ரங்க3 நாயக ரக்ஷிம்புமய்ய
ரச்ச ஸேயனேல 1ரகு4 வம்ஸ1 நாத2
அனுபல்லவி
2பங்கஜா ரமண ப4வ தாரக ஸ்ரீ
ரங்க3 புராதீ4ஸ1 ஸ்1ரு2ங்கா3ர நிலய (ரங்க3)
சரணம்
கால ஹரணமேல கருணாலவால
சால நம்மிதினி ஸ1ரணம்பு3 நீவே
நீல நீரதா3ப4 நிருபம கா3த்ர
ஸீ1ல த்யாக3ராஜ நுத 3போ4கி3 ஸா1யீ (ரங்க3)
பொருள் - சுருக்கம்
- காவுமய்யா; தகராறு செய்வதேன்?
- காலத் தாமதமேன்?
- மிக்கு நம்பினேன்; புகல் நீயே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரங்க3/ நாயக/ ரக்ஷிம்புமு/-அய்ய/
அரங்க/ நாயகா/ காவும்/ அய்யா/
ரச்ச/ ஸேய/-ஏல/ ரகு4/ வம்ஸ1/ நாத2/
தகராறு/ செய்வது/ ஏன்/ இரகு/ குல/ தெய்வமே/
அனுபல்லவி
பங்கஜா/ ரமண/ ப4வ/ தாரக/
இலக்குமி/ மணாளா/ பிறவிக் கடலை/ தாண்டுவிப்போனே/
ஸ்ரீ/ ரங்க3/ புர/-அதீ4ஸ1/ ஸ்1ரு2ங்கா3ர/ நிலய/ (ரங்க3)
திரு/ அரங்க/ நகர/ தலைவா/ சிங்காரத்தின்/ உறைவிடமே/
சரணம்
கால/ ஹரணமு/-ஏல/ கருணா/-ஆலவால/
கால/ தாமதம்/ ஏன்/ கருணை/ கடலே/
சால/ நம்மிதினி/ ஸ1ரணம்பு3/ நீவே/
மிக்கு/ நம்பினேன்/ புகல்/ நீயே/
நீல/ நீரத3/-ஆப4/ நிருபம/ கா3த்ர/
நீல/ முகிலின்/ பொலிவுடையோனே/ ஈடற்ற/ மாட்சிமையோனே/
ஸீ1ல/ த்யாக3ராஜ/ நுத/ போ4கி3/ ஸா1யீ/ (ரங்க3)
நற்குணத்தோனே/ தியாகராசன்/ போற்றும்/ அரவு/ அணையோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - போ4கி3 ஸா1யீ - போ4கி3 ஸா1யி.
மேற்கோள்கள்
1 -ரகு4 வம்ஸ1 நாத2 - திருவரங்கத் தல புராணம் நோக்கவும்.
Top
விளக்கம்
2 - பங்கஜா - பங்கயம் : 'இலக்குமி' என்று புத்தகங்களில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு அப்படியொரு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில், இந்த கிருதி, தியாகராஜர் இயற்றினாரா என்பது ஐயத்திற்குரியதாகக் கூறப்பட்டுள்ளது.
Top
Updated on 15 Sep 2009
No comments:
Post a Comment