Monday, February 15, 2010

தியாகராஜ கிருதி - ப்ராண நாத2 - ராகம் ஸூ1லினி - Prana Natha - Raga Sulini

பல்லவி
1ப்ராண நாத2 பி3ரான ப்3ரோவவே

அனுபல்லவி
வேணு கா3னமுசே 2பதி3யாரு
வேல கோ3பிகல
பாலிஞ்சியேலு (ப்ரா)

சரணம்
வென்ன மீக33ல வேட்3க மீரக3னு
கன்ன 3பின்ன-வாண்ட்3 கடு3பு நிஞ்சி
தின்னகா3 வெலயு தி3வ்ய ரூபமா
சின்னி க்ரு2ஷ்ண த3ய ஜேஸி த்யாக3ராஜ (ப்ரா)


பொருள் - சுருக்கம்
  • (எனது) ஆருயிரே!
  • குழலூதி, பதினாறாயிரம் ஆய்ச்சியரைப் பேணிக்காக்கும், (எனது) ஆருயிரே!
  • வெண்ணை, பாலாடைகளினால், வேடிக்கை மிக, கண்ட (ஆயர்) சிறாரின் வயிற்றினை நிறைத்து, சிறக்க ஒளிரும், தெய்வ உருவே! சின்னக் கண்ணா! தியாகராசனின் ஆருயிரே!
    • தயவு செய்து, விரைவில் காப்பாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்ராண/ நாத2/ பி3ரான/ ப்3ரோவவே/
உயிரின்/ தலைவா (ஆருயிரே)/ விரைவில்/ காப்பாயய்யா/


அனுபல்லவி
வேணு/ கா3னமுசே/ பதி3-ஆரு/
குழல்/ ஊதி/ பதினாறு/

வேல/ கோ3பிகல/ பாலிஞ்சி/-ஏலு/ (ப்ரா)
ஆயிரம்/ ஆய்ச்சியரை/ பேணி/ காக்கும்/ ஆருயிரே..


சரணம்
வென்ன/ மீக33ல/ வேட்3க/ மீரக3னு/
வெண்ணை/ பாலாடைகளினால்/ வேடிக்கை/ மிக/

கன்ன/ பின்ன-வாண்ட்3ர/ கடு3பு/ நிஞ்சி/
கண்ட/ (ஆயர்) சிறாரின்/ வயிற்றினை/ நிறைத்து/

தின்னகா3/ வெலயு/ தி3வ்ய/ ரூபமா/
சிறக்க/ ஒளிரும்/ தெய்வ/ உருவே/

சின்னி/ க்ரு2ஷ்ண/ த3ய/ ஜேஸி/ த்யாக3ராஜ/ (ப்ரா)
சின்ன/ கண்ணா/ தயவு/ செய்து/ தியாகராசனின்/ ஆருயிரே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - பின்ன-வாண்ட்3 - பின்ன-வாண்ட்3ல : 'பின்ன-வாண்ட்3ர' என்பதே சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்
2 - பதி3யாரு வேல கோ3பிகல - பதினாறாயிரம் ஆய்ச்சியரை -

எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, 'பதினாறாயிரம்' என்ற இலக்கம், கண்ணனின் மனைவியரைக் குறிப்பதாகும். ஆய்ச்சியரை, கண்ணன் மணக்கவில்லை. பூமாசுரன் எனப்படும் நரகாசுரனை வதைத்த கண்ணன், அவன் சிறை வைத்திருந்த, பதினாறாயிரம் கன்னியரை விடுவித்தான். அவர் அனைவரும் கண்ணனை மணக்க விரும்பினர். (பாகவத புராணம், 10-வது புத்தகம், 59-வது அத்தியாயம்) மேலும், பாகவத புராணத்தில் 10-வது புத்தகம், 90-வது அத்தியாயம் (செய்யுள் 29), சுக முனிவர் பரீட்சித்துக்குக் கூறுவதாவது -

"(அதனால்) அவன் (கண்ணன்) உயர்ந்த அறமாகிய, இல்லறத்தினைக் கடைப்பிடித்தான். (மன்னா! முன்னம் உனக்குக் கூறியது போன்று) கண்ணனின் மனைவியர், பதினாறாயிரத்து நூறாகும்."

Top

விளக்கம்
1 - ப்ராண நாத2 - ஆருயிரே - தலைவி தலைவனுக்கு - இப்பாடல் 'காந்தாசக்தி' எனப்படும் 'நாயகி பாவனை'யில் எழுதப்பட்டுள்ளது

கண்ட - யாராகிலும்

Top


Updated on 15 Feb 2010

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
நான் சுட்டிக்காட்டியது யாதெனின் உயிரின் தலைவா என்பதற்குப் பதிலாக உயரின் தலைவா எனும் அச்சுப் பிழையை.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன். நான் தங்களுடைய செய்தியை சரியாக கவனிக்காததற்கு மன்னிக்கவும்.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
வென்ன மீக3ட3ல வேட்3க மீரக3னு - மீகடல என்பதற்கு பாலாடைகளின் என்று பொருளல்லவா?
பாலாடைகளினால் வேடிக்கை என்றால் என்ன பொருள்.
வேட்3க என்பதை வேட்க என்று எடுத்துக் கொண்டால் தமிழிலுள்ள வேட்கை (விருப்பம்) என்னும் பொருள் தருமா? அவ்வாறெனின் ’வெண்ணை, பாலாடைகளின், வேட்கை மிக ’ என்ற பொருள் பொருத்தமாக இருக்கும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்குச் சொல் வேட்3க - வேடு3க நோக்கவும். இது தமிழ்ச் சொல் வேடிக்கைக்கு ஈடாகும். வேட்கை என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

வணக்கம்
கோவிந்தன்