Monday, February 2, 2009

தியாகராஜ கிருதி - கனுகொ3னு - ராகம் நாயகி - Kanugonu - Raga Naayaki

பல்லவி
கனுகொ3னு ஸௌக்2யமு கமலஜுகைன கல்கு3னா
அனுபல்லவி
3னுஜ வைரியகு3 ராமுனி த3ய கல்கி3னயதனி வினா (க)

சரணம்
1தனுவொகசோ மனஸொகசோ தகி3ன வேஷமொகசோனிடி3
ஜனுலனேசு வாரிகி ஜயமௌனே த்யாக3ராஜு (க)


பொருள் - சுருக்கம்
  • (நான்) உணரும் இன்பம் மலரோனுக்காகிலும் உண்டாகுமோ?

  • அரக்கர் பகைவனாம் இராமனின் தயை கிடைக்கப் பெற்றவனுக்கல்லால், (ஒருவன்) உணரும் இன்பம் மலரோனுக்காகிலும் உண்டாகுமோ?

  • உடலோரிடமும், மனமோரிடமுமாக, தகுந்த வேடமோரிடத்திலுமிட்டு, மக்களை ஏய்ப்போருக்கு வெற்றி கிடைக்குமோ?

  • தியாகராசன் உணரும் இன்பம் மலரோனுக்காகிலும் உண்டாகுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனுகொ3னு/ ஸௌக்2யமு/ கமலஜுகு-ஐன/ கல்கு3னா/
உணரும்/ இன்பம்/ மலரோனுக்காகிலும்/ உண்டாகுமோ/


அனுபல்லவி
3னுஜ/ வைரியகு3/ ராமுனி/ த3ய/ கல்கி3ன-அதனி/ வினா/ (க)
அரக்கர்/ பகைவனாம்/ இராமனின்/ தயை/ கிடைக்கப் பெற்றவனுக்கு/ அல்லால்/ உணரும்...


சரணம்
தனுவு/-ஒகசோ/ மனஸு/-ஒகசோ/ தகி3ன/ வேஷமு/-ஒகசோ/-இடி3/
உடல்/ ஓரிடமும்/ மனம்/ ஓரிடமுமாக/ தகுந்த/ வேடம்/ ஓரிடத்திலும்/ இட்டு,

ஜனுலனு/-ஏசு வாரிகி/ ஜயமௌனே/ த்யாக3ராஜு/ (க)
மக்களை/ ஏய்ப்போருக்கு/ வெற்றி கிடைக்குமோ/ தியாகராசன்/ உணரும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தனுவொகசோ - நினைப்பு-சொல்-செயல் இவை மூன்றும் ஒருமித்து, ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, இயங்குதலை 'திரிகரண சுத்தி' என்பர். இதனைத்தான் இந்த பாடலில் தியாகராஜர் உணர்த்துகின்றார். 'அத்வைத சாதனம்' (ஆங்கிலம்) – காஞ்சி மாமுனிவரின் உரை நோக்கவும்

மலரோன் - பிரமன்
Top


Updated on 02 Feb 2009

No comments: