Tuesday, April 21, 2009

தியாகராஜ கிருதி - மனஸா ஸ்ரீ ராமசந்த்3ருனி - ராகம் ஈஸ1 மனோஹரி - Manasaa Sri Ramachandruni - Raga Isa Manohari

பல்லவி
மனஸா ஸ்ரீ ராம சந்த்3ருனி
1மரவகே ஏமரகே ஓ (மனஸா)

அனுபல்லவி
முனு 2புட்டனு புட்டின மௌனி க்ரு2தமௌ
3மூடு3ன்னாரத்4யாயமுல ஜூசுகோ (மனஸா)

சரணம்
ஸ்ரு2ஷ்டி புஷ்டி நஷ்டி ஸேயு பனுலு
நிக்ரு2ஷ்டமனுசுனு 4த்ரிமூர்துலகொஸகி3
துஷ்டுடை3 பரகே3 ஸத்3-ப4க்த
5மனோபீ4ஷ்டமுலிச்சே த்யாக3ராஜ நுதுனி (மனஸா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • இராமசந்திரனை மறவாதே, ஏமாறாதே

  • முன்னம் புற்றனிலுதித்த முனிவனால் இயற்றப்பெற்ற மூன்று மற்றும் ஆறாவது படலங்களை நோக்குவாய்;

  • படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் பணிகள் தாழ்வானவையென,

    • (அவற்றினை) மும்மூர்த்திகளுக்களித்து, களித்திருக்கும்,

    • தூய தொண்டர்களின் மன விழைவுகளினையருளும்,

    • தியாகாராசனால் போற்றப் பெற்றோனை,

  • இராமசந்திரனை மறவாதே, ஏமாறாதே



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸா/ ஸ்ரீ ராம சந்த்3ருனி/
மனமே/ ஸ்ரீ ராமசந்திரனை/

மரவகே/ ஏமரகே/ ஓ/ (மனஸா)
மறவாதே/ ஏமாறாதே/ ஓ/ மனமே...


அனுபல்லவி
முனு/ புட்டனு/ புட்டின/ மௌனி/ க்ரு2தமௌ/
முன்னம்/ புற்றனில்/ உதித்த/ முனிவனால்/ இயற்றப்பெற்ற/

மூடு3ன்னு/-ஆரு/-அத்4யாயமுல/ ஜூசுகோ/ (மனஸா)
மூன்று/ (மற்றும்) ஆறாவது/ படலங்களை/ நோக்குவாய்/


சரணம்
ஸ்ரு2ஷ்டி/ புஷ்டி/ நஷ்டி/ ஸேயு/ பனுலு/
படைத்தல்/ காத்தல்/ அழித்தல்/ செய்யும்/ பணிகள்/

நிக்ரு2ஷ்டமு/-அனுசுனு/ த்ரிமூர்துலகு/-ஒஸகி3/
தாழ்வானவை/ யென/ (அவற்றினை) மும்மூர்த்திகளுக்கு/ அளித்து/

துஷ்டுடை3/ பரகே3/ ஸத்3-/ப4க்த/
களித்து/ இருக்கும்/ தூய/ தொண்டர்களின்/

மன-/அபீ4ஷ்டமுலு-/இச்சே/ த்யாக3ராஜ/ நுதுனி/ (மனஸா)
மன/ விழைவுகளினை/ யருளும்/ தியாகாராசனால்/ போற்றப் பெற்றோனை/ ஓ மனமே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3- அத்4யாயமுல - அத்4யாயமுனு : இவ்விடத்தில் பன்மை தேவைப்படுவதனால், 'அத்4யாயமுல' சரியாகும்.

5 - மனோபீ4ஷ்டமுலிச்சே - மனோபீ4ஷ்டமுலிச்சு

Top

மேற்கோள்கள்
2 - புட்டனு புட்டின மௌனி - புற்றனிலுதித்த முனிவன் - வால்மீகி : வால்மீகி வருணனின் மைந்தனெனவும் அவர் புற்றினில் தோன்றியதாகவும் பாகவத புராணம், 6-வது புத்தகம், அத்தியாயம் 18,செய்யுள் 5 கூறும்

3 - மூடு3ன்னாரத்4யாயமுல - மூன்றாவது படலம் - ஆரணிய காண்டம்; ஆறாவது படலம் - யுத்த காண்டம்

Top

விளக்கம்
1 - மரவகே ஏமரகே - மனத்தினை பெண்பாலில் விளிக்கின்றார்.

4 - த்ரிமூர்துலகொஸகி3 - 'எவரனி நிர்ணயிஞ்சிரிரா' என்ற 'தேவாம்ருத வர்ஷிணி' கீர்த்தனையில், இராமன் மும்மூர்த்திகளுக்கு மேம்பட்டவர் என்று தியாகராஜர் கூறுகின்றார்

மூன்று மற்றும் ஆறாவது படலங்கள் - இராமாயணத்தினைக் குறிக்கும்

Top


Updated on 21 Apr 2009

No comments: