வல்ல காத3னக ஸீதா வல்லப4 1ப்3ரோவு நா(வல்ல)
அனுபல்லவி
2(நீ)வல்ல நாடி ப4க்த சரிதமெல்ல வ்ராயனேலரா 3(வல்ல)
சரணம்
ஸ்தம்ப4முனனு தரு மருகு3னனு டி3ம்பு4டை3 யஸோ1த3யொடி3னி
4த3ம்பு4டை3 5முசுகுந்து3னி டா3ஸி மருகு3சு
6ஸம்ப4விஞ்சி யுக3 யுக3முன ஸரஸ த்யாக3ராஜ வினுத
கும்ப4க ரேசக விது3லனு கோரி ப்3ரோசினாவு நா(வல்ல)
பொருள் - சுருக்கம்
சீதைக் கேள்வா! தியாகராசன் போற்றும் இனியோனே!
- என்னால் முடியாதெனாதே; காப்பாய்
- உன்னால் அந்நாள் தொண்டர் சரிதமெல்லாம் எழுதப்பட்டதேனய்யா?
- கம்பத்தினுள்ளும்,
- தரு மறைவிலும்,
- குழவியாக, யசோதை மடியிலும்,
- ஏய்ப்போனாக, முசுகுந்தனை, மறைந்து நெருங்கி,
- ஒவ்வோர் யுகத்திலும் தோன்றி,
- கும்பகம், இரேசகத்தில் வல்லோரை வலியச் சென்று காத்தாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வல்ல காது3/-அனக/ ஸீதா/ வல்லப4/ ப்3ரோவு/ நா(வல்ல)/
முடியாது/ எனாதே/ சீதைக் கேள்வா/ காப்பாய்/ என்னால்/
அனுபல்லவி
(நீ)வல்ல/ நாடி/ ப4க்த/ சரிதமு/-எல்ல/ வ்ராயனு/-ஏலரா/ (வல்ல)
உன்னால்/ அந்நாள்/ தொண்டர்/ சரிதம்/ எல்லாம்/ எழுதப்பட்டது/ ஏனய்யா/
சரணம்
ஸ்தம்ப4முனனு/ தரு/ மருகு3னனு/ டி3ம்பு4டை3/ யஸோ1த3/-ஒடி3னி/
கம்பத்தினுள்ளும்/ தரு/ மறைவிலும்/ குழவியாக/ யசோதை/ மடியிலும்/
த3ம்பு4டை3/ முசுகுந்து3னி/ டா3ஸி/ மருகு3சு/
ஏய்ப்போனாக/ முசுகுந்தனை/ நெருங்கி/ மறைந்து/
ஸம்ப4விஞ்சி/ யுக3 யுக3முன/ ஸரஸ/ த்யாக3ராஜ/ வினுத/
தோன்றி/ ஒவ்வோர் யுகத்திலும்/ இனியோனே/ தியாகராசன்/ போற்றும்/
கும்ப4க/ ரேசக/ விது3லனு/ கோரி/ ப்3ரோசினாவு/ நா(வல்ல)/
கும்பகம்/ இரேசகத்தில்/ வல்லோரை/ வலியச் சென்று/ காத்தாய்/ என்னால்/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இந்த கீர்த்தனையின் ராகம் 'ஹரி காம்போ4ஜி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
3 - (வல்ல) - நா(வல்ல).
5 - முசுகுந்து3னி - முகுந்து3னி - முதுகுந்து3னி : முசுகுந்து3னி என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
5 - முசுகுந்த3 - முசுகுந்தன் - இரகு குலத்தோன்றல் - முசுகுந்தனின் கதைச் சுருக்கம்
முசுகுந்தனின் முழு கதையும் பாகவத புராணம், 10-வது புத்தகம், 51-வது அத்தியாயத்தில் 51 காணலாம். மேலும், முசுகந்தன், சிவத்தொண்டன் என்றும் கூறப்படுகின்றது. முசுகுந்தனால் விடங்கத் தலங்கள் தோன்றின. திருவாரூர் ஒரு விடங்கத் தலமாகும்.
6 - ஸம்ப4விஞ்சி யுக3 யுக3முன - ஒவ்வோர் யுகத்திலும் தோன்றி - கண்ணன், கீதையில் (அத்தியாயம் 4, செய்யுள் 4) கூறிய, மிக்கு பிரபலமான, 'ஸம்ப4வாமி யுகே3 யுகே3' என்ற சொற்களை தியாகராஜர் வலியுறுத்துகின்றார்.
Top
விளக்கம்
1 - ப்3ரோவு - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சொல் தனித்து நிற்கின்றது. 'ப்3ரோவு' என்பதற்கு பதிலாக 'ப்3ரோவ' என்றிருந்தால், பல்லவியுடன் இணைத்து, 'என்னால் காக்க முடியாதெனாதே' என்று பொருள் கொள்ளலாம்.
2 - (நீ)வல்ல - எல்லா புத்தகங்களிலும் 'நீ' என்ற சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.
4 - த3ம்பு4டை3 முசுகுந்து3னி - எல்லா புத்தகங்களிலும் 'த3ம்பு4டை3ன முசுகுந்து3னி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில், 'செருக்குடைத்த முசுகுந்தனை' என்றும், மற்றதனில், 'ஆடம்பர முசுகுந்தனை' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. முசுகுந்தனின் வரலாற்றிலிருந்து, அவன் மிகவும் நற்பண்புகளுடைத்தவன் என்பது தெரியவருகின்றது. எனவே 'த3ம்பு4டை3ன' என்பது முசுகுந்தனின் அடைமொழியாகாது.
'த3ம்ப4' என்ற சொல்லுக்கு 'ஏய்த்தல்' என்று பொருளாகும். தேவர்களுக்காக பலகாலம் போரிட்டு, களைப்புற்று, நீண்டகாலம் உறங்க வரம் வேண்டி, அங்ஙனமே உறங்கிக்கொண்டிருந்த முசுகுந்தனுக்கு, அருள்புரிய வேண்டி, 'காலயவன்' என்ற அரக்கனை அவனை எழுப்பும்படி செய்து, அதனால், காலயவனை முசுகுந்தன் விழித்தெழுந்து, எரிக்கச் செய்து, அவனுக்கு (முசுகுந்தனுக்கு) கண்ணன் அருள்புரிந்தான். எனவே, முசுகுந்தனை, அருள்புரிவதற்காக ஏய்த்தது கண்ணனாகும். எனவே 'த3ம்பு4' என்ற சொல் கண்ணனுக்கே பொருந்தும்.
இவ்விடத்தில் சரியான பொருள் கொள்வதற்கு, 'த3ம்பு4டை3' - அதாவது 'ஏய்ப்போனாக' என்றிருக்கவேண்டும். எனவே 'த3ம்பு4டை3ன' என்ற சொல்லிலிருந்து 'ன' என்ற எழுத்தினை நீக்கி, இங்கு ஏற்கப்பட்டது.
கம்பத்தினில் - நரசிங்கமாக, பிரகலாதனுக்காக
தரு மறைவினில் - ராமனாக, சுக்கிரீவனுக்காக
கும்பகம், இரேசகம் - யோக முறை மூச்சடக்கல், விடல்
Top
Updated on 25 Sep 2009
2 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
(நீ)வல்ல நாடி ப4க்த சரிதமெல்ல- இதற்கு “உன்னால்/ அந்நாள்/ தொண்டர்/ சரிதம்/ எல்லாம்/ எழுதப்பட்டது/ ஏனய்யா” என்று பொருள் கொடுத்துள்ளீர். ‘தொண்டர் சரிதம் எல்லாம் எழுதியவன் நீ என்று தவறாக இதற்குப் பொருள் கொள்ளலாம்.
திருப்பதி திருமலை தேவஸ்தான வெளியீட்டில் ”அல்லநாடி ப4க்த சரிதமெல்ல” என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் சரியென்று நான் எண்ணுகிறேன். அல/அல்ல என்றால் அந்த என்னும் பொருளல்லவா?
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'அல்ல நாடி' என்பது இவ்விடத்தில் பொருந்தும். ஆனால் எந்த புத்தகத்திலும், 'அல்ல நாடி' என்று கொடுக்கப்படவில்லை. எல்லா புத்தகங்களிலும் '(நீ)வல்ல நாடி' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பொருள் பொருத்தமாகத்தான் இருக்கின்றது. இறைவன் புவியில் அவதரித்து லீலைகள் புரிந்ததனால்தானே அந்த புராணங்கள் எழுதப்பட்டன? அதனால் 'உன்னால் எழுதப்பட்டன' என்பது சரியான பொருளாகும். எனக்குத் தெரிந்தவரை, 'தொண்டர் சரிதம் எழுதியவன் நீ' என்று பொருள் கொள்ள வாய்ப்பில்லை என்று நம்புகின்றேன். அப்படி யாராவது பொருள் கொண்டால் அது அவர்களுடைய தவறாகும்.
எனவே, இல்லாத சொல்லை எப்படி புகுத்துவது?
வணக்கம்
வே கோவிந்தன்
Post a Comment