Thursday, July 23, 2009

தியாகராஜ கிருதி - த3ய ஸேயவய்யா - ராகம் யது3குல காம்போ4ஜி - Daya Seyavayyaa - Raga Yadukula Kambhoji

பல்லவி
3ய ஸேயவய்யா ஸத3ய ராம சந்த்3

அனுபல்லவி
3யனு கொஞ்செமைன நாடு3 தலசுசுன்ன ஸீதா ஸுக2மு (த3ய)

சரணம்
சரணம் 1
க்ஷிதி நாது2ல ராகயு ஸம்மதி லேக ஸ்ரீ ஸாகேத
பதி ராடே3யன வச்சுனனின ஸதிகி கல்கி3னயானந்த3மு (த3ய)


சரணம் 2
செலியரோ நா வலெ நாது2னகு க3லரேமோ ராலேத3னி ஜாலி
தெலிஸி 1ம்ரொக்குகொனி ப்3ரோவு வேள3லிமினினெது3ரைன ஸுக2மு (த3ய)


சரணம் 3
கொஞ்செமீ ரூபமா வில்லு வஞ்ச கூட3க போனோயனி
எஞ்சி ஜாலி ஜெந்த3 மேனு பெஞ்சி கனிபிஞ்சினட்ல (த3ய)


சரணம் 4
எட்டிவாரிகைன தொ3ரகனட்டி ஜனகஜனு பொ3ட்டு
கட்டி கரமு பட்டு வேள காந்தகுன்ன ஸுக2மு தனகு (த3ய)


சரணம் 5
கோரின வாரலனு நேனீ ரீதி ப்3ரோதுனனி ஸப4
வாரலகு தெலிய ஜேயு தா3ரி த்யாக3ராஜுனகு (த3ய)


பொருள் - சுருக்கம்
தயாளா, இராம சந்திரா!
  • (உனது) தயையினை, அன்று எதிர்பார்த்திருந்த சீதை (பெற்ற) சுகத்தினை, சிறிதாகிலும் (எனக்கு) அருளுமய்யா;

  • (மற்ற) புவியாள்வோரின் வருகை சம்மதம் இல்லாது, 'சாகேத பதி வாரானோ'யென (சீதை வினவ), 'வருவான்' என்று (கேட்ட), சதிக்கு உண்டான ஆனந்தத்தினை அருளுமய்யா;

  • 'காதலிகள் என் போன்று நாதனுக்கு உளரோ என்னவோ, (அதனால்) வரவில்லை' யெனும் கவலை தெரிந்து, (சீதை) கும்பிட்டு வேண்டும்போழ்து, (நீ) வலிய எதிர்ப்பட்டதன் சுகத்தினை அருளுமய்யா;

  • சிறிய இவ்வுருவம் (பெரிய) அவ்வில்லினை வளைக்கவியலாமற் போகுமோயென எண்ணி (சீதை) துயருற, (நீ) மேனி பெருக்கிக் காண்பித்தது போன்று அருளுமய்யா;

  • எப்பேர்ப்பட்டவருக்கும் கிடைக்க இயலாத, அத்தகைய சனகன் மகளை, தாலி கட்டி, கைப்பற்றும் வேளை (அப்)பெண்மணிக்குண்டான சுகத்தினை, எனக்கு அருளுமய்யா;

  • '(என்னைக்) கோரியவர்களை நான் இவ்விதமாகக் காப்பேன்' என, அவையோருக்குத் தெரியப்படுத்தும் நெறியினைத் தியாகராசனுக்கு அருளுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய ஸேயவய்யா/ ஸத3ய/ ராம சந்த்3ர/
அருளுமய்யா/ தயாளா/ இராம சந்திரா/


அனுபல்லவி
3யனு/ கொஞ்செமைன/ நாடு3/ தலசுசு/-உன்ன/ ஸீதா/ ஸுக2மு/ (த3ய)
(உனது) தயையினை/ சிறிதாகிலும்/ அன்று/ எதிர்பார்த்து/ இருந்த/ சீதை/ (பெற்ற) சுகத்தினை/ (எனக்கு) அருளுமய்யா...


சரணம்
சரணம் 1
க்ஷிதி/ நாது2ல/ ராகயு/ ஸம்மதி/ லேக/ ஸ்ரீ ஸாகேத/
(மற்ற) புவி/ ஆள்வோரின்/ வருகை/ சம்மதம்/ இல்லாது/ 'ஸ்ரீ சாகேத/

பதி/ ராடே3/-அன/ வச்சுனு/-அனின/ ஸதிகி/ கல்கி3ன/-ஆனந்த3மு/ (த3ய)
பதி/ வாரானோ'/ என (சீதை வினவ)/, 'வருவான்'/ என்று (கேட்ட)/, சதிக்கு/ உண்டான/ ஆனந்தத்தினை/ அருளுமய்யா...


சரணம் 2
செலியரோ/ நா/ வலெ/ நாது2னகு/ க3லரு/-ஏமோ/ ராலேது3/-அனி/ ஜாலி/
'காதலிகள்/ என்/ போன்று/ நாதனுக்கு/ உளரோ/ என்னவோ/ (அதனால்) வரவில்லை'/ யெனும்/ கவலை/

தெலிஸி/ ம்ரொக்குகொனி/ ப்3ரோவு/ வேள/ ப3லிமினி/-எது3ரைன/ ஸுக2மு/ (த3ய)
தெரிந்து/ (சீதை) கும்பிட்டு/ வேண்டும்/ போழ்து/ (நீ) வலிய/ எதிர்ப்பட்டதன்/ சுகத்தினை/ அருளுமய்யா...


சரணம் 3
கொஞ்செமு/-ஈ/ ரூபமு/-ஆ/ வில்லு/ வஞ்ச/ கூட3க/ போனோ/-அனி/
சிறிய/ இந்த/ உருவம்/ (பெரிய) அந்த/ வில்லினை/ வளைக்க/ இயலாமற்/ போகுமோ/ என/

எஞ்சி/ ஜாலி ஜெந்த3/ மேனு/ பெஞ்சி/ கனிபிஞ்சின/-அட்ல/ (த3ய)
எண்ணி/ (சீதை) துயருற/ (நீ) மேனி/ பெருக்கி/ காண்பித்தது/ போன்று/ அருளுமய்யா...


சரணம் 4
எட்டிவாரிகைன/ தொ3ரகனி/-அட்டி/ ஜனகஜனு/ பொ3ட்டு/
எப்பேர்ப்பட்டவருக்கும்/ கிடைக்க இயலாத/ அத்தகைய/ சனகன் மகளை/ தாலி/

கட்டி/ கரமு/ பட்டு/ வேள/ காந்தகு/-உன்ன/ ஸுக2மு/ தனகு/ (த3ய)
கட்டி/ கை/ பற்றும்/ வேளை/ (அப்)பெண்மணிக்கு/ உண்டான/ சுகத்தினை/ எனக்கு/ அருளுமய்யா...


சரணம் 5
கோரின வாரலனு/ நேனு/-ஈ/ ரீதி/ ப்3ரோதுனு/-அனி/
'(என்னைக்) கோரியவர்களை/ நான்/ இந்த/ விதமாக/ காப்பேன்'/ என/

ஸப4 வாரலகு/ தெலிய ஜேயு/ தா3ரி/ த்யாக3ராஜுனகு/ (த3ய)
அவையோருக்கு/ தெரியப்படுத்தும்/ நெறியினை/ தியாகராசனுக்கு/ அருளுமய்யா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ம்ரொக்குகொனி ப்3ரோவு வேள - இச்சொற்கள் 'கும்பிட்டு வேண்டும் போழ்து' என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், இவ்விடத்தில், 'ப்3ரோவு' என்ற சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை.

இப்பாடலில், தியாகராஜர் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் - (1) ஸ்வயம்வரத்திற்கு (மணாளனை மணப்பெண் தேர்ந்தெடுத்தல்) முன்னமே, சீதை ராமனின் வரவினை எதிர்நோக்குதல்; (2) ராமன் வருவானோ, மாட்டானோ என்று சீதை ஐயப்படுதல்; (3) ராமன் வில்லை வளைக்க முடியுமோ, முடியாதோ என கவலையுறுதல்; - இவை எதுவுமே வால்மீகி ராமாயணத்தில் கிடையாது. வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயங்கள் 66 மற்றும் 67 நோக்கவும்.

கம்பராமாயணத்தில் கூட, கம்பர், ராமன், இலக்குவன் மற்றும் விசுவாமித்திர முனிவருடன், மிதிலை நகருள் புகுந்தறுவாயில், சீதை தன்னுடைய தோழிகளுடன், உப்பரிகையில் நின்றிருந்ததாகவும், அவ்வமயம், இருவருடைய கண்களும் சந்தித்ததனை. 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' என்று, எதிர்பாராத விதமான சந்திப்பாக விவரிக்கின்றார்.

எனவே இங்கு கூறப்பட்டவை யாவும் தியாகராஜருடைய கற்பனையாகவே கொள்ளவேண்டும்.

Top

இந்த பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்னும் நாட்டிய நாடகத்தினில், பிரகலாதன், தனக்கும், சீதைக்குக் கிடைத்த இன்பம் கிட்டவேண்டுமென, வேண்டுவதாக உள்ளது. ராமாயணம் பிரகலாதனுடைய சரிதத்திற்குப் பின்பட்டது என்பது ஒருபுறமிருக்க, இப்பாடல், தியாகராஜர், தன்னை பிரகலாதனுடைய பாத்திரத்தினில் இருத்திப் பாடுவதைவிட, பிரகலாதன், தியாகராஜரின் மனப்பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட மனோ நிலையை, இந்த நாட்டிய நாடகத்தின் பல கீர்த்தனைகளில் காணலாம்.

சாகேத பதி - இராமன்

சதி - மனைவி

மேனி பெருக்கி - வல்லமையை வெளிப்படுத்தல்

Top


Updated on 23 Jul 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
” எனவே இங்கு கூறப்பட்டவை யாவும் தியாகராஜருடைய கற்பனையாகவே கொள்ளவேண்டும்.” என்று தாங்கள் கூறியுள்ளீர். ஆனந்தாராமாயணத்திலோ அத்யாத்மராமாயணத்திலோ இவற்றைப்படித்த ஞாபகம். அதே போல் ‘மாஜானகி செட்டபட்டக எனும் பாடலில் வரும் ‘மாயாகாரமுனிசி ஸிகிசெந்தனே’ என்பதுவும் இவ்விரண்டில் ஒன்றில் உள்ளது என்று எண்ணுகிறேன்.
சரணம் 2
செலியரோ நா வலெ நாது2னகு க3லரேமோ ராலேத3னி ஜாலி -- தான் இராமனின் காதலி என்று எண்ணுவதாகப் பொருளா? அவ்வாறெனின் கம்பர் கூறிய ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்பதன் அடிப்படையில் தியாகராஜர் பாடினாரா?
இதையே ’நாவலெ” என்பதனைக் குதர்க்கமாகத் திரித்து ‘எனக்குக் காதலர்கள் உள்ளது போல் இராமனுக்குக் காதலிகள் உளரோ’ என்றும் கொள்ளலாமா?
கொஞ்செமீ ரூபமா வில்லு –ரூபமு +ஆ என்பது ரூபமுயா என்று ஆகாதா.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்த கீர்த்தனையில் கூறிய சம்பவங்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா எனத்தெரியவில்லை. திரு TS வாசுதேவன் மற்றும் AK கோபாலன் அவர்களின் 'ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்' என்ற புத்தகத்தில், இச்சம்பவங்கள் 'தியாகராஜரின் கற்பனைத் திறனுக்குச் சான்று' என்று கூறப்பட்டுள்ளது.

'மா ஜானகி செட்ட பட்ட' என்ற கீர்த்தனையில் உள்ள 'ஸி1கி2 செந்தனே' என்பது, அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளது என்று நான் அந்த கீர்த்தனையின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

சீதை, ராமனை எண்ணிக்கொண்டிருந்தாள் என்று தியாகராஜர் கூறுகின்றார். எனவே தாங்கள் கூறிய 'குதர்க்கம்' பொருந்தாது.

'சந்தி விதிகள்' பல கீர்த்தனைகளில் மீறப்பட்டுள்ளதாக நான் எண்ணுகின்றேன்.

வணக்கம்,
கோவிந்தன்.