Sunday, June 7, 2009

தியாகராஜ கிருதி - த3ர்ஸ1னமு ஸேய - ராகம் நாராயண கௌ3ள - Darsanamu Seya - Raga Narayana Gaula

பல்லவி
3ர்ஸ1னமு ஸேய நா தரமா

அனுபல்லவி
பராமர்ஸி1ஞ்சி நீவு நனு மன்னிஞ்சவலெனு ஸி1வ (த3ர்ஸ1)

சரணம்
சரணம் 1
கோ3புரம்பு3லனு 1கடு3 கொ3ப்ப கம்ப3முல 2பூ4-
ஸ்தா2பிதம்ப3கு3 ஸி1லல
3தருணுல ஆடலனு
தீ3பால வருஸலனு தி3வ்ய வாஹனமுலனு
பாப ஹர ஸேவிஞ்சி 43ஹிர்முகு2டை3தி ஸி1வ (த3ர்ஸ1)


சரணம் 2
தரலி 5பதி3யாரு ப்ரத3க்ஷிணமுலொனரிஞ்சி
பர நிந்த3 வசனமுல பா3கு3கா3னாடு3சுனு
ஒருல பா4மல ஜூசியுப்பொங்கி3தினி கானி
வர ஸி1வாக்ஷர யுக3 ஜபமு ஸேயனைதி ஸி1வ (த3ர்ஸ1)


சரணம் 3
ஹாடக ஸமம்பை3ன அத்3பு4தாக்ரு2தினி நே
நாட ஜேஸுகொனி ஹ்ரு2ந்நாளீகமுனனு மாடி
மாடிகி ஜூசி மை மரசியுண்டு3னதி3-
யாடலா 6த்யாக3ராஜார்சித பாத3 ஸி1வ (த3ர்ஸ1)


பொருள் - சுருக்கம்
பாவம் களைவோனே! தியாகராசனால் தொழப் பெற்றத் திருவடியோனே!
  • சிவ தரிசனம் செய்ய எனக்குக் கூடுமா?


  • ஆலோசித்து, நீயென்னை மன்னிக்கவேணும்.


  • கோபுரங்களையும், மிக்குப் புனித கம்பங்களையும், பூமியில் நாட்டப்பட்ட சிலைகளையும், மகளிர் ஆட்டங்களையும், தீபங்களின் வரிசைகளையும், திவ்விய வாகனங்களையும், சேவித்து வெளி நோக்குடையோனாகினேன்.


  • தரளி, பதினாறு சுற்றுவலம் வந்து, பிறரைத் தூற்று மொழிகளை நன்கு பகன்று, பிறர் மனைவியரைக் கண்டு களித்தேனேயன்றி, புனித 'சிவ' யெனும் ஈரெழுத்தினைச் செபம் செய்தேனிலன்.


  • பொன்னிகர் அற்புத வடிவினை நான் (உள்ளத்தினில்) நாட்டச் செய்துகொண்டு, இதயக்கமலத்தினில் திரும்பத்திரும்ப கண்டு, மெய்ம்மறந்திருத்தல் விளையாட்டா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ர்ஸ1னமு/ ஸேய/ நா/ தரமா/
தரிசனம்/ செய்ய/ எனக்கு/ கூடுமா/?


அனுபல்லவி
பராமர்ஸி1ஞ்சி/ நீவு/ நனு/ மன்னிஞ்ச/ வலெனு/ ஸி1வ/ (த3ர்ஸ1)
ஆலோசித்து/ நீ/ என்னை/ மன்னிக்க/ வேணும்/ சிவ/ தரிசனம்...


சரணம்
சரணம் 1
கோ3புரம்பு3லனு/ கடு3/ கொ3ப்ப/ கம்ப3முல/ பூ4/-
கோபுரங்களையும்/ மிக்கு/ புனித/ கம்பங்களையும்/ பூமியில்/

ஸ்தா2பிதம்ப3கு3/ ஸி1லல/ தருணுல/ ஆடலனு/
நாட்டப்பட்ட/ சிலைகளையும்/ மகளிர்/ ஆட்டங்களையும்/

தீ3பால/ வருஸலனு/ தி3வ்ய/ வாஹனமுலனு/
தீபங்களின்/ வரிசைகளையும்/ திவ்விய/ வாகனங்களையும்/

பாப/ ஹர/ ஸேவிஞ்சி/ ப3ஹிர்/-முகு2டு3/-ஐதி/ ஸி1வ/ (த3ர்ஸ1)
பாவம்/ களைவோனே/ சேவித்து/ வெளி/ நோக்குடையோன்/ ஆகினேன்/ சிவ/ தரிசனம்...


