Sunday, April 26, 2009

தியாகராஜ கிருதி - ஸரஸ ஸாம தா3ன - ராகம் காபி நாராயணி - Sarasa Saama Daana - Raga Kaapi Narayani

பல்லவி
ஸரஸ 1ஸாம தா3ன பே433ண்ட3 சதுர
ஸாடி தை3வமெவரே ப்3ரோவவே

அனுபல்லவி
பரம ஸா1ம்ப4வாக்3ரேஸருண்ட3கு3சு2
பல்கு ராவணுடு3 தெலிய லேக போயெ (ஸரஸ)

சரணம்
ஹிதவு மாடலெந்தோ பா33 பல்கிதிவி
3ஸதமுகா3னயோத்4யனித்துனண்டிவி
நத ஸஹோத3ருனி ராஜு சேஸி ராக
ஹதமு ஜேஸிதிவி த்யாக3ராஜ நுத (ஸரஸ)


பொருள் - சுருக்கம்
  • சமாதானம், கொடை, பிளவு, தண்டனை ஆகிய நான்கிலும் வல்ல இனியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உனக்கு நிகர் தெய்வமெவருளர்?

  • காப்பாய்.

  • உயர் சம்புவின் அடியார்களில் தலைசிறந்தோனாகியும், (உனது) சொற்களை இராவணன் அறியாமற் போனானே!

    • இதமான சொற்களெத்தனையோ நன்கு பகர்ந்தாய்;

    • என்றைக்கும் அயோத்தியையும் அளிப்பேனென்றாய்;

    • பணிந்த சோதரனை அரசனாக்கியும் (வழிக்கு) வராமற் போக, (அவனை) வதைத்தாய்;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரஸ/ ஸாம/ தா3ன/ பே43/ த3ண்ட3/ சதுர/
இனிய/ சமாதானம்/ கொடை/ பிளவு/ தண்டனை/ (ஆகிய நான்கிலும்) வல்லோனே/

ஸாடி/ தை3வமு/-எவரே/ ப்3ரோவவே/
(உனக்கு) நிகர்/ தெய்வம்/ எவருளர்/ காப்பாய்/


அனுபல்லவி
பரம/ ஸா1ம்ப4வ/-அக்3ரேஸருண்டு3/-அகு3சு/
உயர்/ சம்புவின் அடியார்களில்/ தலைசிறந்தோன்/ ஆகியும்/

பல்கு/ ராவணுடு3/ தெலிய லேக/ போயெ/ (ஸரஸ)
(உனது) சொற்களை/ இராவணன்/ அறியாமற்/ போனானே/


சரணம்
ஹிதவு/ மாடலு/-எந்தோ/ பா33/ பல்கிதிவி/
இதமான/ சொற்கள்/ எத்தனையோ/ நன்கு/ பகர்ந்தாய்/

ஸதமுகா3னு/-அயோத்4யனு/-இத்துனு/-அண்டிவி/
என்றைக்கும்/ அயோத்தியையும்/ அளிப்பேன்/ என்றாய்/

நத/ ஸஹோத3ருனி/ ராஜு/ சேஸி/ ராக/
பணிந்த/ சோதரனை/ அரசன்/ ஆக்கியும்/ (வழிக்கு) வராமற் போக/

ஹதமு/ ஜேஸிதிவி/ த்யாக3ராஜ/ நுத/ (ஸரஸ)
(அவனை) வதைத்தாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அக்3ரேஸருண்ட3கு3சு - அக்3ரேஸருண்ட3னுசு : இவ்விடத்தில் 'அக்3ரேஸருண்ட3கு3சு' பொருந்தும்.

3 - ஸதமுகா3னயோத்4யனித்துனு - ஸதமுகா3னயோத்4யனிச்செனு

Top

மேற்கோள்கள்
1 - ஸாம தா3ன பே433ண்ட3 - சமாதானம், கொடை, பிளவு, தண்டனை - பகைவரையணுகுவதில் நான்கு முறைகள் (அரசியல்) - தேவி பாகவதம், புத்தகம் 1, அத்தியாயம் 7 நோக்கவும்

Top

விளக்கம்
1 - ஸாம தா3ன பே433ண்ட3 - இந்த நான்கு முறைகளில், ராமன் 'தானம்' (கொடை) என்ற முறையையும் பயன்படுத்தியதாக தியாகராஜர் கூறுகிறார். ஆனால் பேத (பிளவு) முறையை ராமன் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. விபீடணன், தானாகவே ராமனிடம் சரணடைந்தான். அதன்பேரில், அவனுக்கு ராமன் இலங்கையின் மன்னனாக பட்டம் சூட்டினான். அது பிளவாகாது.

3 - ஸதமுகா3னயோத்4யனித்துனு - என்றைக்கும் அயோத்தியையும் அளிப்பேன் - வால்மீகி ராமாயணத்தில், இதற்கு ஏதும் ஆதாரம் காணப்படவில்லை. அனுமன், சீதையைத் தேடி சென்றபோது, தான், வலிய ராவணனைக் காணச் சென்றான். ஆனால், அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கவில்லை. போர் தொடங்குமுன், வாலியின் மைந்தனாகிய, அங்கதனை ராமன் தூது அனுப்பினான். அப்போதும், அப்படிப்பட்ட வாக்குறுதி ஏதும் தரப்படவில்லை. அதனால், தியாகராஜரின் இந்த கூற்றுக்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை.

சம்பு - சிவன்
சோதரன் - விபீடணன்

Top


Updated on 26 Apr 2009

No comments: