ராம நீவே கானி நன்னு ரக்ஷிஞ்சு 1வாரெவ்வரே
அனுபல்லவி
ஸோம ஸூர்ய லோசன ஸுந்த3ர வத3ன ஸ்ரீ (ராம)
சரணம்
சரணம் 1
தாத 2வசன பால புருஹூதாத்3யமர
பாரிஜாத ஸௌமித்ரிதோ ஸீதா ரமணிதோ வெலஸின (ராம)
சரணம் 2
தா4ரா-த4ராப4 ஸ1ரீர 3பா4வஜ
ஸுகுமார ஸாகேத புர விஹார நன்னேலுகோர (ராம)
சரணம் 3
நாக3 ஸ1யன முனி 4யாக3 பாலன ப4க்த
பா4க3தே4ய பாவன த்யாக3ராஜ ஸன்னுத (ராம)
பொருள் - சுருக்கம்
- இராமா! மதி பரிதிக் கண்களோனே! எழில் வதனத்தோனே!
- தந்தை சொல் காத்தோனே! இந்திரன் முதலான அமரருக்குப் பாரிசாதமே! இலக்குவனுடனும் அழகி சீதையுடனும் ஒளிர்ந்த இராமா!
- கார்முகில் நிகருடலோனே! காமன் நிகர் இளைஞனே! சாகேத நகருறையே!
- அரவணையோனே! முனி வேள்வி காத்தோனே! தொண்டரின் பேறே! தூயோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- உன்னையன்றி என்னைக் காப்பவரெவரே?
- என்னையாள்வாயய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நீவே/ கானி/ நன்னு/ ரக்ஷிஞ்சு வாரு/-எவ்வரே/
இராமா/ உன்னை/ அன்றி/ என்னை/ காப்பவர்/ எவரே/
அனுபல்லவி
ஸோம/ ஸூர்ய/ லோசன/ ஸுந்த3ர/ வத3ன/ ஸ்ரீ/ (ராம)
மதி/ பரிதி/ கண்களோனே/ எழில்/ வதனத்தோனே/ ஸ்ரீ/ ராமா...
சரணம்
சரணம் 1
தாத/ வசன/ பால/ புருஹூத/-ஆதி3/-அமர/
தந்தை/ சொல்/ காத்தோனே/ இந்திரன்/ முதலான/ அமரருக்கு/
பாரிஜாத/ ஸௌமித்ரிதோ/ ஸீதா/ ரமணிதோ/ வெலஸின/ (ராம)
பாரிசாதமே/ இலக்குவனுடனும்/ சீதை/ அழகியுடனும்/ ஒளிர்ந்த/ இராமா...
சரணம் 2
தா4ரா-த4ர/-ஆப4/ ஸ1ரீர/ பா4வஜ/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/ காமன் நிகர்/
ஸுகுமார/ ஸாகேத/ புர/ விஹார/ நன்னு/-ஏலுகோர/ (ராம)
இளைஞனே/ சாகேத/ நகர்/ உறையே/ என்னை/ ஆள்வாயய்யா/
சரணம் 3
நாக3/ ஸ1யன/ முனி/ யாக3/ பாலன/ ப4க்த/
அரவு/ அணையோனே/ முனி/ வேள்வி/ காத்தோனே/ தொண்டரின்/
பா4க3தே4ய/ பாவன/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ராம)
பேறே/ தூயோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வாரெவ்வரே - வாரெவ்வரே ஸ்ரீ
2 - வசன பால - வசன பரிபால
4 - யாக3 பாலன - யாக3 பரிபாலன
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - பா4வஜ ஸுகுமார - காமன் நிகர் இளைஞனே - 'காமனை மைந்தனாயுடையோனே' எனவும் கொள்ளலாம்.
பாரிசாதம் - விரும்பியதை யளிக்கும் வானோர் தரு
முனி வேள்வி - விசுவாமித்திரர் இயற்றிய வேள்வி
Top
Updated on 10 Jun 2009
No comments:
Post a Comment