சரணம் 2
தரலி/ பதி3யாரு/ ப்ரத3க்ஷிணமுலு/-ஒனரிஞ்சி/
தரளி/ பதினாறு/ சுற்றுவலம்/ வந்து/

பர/ நிந்த3/ வசனமுல/ பா3கு3கா3னு/-ஆடு3சுனு/
பிறரை/ தூற்று/ மொழிகளை/ நன்கு/ பகன்று/

ஒருல/ பா4மல/ ஜூசி/-உப்பொங்கி3தினி/ கானி/
பிறர்/ மனைவியரை/ கண்டு/ களித்தேனே/ யன்றி/

வர/ ஸி1வ/-அக்ஷர/ யுக3/ ஜபமு/ ஸேயனைதி/ ஸி1வ/ (த3ர்ஸ1)
புனித/ 'சிவ' யெனும்/ எழுத்து/ இரண்டினை/ செபம்/ செய்தேனிலன்/ சிவ/ தரிசனம்...


சரணம் 3
ஹாடக/ ஸமம்பை3ன/ அத்3பு4த/-ஆக்ரு2தினி/ நே/
பொன்/ நிகர்/ அற்புத/ வடிவினை/ நான்/

நாட/ ஜேஸுகொனி/ ஹ்ரு2த்/-நாளீகமுனனு/ மாடி/
(உள்ளத்தினில்) நாட்ட/ செய்துகொண்டு/ இதய/ கமலத்தினில்/ திரும்ப/

மாடிகி/ ஜூசி/ மை/ மரசி/-உண்டு3னதி3/-
திரும்ப/ கண்டு/ மெய்/ மறந்து/ இருத்தல்/

ஆடலா/ த்யாக3ராஜ/-அர்சித/ பாத3/ ஸி1வ/ (த3ர்ஸ1)
விளையாட்டா/ தியாகராசனால்/ தொழப் பெற்ற/ திருவடியோனே/ சிவ/ தரிசனம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி, பல்லவியுடன் இணைக்கப்பட்டுள்ளது

6 - த்யாக3ராஜார்சித பாத3 - த்யாக3ராஜார்சித ஸுபாத3

Top

மேற்கோள்கள்
4 - 3ஹிர்முகு2டை3தி - வெளிநோக்குடையோனாகினேன் -

"மனத்தினை வெளி நாட்டங்கொள்ளாமல் செய்து, உள்ளத்தினில் இருத்துதல், 'உள்நோக்கு' என்றும், அங்ஙனமின்றி, மனத்தினை வெளி நாட்டங்களில் செல்லவிடுதல், 'வெளி நோக்கு' என்றும் கூறப்பட்டும்." ரமண மகரிஷியின் 'நான் யார்' என்னும் உபதேசம்.

லலிதா ஸஹஸ்ர நாமம் (871) ப3ஹிர்-முக2 ஸு-து3ர்லபா4 - எவளுடைய வழிபாடு மனத்தின் நோக்கினை வெளிப்புறம் செலுத்துவோருக்குக் கடினமோ. (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
1 - கடு3 கொ3ப்ப கம்ப3முல - புனித கம்பங்கள் - கொடிக் கம்பம் - கொடிக் கம்பத்தின் தரிசனம் இறைவனின் தரிசனத்திற்குச் சமமாகக் கருதப்படும்

2 - பூ4-ஸ்தா2பிதம்ப3கு3 ஸி1லல - பூமி்யில் நாட்டப்பட்ட சிலைகளை - இதனை, மூன்றாவது சரணத்தில், தியாகராஜர் கூறியுள்ள "அற்புத வடிவினை நான் (உள்ளத்தினில்) நாட்டச் செய்துகொண்டு, இதயக்கமலத்தினில் திரும்பத்திரும்ப கண்டு, மெய்ம்மறந்திருத்தல் விளையாட்டா?" என்பதுடன் சேர்த்து நோக்கினால், கோயிலில், இறைவன், இறை வடிவமாகவோ, அன்றி கல்வடிவமாகவோ தோன்றுதல் ஏனென விளங்கும்.

திருமூலர் திருமந்திரத்தினில் கூறுவது யாதெனில் -

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்து பார்-முதற்-பூதமே
பரத்தின் மறைந்தது பார்-முதற்-பூதமே(2290)

(மர யானையில்) மரத்தினைக் கண்டால், யானை இல்லை; யானையைக் கண்டால், மரமில்லை;
ஐம்பூதங்களைக் கண்டால், பரம் இல்லை; பரத்தினை நினைத்தால், ஐம்பூதங்களில்லை.
(Dr. B நடராஜன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)

கோயில் வழிபாடு ஏன்? எப்படி? என்பது பற்றிய காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்.

Top

3 - தருணுல ஆடலனு - சில காலத்திற்கு முன்னர் வரை, கோயில்களில் நடமிட நியமிக்கப் பெற்ற 'தேவதாசி'கள் எனப்படும் நடன மங்கையர்.

5 - பதி3யாரு ப்ரத3க்ஷிணமுல - மேற்கூறிய 'கோயில் வழிபாடு ஏன்?, எப்படி?' என்பது பற்றிய காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்.

தரளுதல் - அசைந்தாடுதல்

Top


Updated on 07 Jun 2009

No comments: