நீகு தனகு 1ரு2ண ரு2ணீ பா4வமு 2லேத3னேரு
அனுபல்லவி
லேக நீகே த3ய லேதோ3 ஸ்ரீ ராம (நீ)
சரணம்
சரணம் 1
சின்ன நாடா3தி3க3 சித்தமந்து3
நெலகொன்ன வாட3வை நா கோரிக ஸாக3குண்டே (நீ)
சரணம் 2
கரகி3 கரகி3 பாத3 கமலமந்து3 வ்ரால
3கருணிந்துனனி நாபை கன்னட3 ஜேஸிதே (நீ)
சரணம் 3
ஈ 4ஜன்மமுன நாது3 பூஜல கை3கொனி
ராஜில்லு 5ஸ்ரீ த்யாக3ராஜுனி மரசிதே (நீ)
பொருள் - சுருக்கம்
ஒளிரும் இராமா!
- உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்; அல்லது உனக்கே தயை இல்லையோ?
- சிறு வயது முதலாக (எனது) உள்ளத்தினில் நிலைபெற்றவனாகியும், எனது கோரிக்கை ஈடேறாவிடில், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்;
- உருகியுருகி திருவடித்தாமரையினில் வீழ, 'கருணை புரிவேன்' என்று, என்னைப் புறக்கணித்தால், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்;
- இப்பிறவியினில் எனது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, தியாகராசனை மறந்தால், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகு/ தனகு/ ரு2ண/ ரு2ணீ/ பா4வமு/ லேது3/-அனேரு/
உனக்கும்/ எனக்கும்/ கடன்/ - கடனாளி/ எண்ணம்/ இல்லை/ என்றனர்/
அனுபல்லவி
லேக/ நீகே/ த3ய/ லேதோ3/ ஸ்ரீ ராம/ (நீ)
அல்லது/ உனக்கே/ தயை/ இல்லையோ/ ஸ்ரீ ராமா/
சரணம்
சரணம் 1
சின்ன நாடு3/-ஆதி3க3/ சித்தமு-அந்து3/
சிறு வயது/ முதலாக/ (எனது) உள்ளத்தினில்/
நெலகொன்ன வாட3வை/ நா/ கோரிக/ ஸாக3க-உண்டே/ (நீ)
நிலைபெற்றவனாகியும்/ எனது/ கோரிக்கை/ ஈடேறாவிடில்/ உனக்கும்...
சரணம் 2
கரகி3/ கரகி3/ பாத3/ கமலமு-அந்து3/ வ்ரால/
உருகி/ உருகி/ திருவடி/ தாமரையினில்/ வீழ/
கருணிந்துனு/-அனி/ நாபை/ கன்னட3 ஜேஸிதே/ (நீ)
'கருணை புரிவேன்'/ என்று/ என்னை/ புறக்கணித்தால்/ உனக்கும்...
சரணம் 3
ஈ/ ஜன்மமுன/ நாது3/ பூஜல/ கை3கொனி/
இந்த/ பிறவியினில்/ எனது/ வழிபாடுகளை/ ஏற்றுக்கொண்டு/
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மரசிதே/ (நீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனை/ மறந்தால்/ உனக்கும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - லேத3னேரு - லேத3னெத3ரு.
3 - கருணிந்துனனி - கருணிஞ்செத3னனி : இவ்விடத்தில் 'கருணிந்துனனி' என்பதே பொருந்தும்.
4 - ஜன்மமுன - ஜக3முன.
5 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.
Top
மேற்கோள்கள்
1 - ரு2ண ரு2ணீ - கடன் - கடனாளி - இந்துமதக் கோட்பாடுகளின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான கடன்கள் உண்டு. மனிதனின் மூன்று கடன்கள்-1; மனிதனின் மூன்று கடன்கள்-2
Top
விளக்கம்
1 - ரு2ண ரு2ணீ பா4வமு - கடன் - கடனாளி எண்ணம் - (ஒருவருக்கொருவர்) கடன்பட்டிருத்தல். தான் கொடுத்த வாக்குறுதியும் ஒரு கடனாகவே கருதப்படும். அதன்படி, இரண்டாவது சரணத்தில், இறைவன் தனக்கு வாக்குறுதி கொடுத்ததாக தியாகராஜர் கூறுகின்றார். மேலும், வழிபாட்டினை இறைவன் ஏற்றபின்னர் (மூன்றாவது சரணம்), இறைவன் தொண்டனைக் காக்கக் கடமைப்பட்டவனாவான்.
தொண்டனுக்கு, இறைவன் தொண்டில் ஈடுபட்டிருப்பது கடனாகும்; அப்படிப்பட்ட தொண்டர்களைக் காப்பது இறைவனின் கடனாகும். இப்படி, இறைவனும், தொண்டனும் ஒருவருக்கொருவர் கடன்பட்டிருத்தலைத் தான் 'ரு2ண ரு2ணீ பா4வமு' என்று தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று நான் நம்புகின்றேன்.
வள்ளலார், இராமலிங்க அடிகளும் இத்தகைய உறவினை தனது திருவருட்பாவில் 'இவர்க்கும்-எனக்கும்' (4496-4500) என்று பாடுகின்றார்.
Top
Updated on 13 Jan 2010
2 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
உனக்கும் எனக்கும் என்று உள்ளதால் கடன் கொடுத்தோன்/கடன் பெற்றான் என்ற பொருத்தம் தானே சரி. கடன், கடனாளி எண்ணம் என்பதற்குப் பதில். கடன், கடனாளி என்னும் எண்ணம் (relationship) என்பது சரியாக இருக்குமா? கடன்/ கடனாளி என்பதற்கு என்ன பொருள். ’தனகு’ என்பதால் தியாகராஜர் தன்னைத் தானே கடனாளி என்று கூறுகிறார். அல்லது இராமன் தன்னிடம் கடன்பட்டிருக்கிறான் என்றும் அக்கடனைத் தன் அருள் மூலம் திருப்பித்தர வேண்டும் என்றும் கூறுகிறாரா?
’ருண’ என்பதற்குக் கடன் கொடுத்தோன் என்று பொருள் உண்டா?
மனிதனின் மூன்று கடன்கள்-1; மனிதனின் மூன்று கடன்கள்-2 என்பது விளங்கவில்லை.
இவை தெய்வக்கடன், முனிவர்க்கடன், பெற்றோர்க் கடன்களா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
கடன் - கடனாளி பற்றி, நான் கீர்த்தனையின் விளக்கத்தில் கொடுத்துள்ளேன்.
தொண்டன் இறைவனிடமும், இறைவன் தொண்டனிடமும் ஒருவருக்கொருவர் கடன் பட்டுள்ளனர்.
இதனைத் தான் தியாகராஜர் தனது கீர்த்தனையில் விளக்குகின்றார் என நான் நம்புகின்றேன்.
மனிதனின் மூன்று கடன்கள் குறித்து நீங்கள் கூறியவை சரியே - கீர்த்தனையில் மேற்கோள் பகுதியினை நோக்கவும்.
வணக்கம்.
வே கோவிந்தன்
Post a Comment