி/ கண்களோனே/ அளவிடற்கரியனே/
வாக்/-இந்த்3ர/ ஜனக/ ஸகல/-ஈஸ1/ ஸு1ப்4ர/
நாவரசி/ மணாளன்/ தந்தையே/ யாவர்க்கும்/ ஈசனே/ தூயோனே/
நாக3/-இந்த்3ர/ ஸ1யன/ ஸ1மன/ வைரி/ ஸன்னுத/ (ஜ)
அரவு/ அரசன்/ அணையோனே/ நமன்/ பகைவன்/ போற்றும்/ உலகிற்கு...
சரணம் 4
பாத3/ விஜித/ மௌனி/ ஸா1ப/ ஸவ/
திருவடியினால்/ வென்றோனே (களைந்தோனே)/ முனிவர்/ சாபம்/ வேள்வி/
பரிபால/ வர/ மந்த்ர/ க்3ரஹண/ லோல/
காத்தோனே/ உயர்/ மந்திரத்தினை/ உணர்ந்தோரை/ விரும்புவோனே/
பரம/ ஸா1ந்த/ சித்த/ ஜனகஜா/-அதி4ப/
முற்றிலும்/ அமைதியான/ சித்தத்தோனே/ சனகன் மகள்/ கேள்வா/
ஸரோஜ ப4வ/ வரத3/-அகி2ல/ (ஜ)
மலரோனுக்கு/ அருள்வோனே/ அனைத்து/ உலகிற்கும்...
சரணம் 5
ஸ்ரு2ஷ்டி/ ஸ்தி2தி/-அந்த/-காரக/-அமித/
படைத்தல்/ காத்தல்/ அழித்தல்/ புரிவோனே/ அளவின்றி/
காமித/ ப2லத3/-அஸமான/ கா3த்ர/
விரும்பிய/ பயன் அருள்வோனே/ நிகரற்ற/ உருவத்தோனே/
ஸ1சீ/ பதி/ நுத/-அப்3தி4/ மத3/ ஹர/-அனுராக3/
சசி/ மணாளன்/ போற்றும்/ கடலின்/ செருக்கினை/ ஒடுக்குவோனே/ காதல்/
ராக3/ ராஜித/ கதா2/ ஸார/ ஹித/ (ஜ)
இசையோடு/ ஒளிரும் (இயற்றுவோருக்கு)/ காதையின்/ சாரத்து/ உறைவோனே (இனியோனே)
சரணம் 6
ஸஜ்ஜன/ மானஸ/-அப்3தி4/ ஸுதா4/-கர/
நன்மக்களின்/ மன/ கடலின்/ அமுது/ பொழிவோனே (மதியே)/
குஸும/ விமான/ ஸுரஸா/ ரிபு/ கர/-அப்3ஜ/
புட்பக/ விமானத்தோனே/ சுரசையின்/ பகைவன்/ கர/ கமலங்களினால்/
லாலித/ சரண/-அவ/-கு3ண/-அஸுர க3ண/
வருடப்பெற்ற/ திருவடிகளோனே/ தீய/ குணமுடைத்த/ அசுரர்களின்/
மத3/ ஹரண/ ஸனாதன/-அஜ/ நுத/ (ஜ)
செருக்கை/ அடக்கியோனே/ என்றுமிருப்போனே/ பிறவாதவன்/ போற்றும்/ உலகிற்கு...
சரணம் 7
ஓங்கார/ பஞ்ஜர/ கீர/ புர/
ஓங்காரமெனும்/ கூண்டு/ கிளியே/ புரம்/
ஹர/ ஸரோஜ ப4வ/ கேஸ1வ/-ஆதி3/
எரித்தோன்/ மலரோன்/ கேசவன்/ முதலான/
ரூப/ வாஸவ/ ரிபு/ ஜனக/-அந்தக/ கலா/-
உருவத்தோனே/ வாசவனின்/ பகைவன்/ தந்தைக்கு/ நமனுக்கு/ பிறை/
த4ர/ கலா/ த4ர/-ஆப்த/ க்4ரு2ணா/-கர/
சூடி (போன்றோனே)/ பிறை/ சூடியின்/ நண்பனே/ கருணை/ புரிவோனே/
ஸ1ரண/-ஆக3த/ ஜன/ பாலன/ ஸு-மனோ/-
சரண்/ அடைந்த/ மக்களை/ காப்போனே/ நல்லுள்ளத்தோரை/
ரமண/ நிர்விகார/ நிக3ம/ ஸாரதர/ (ஜ)
மகிழ்விப்போனே/ மாற்றமற்றோனே/ மறை (பகரும்)/ ஒப்பற்றோனே/
சரணம் 8
கர/ த்4ரு2த/ ஸ1ர/ ஜால/-அஸுர/
கரங்களில்/ ஏந்துவோனே/ அம்புகளை/ எண்ணற்ற/ அசுரர்களின்/
மத3/-அபஹரண/-அவனீ-ஸுர/ ஸுர/-அவன/
செருக்கினை/ அழித்தோனே/ அந்தணர்கள்/ வானோரை/ காப்போனே/
கவி/-இன/ பி3லஜ/ மௌனி/ க்ரு2த/ சரித்ர/
கவி/ பரிதி (மன்னன்)/ புற்றிலுதித்த/ முனி/ இசைத்த/ சரிதத்தில்/
ஸன்னுத/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ஜ)
சிறக்க போற்றப் பெற்றோனே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ உலகிற்கு...
சரணம் 9
புராண/ புருஷ/ ந்ரு2-வர/-ஆத்மஜ/-ஆஸ்1ரித/
பழம்/ பொருளே/ உயர் (தசரத) மன்னன்/ மைந்தா/ சார்ந்தோரை/
பர-அதீ4ன/ க2ர/ விராத4/ ராவண/
(பேணுதலில்) ஈடுபட்டோனே/ கரன்/ விராதன்/ இராவணர்களை/
வி-ராவண/-அனக4/ பராஸ1ர/ மனோ/-
வதைத்தோனே/ பாவமற்றோனே/ பராசர (முனிவரின்)/ உள்ளம்/
ஹர/-அவிக்ரு2த/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஜ)
கவர்வோனே/ மாற்றமற்றோனே/ தியாகராசன்/ சிறக்கப் போற்றும்/ உலகிற்கு...
சரணம் 10
அக3ணித/ கு3ண/ கனக/ சேல/
எண்ணிறந்த/ பண்புகளோனே/ பொன்/ ஆடைகளோனே/
ஸால/ வித3ளன/-அருண/-ஆப4/ ஸமான/
சால (மரங்களை)/ துளைத்தோனே/ இளங்காலைப் பரிதி (அருணன்)/ நிகர் (சிவந்த)/
சரண/-அபார/ மஹிம/-அத்3பு4த/ ஸு-கவி ஜன/
திருவடிகளோனே/ அளவற்ற/ மகிமைகளோனே/ அற்புத/ நற்கவிகளின்/
ஹ்ரு2த்/-ஸத3ன/ ஸுர/ முனி க3ண/ விஹித/
இதயத்து/ உறைவோனே/ வானோர்/ முனிவர்களுக்கு/ மிக்கினியோனே/
கலஸ1/ நீர நிதி4ஜா/ ரமண/ பாப/ க3ஜ/
கலச கடலுதித்தவள்/ மணாளா/ பாவங்களெனும்/ கரிகளுக்கு/
ந்ரு2-ஸிம்ஹ/ வர/ த்யாக3ராஜ/-ஆதி3/ நுத/ (ஜ)
நரசிங்கமே/ உயர்/ தியாகராசன்/ முதலானோர்/ போற்றும்/ உலகிற்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 7, 8 மற்றும் 9-வது சரணங்கள், முறையே 9, 7 மற்றும் 8-வதாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
1 - ஸுர ஸேவ்ய - ஸுஜன ஸேவ்ய.
Top
மேற்கோள்கள்
9 - புருஷ - புருஷன் - இதுகுறித்து, 'ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம்' கூறுவது -
"முன்னம் அவன் (பரம்பொருள்), பறவையாக (சூக்குமமாக), புரங்களில் (உடல்களில்) புகுந்தான்.
அவன் இங்ஙனம் அனைத்து புரங்களிலும் (உடல்களிலும்) உறைதலினால், 'புருஷன்' என்று அழைக்கப்படுவான்.
அவனால் சூழப்படாதது இங்கொன்றுமில்லை; அவனால் நிரப்பப்படாததும் இங்கொன்றுமில்லை." (உள்ளும் புறமும் அவனே) (II.v.18)
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
10 - ஸால வித3ளன - சால மரம் - குங்கிலிகம் - சால மரங்களைத் துளைத்தோன் - இராமன் ஏழு சால மரங்களை ஓரம்பினால் துளைத்தான். வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 12-வது அத்தியாயம் (செய்யுட்கள் 1 – 4) நோக்கவும்.
Top
விளக்கம்
2 - நிக3ம நீரஜாம்ரு2தஜ போஷக - மறைகளெனும் கமலத்தேனில் உதித்த (நாதத்தினை) பேணுவோன். தியாகராஜர், தமது 'நாத3 தனுமனிஸ1ம்' என்ற கீர்த்தனையில், நாதம், மறையின் சாரம் என்று கூறுகின்றார். எனவே, இங்கு 'மறைகளெனும் கமலத்தேனில் உதித்தது' - 'நாதம்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
3 - ஸத்கவி ஹ்ரு2தா3லய - நற்கவிகளின் உள்ளத்துறைவோன் - இது வால்மீகி மற்றும் வியாசர் போன்ற, காவியங்கள் இயற்றிய, முனிவர்களைக் குறிக்கலாம்.
Top
4 - வாகீ3ந்த்3ர - இதற்கு 'நாவரசி மணாளன்' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், இச்சொல், 'வாகி3ந்த்3ர' என்றிருக்கவேண்டும் என்று கருதுகின்றேன்.
5 - ஸு1ப்4ர - தூயோனே - சில புத்தகங்களில், இதனை, அடுத்துவரும், 'நாகே3ந்த்3ர ஸ1யன' (அரவரசன் அணையோனே) என்பதுடன் சேர்த்து, 'ஸு1ப்4ர நாகே3ந்த்3ர ஸ1யன' - (தூய அரவரசன் அணையோனே) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
6 - வர மந்த்ர க்3ரஹண லோல - உயர் மந்திரத்தினை உணர்ந்தோரை விரும்புவோனே - சில புத்தகங்களில், 'மந்திரம்' என்பதற்கு, விசுவாமித்திரர், இராமனுக்கும், இலக்குவனுக்கும் புகட்டிய 'ப3லை-அதிப3லை' என்ற மந்திரங்கள் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி பொருள் கொண்டால், 'லோல' என்ற சொல் தனிப்படும் - அதற்கு, தனியாக, பொருள் கூற இயலாது. எனவே, 'காயத்திரி மந்திரம்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
7 - அனுராக3 ராக3 ராஜித கதா2 ஸார ஹித - எல்லா புத்தகங்களிலும், 'ராஜித' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'ராஜித' என்ற சொல்லுக்கு, 'ஒளிரும்' என்று பொருளாகும். அத்தகைய பொருளுடன், 'ஹித' (இனியவன்) என்பதற்கு சரியான பொருள் கொள்ள இயலாது. எனவே, 'ஹித' என்ற சொல்லுக்கு 'உறைவோன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், எனக்குத் தெரிந்தவரை, 'ராஜித' என்பதற்கு பதிலாக, 'ராசித' (இயற்றப்பெற்ற) என்றிருந்தால், 'ஹித' என்று சொல்லுக்கு, 'இனியோன்' என்று பொருள் கொள்ளலாம். 'ராசித' மற்றும் 'ரசித' என்ற சொற்களுக்கு ஒரே பொருள்தான்
'காதல், இசையுடன் இராம காதை சாரத்தினை இயற்றியோருக்கு இனியவன்' - இது தியாகராஜரைப் போன்று, இராம காதையினை இசையுடன் பாடியவர்களைக் குறிக்கலாம்.
8 - ஓங்கார பஞ்ஜர கீர - ஓங்காரமெனும் கூண்டுக் கிளியே - தியாகராஜர், தமது 'ஓ ராம ஓ ராம' என்ற ஆரபி4 ராக கீர்த்தனையில், இராமனை, 'ஓங்காரத்திலுறைவோன்' என்று கூறுகின்றார்.
11- அத்3பு4த ஸு-கவி ஜன ஹ்ரு2த்ஸத3ன - அற்புத நற்கவிகளின் இதயத்துறைவோன் - இது வால்மீகி முனிவர் போன்றோரைக் குறிக்கலாம்.
Top
விண்ணரசன் - பரிதி.
உம்பர் தரு - விரும்பியதருளும் கற்ப தரு.
வெண்ணெய் - இதனை 'பாலாடை' என்றும் கொள்ளலாம்.
மூப்பற்றோர் - கண்ணிமையாதார் - வானோர்.
முகிலுக்குப் புயலே - முகிலை விரட்டும் புயலேயென.
வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்.
இந்திர நீலமணி - நீலக்கல் வைரம்.
நாவரசி மணாளன் - பிறவாதவன் - பிரமன்.
அரவரசன் - சேடன்.
முனிவர் சாபம் - அகலிகையினுக்கு அவள் கணவர் கௌதம முனிவரிட்டது.
உயர் மந்திரம் - காயத்திரி.
சசி மணாளன் - வாசவன் - இந்திரன்.
காதலுடன் - அனுராகம் எனப்படும் இறைவனிடம் கொள்ளும் பெருங்காதல்
காதை - இராம காதை - இராமாயணம்.
சுரசையின் பகைவன் - அனுமன் - அனுமனை சோதிக்க வானோரால் ஏவப்பட்டவள்.
வாசவனின் பகைவன் - இந்திரசித்து - இராவணனின் மகன்.
வாசவனின் பகைவன் தந்தை - இராவணன்
நமனுக்குப் பிறை சூடிபோன்றோனே - (உவமை) நமனை உதைத்த சிவனைப் போன்று என.
புற்றிலுதித்த முனி - வால்மீகி.
கலசக் கடலுதித்தவள் - இலக்குமி.
Top
Updated on 20 Feb 2010
No comments:
Post a Comment