ராம ஸ்ரீ ராம லாலி ஊகு3சு க4ன
ஸ்1யாம நனு ப்3ரோவு லாலி (ராம)
சரணம்
சரணம் 1
சால பாலிந்து லாலி மீக3ட3 வென்ன
பாலு த்ராகி3ந்து லாலி 1ஸ1ய்யபைனி மல்லெ
பூல பரது லாலி வரமைன
2விடெ3லனொஸகெ3த3 லாலி ஓ 3வனமாலி (ராம)
சரணம் 2
காசி ஸேவிந்து லாலி ஸே1ஷ தல்பமு-
நூசி பாடு3து3 லாலி ஏகாந்தமுன
தா3சி பூஜிந்து லாலி 4ஏ-வேள நின்னு
5ஜூசியுப்பொங்கெ3த3 லாலி ஓ வனமாலி (ராம)
சரணம் 3
வேத3 வேத்3யமா லாலி கன்னுல
ஜூட3வே த3யா நிதி4 லாலி நாது3ரமுன நீ
பாத3முலுஞ்சு லாலி ஸ்ரீ த்யாக3ராஜ
மோத3 ரூபமா லாலி ஓ வனமாலி (ராம)
பொருள் - சுருக்கம்
- ஸ்ரீ ராமா! தாலேலோ!
- கார்முகில் வண்ணா! தாலேலோ!
- ஓ வனமாலி! தாலேலோ!
- மறைகளில் அறியப்படுவோனே, தாலேலோ!
- கருணைக் கடலே, தாலேலோ!
- தியாகராசனின் களிப்பின் வடிவே, தாலேலோ!
- தாலாட்டு ஆடிக்கொண்டு, என்னைக் காப்பாய்; தாலேலோ!
- மிக்குச் சீராட்டுவேன், தாலேலோ!
- ஏடு, வெண்ணெய், பால் ஊட்டுவேன், தாலேலோ!
- மெத்தை மீது மல்லிகை மலர் விரிப்பேன், தாலேலோ!
- உயர் வீடிகையளித்தேன், தாலேலோ!
- காத்திருந்து சேவிப்பேன், தாலேலோ!
- அரவணையை ஆட்டிப் பாடுவேன், தாலேலோ!
- தனிமையில் மறைத்துத் தொழுவேன், தாலேலோ!
- எவ்வேளையும் உன்னைக் கண்டு களிப்புற்றேன், தாலேலோ!
- கண்களால் நோக்குவாய், தாலேலோ!
- எனது மார்பினிலுனது திருவடிகளைப் பதிப்பாய், தாலேலோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸ்ரீ ராம/ லாலி/ ஊகு3சு/ க4ன/
ராமா/ ஸ்ரீ ராமா/ தாலாட்டு/ ஆடிக்கொண்டு/ கார்முகில்/
ஸ்1யாம/ நனு/ ப்3ரோவு/ லாலி/ (ராம)
வண்ணா/ என்னை/ காப்பாய்/ தாலேலோ/
சரணம்
சரணம் 1
சால/ பாலிந்து/ லாலி/ மீக3ட3/ வென்ன/
மிக்கு/ சீராட்டுவேன்/ தாலேலோ/ ஏடு/ வெண்ணெய்/
பாலு/ த்ராகி3ந்து/ லாலி/ ஸ1ய்யபைனி/ மல்லெ/
பால்/ ஊட்டுவேன்/ தாலேலோ/ மெத்தை மீது/ மல்லிகை/
பூல/ பரது/ லாலி/ வரமைன/
மலர்/ விரிப்பேன்/ தாலேலோ/ உயர்/
விடெ3லனு/-ஒஸகெ3த3/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
வீடிகை/ அளித்தேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/
சரணம் 2
காசி/ ஸேவிந்து/ லாலி/ ஸே1ஷ/ தல்பமுனு/-
காத்திருந்து/ சேவிப்பேன்/ தாலேலோ/ (சேடன்) அரவு/ அணையை/
ஊசி/ பாடு3து3/ லாலி/ ஏகாந்தமுன/
ஆட்டி/ பாடுவேன்/ தாலேலோ/ தனிமையில்/
தா3சி/ பூஜிந்து/ லாலி/ ஏ-வேள/ நின்னு/
மறைத்து/ தொழுவேன்/ தாலேலோ/ எவ்வேளையும்/ உன்னை/
ஜூசி/-உப்பொங்கெ3த3/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
கண்டு/ களிப்புற்றேன்/ தாலேலோ/ ஓ வனமாலி/
சரணம் 3
வேத3/ வேத்3யமா/ லாலி/ கன்னுல/
மறைகளில்/ அறியப்படுவோனே/ தாலேலோ/ கண்களால்/
ஜூட3வே/ த3யா/ நிதி4/ லாலி/ நாது3/-உரமுன/ நீ/
நோக்குவாய்/ கருணை/ கடலே/ தாலேலோ/ எனது/ மார்பினில்/ உனது/
பாத3முல/-உஞ்சு/ லாலி/ ஸ்ரீ த்யாக3ராஜ/
திருவடிகளை/ பதிப்பாய்/ தாலேலோ/ ஸ்ரீ தியாகராசனின்/
மோத3/ ரூபமா/ லாலி/ ஓ வனமாலி/ (ராம)
களிப்பின்/ வடிவே/ தாலேலோ/ ஓ வனமாலி/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
'ஊகு3சு க4ன ஸ்1யாம நனு ப்3ரோவு லாலி' என்ற பல்லவியின் இச்சொற்கள் அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்படடுள்ளது.
சரணங்கள் 1 மற்றும் 2, சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
1 - ஸ1ய்யபைனி - ஸ1ய்யபை.
2 - விடெ3லனொஸகே3 - விடெ3லனொஸகெ3 - விடெ3லனிச்செத3 : அடுத்த சரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'ஜூசியுப்பொங்கெ3த3' என்ற சொற்களை அனுசரித்து, இங்கு 'விடெ3லனொஸகெ3த3' என ஏற்கப்பட்டது.
4 - ஏ-வேள - ஈ-வேள : இவ்விடத்தல் 'ஏ-வேள' என்பதே மிக்கு பொருந்தும்.
5 - ஜூசியுப்பொங்கெ3த3 - ஜூசியுப்பொங்கே3 : 'ஜூசியுப்பொங்கெ3த3' என்பது மிக்கு பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
3 - வனமாலி - வனமாலை அணிவோன் - விஷ்ணு அணியும் 'வைஜயந்தி மாலை', 'வனமாலை' என்று அழைக்கப்படும். துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை 'வனமாலை' எனப்படும். இறைவன் அணியும் வைஜயந்தி மற்றும் வனமாலைகளைக் குறித்த ஓர் கட்டுரையை நோக்கவும்.
Top
விளக்கம்
Updated on 21 Sep 2009
No comments:
Post a Comment