Showing posts with label Vasanta Raga. Show all posts
Showing posts with label Vasanta Raga. Show all posts

Saturday, February 12, 2011

தியாகராஜ கிருதி - ஸீதம்ம மாயம்ம - ராகம் வசந்த - Sitamma Maayamma - Raga Vasanta

பல்லவி
ஸீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு3 மா தண்ட்3ரி

அனுபல்லவி
வாதாத்மஜ ஸௌமித்ரி வைனதேய ரிபு மர்த3
தா4த ப4ரதாது3லு ஸோத3ருலு மாகு ஓ மனஸா (ஸீ)

சரணம்
பரமேஸ1 வஸிஷ்ட2 பராஸ1ர நாரத3 ஸௌ1னக ஸு1
ஸுர பதி கௌ3தம லம்போ33ர கு31ஸனகாது3லு
4ர நிஜ பா43வதாக்3ரேஸருலெவரோ 2வாரெல்லரு
வர த்யாக3ராஜுனிகி பரம பா3ந்த4வுலு மனஸா (ஸீ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • சீதம்மா நமது தாயார், ஸ்ரீ ராமன் நமது தந்தை.

    • வாயு மைந்தன், சௌமித்திரி, வினதை மைந்தன், சத்துருக்கினன், தாதை, பரதன்

  • ஆகியோர் சோதரர்கள் நமக்கு.

    • பரமேசன், வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், தேவர் தலைவன், கௌதமர், லம்போதரன், குகன், சனகாதியர்,
    • புவியில் நிச பாகவதர்களில் தலைசிறந்தோர் எவரோ, அவர் யாவரும்

  • அருளுடைத் தியாகராசனுக்கு நெருங்கிய சுற்றத்தினர்.

  • சீதம்மா நமது தாயார், ஸ்ரீ ராமன் நமது தந்தை



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதம்ம/ மா/-அம்ம/ ஸ்ரீ ராமுடு3/ மா/ தண்ட்3ரி/
சீதம்மா/ நமது/ தாயார்/ ஸ்ரீ ராமன்/ நமது/ தந்தை/


அனுபல்லவி
வாத/-ஆத்மஜ/ ஸௌமித்ரி/ வைனதேய/ ரிபு/ மர்த3ன/
வாயு/ மைந்தன்/ சௌமித்திரி/ வினதை மைந்தன்/ (எதிரியை/ அழிப்போன்) சத்துருக்கினன்/

தா4த/ ப4ரத/-ஆது3லு/ ஸோத3ருலு/ மாகு/ ஓ மனஸா/ (ஸீ)
தாதை/ பரதன்/ ஆகியோர்/ சோதரர்கள்/ நமக்கு/ ஓ மனமே/


சரணம்
பரம-ஈஸ1/ வஸிஷ்ட2/ பராஸ1ர/ நாரத3/ ஸௌ1னக/ ஸு1க/
பரமேசன்/ வசிட்டர்/ பராசரர்/ நாரதர்/ சௌனகர்/ சுகர்/

ஸுர/ பதி/ கௌ3தம/ லம்ப3/-உத3ர/ கு3ஹ/ ஸனக-ஆது3லு/
தேவர்/ தலைவன்/ கௌதமர்/ (பெரு/ வயிற்றோன்) லம்போதரன்/ குகன்/ சனகாதியர்/

4ர/ நிஜ/ பா43வத/-அக்3ரேஸருலு/-எவரோ/ வாரு/-எல்லரு/
புவியில்/ நிச/ பாகவதர்களில்/ தலைசிறந்தோர்/ எவரோ/ அவர்/ யாவரும்/

வர/ த்யாக3ராஜுனிகி/ பரம/ பா3ந்த4வுலு/ மனஸா/ (ஸீ)
அருளுடை/ தியாகராசனுக்கு/ நெருங்கிய/ சுற்றத்தினர்/ மனமே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வாரெல்லரு - வாரெல்லனு : இவ்விடத்தில், 'வாரெல்லரு' என்பதே பொருந்தும்.

மேற்கோள்கள்
1 - ஸனகாது3லு - சனகாதியர் - சனர், சனகர், சனற்குமாரர், சனந்தனர் - பிரமனின் மைந்தர்கள்

Top

விளக்கம்
வாயு மைந்தன் - அனுமன்
சௌமித்திரி - இலக்குவன்
வினதை மைந்தன் - கருடன்
தாதை - பிரமன்
பரமேசன் - சிவன்
வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், கௌதமர் - முனிவர்கள்
லம்போதரன் - கணபதி
குகன் - முருகன்

Top


Updated on 12 Feb 2011

Friday, February 11, 2011

தியாகராஜ கிருதி - எட்லா தொ3ரிகிதிவோ - ராகம் வசந்த - Etlaa Dorikitivo - Raga Vasanta

பல்லவி
எட்லா தொ3ரிகிதிவோ ராம தன(கெட்லா)

அனுபல்லவி
1சுட்லார 23டி3ய தோ3வகு நாது3
பட்லாபி4மானமு லேகுண்ட33 (எ)

சரணம்
பாத3 மஹிமோ பெத்33-
லாஸீ1ர்வாத33லமோ ஸு-ஸ்வரபு
நாத32லமோ த்யாக3ராஜ
கே23 ஹர ஸ்ரீ நாத2 தன(கெட்லா)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • தியாகராசனின் துன்பம் களைவோனே! திருமகள் மணாளா!

  • எப்படிக் கிடைத்தாயோ, தனக்கு!

    • சுற்றி, அரை நாழிகை வழிக்கு, என்னிடத்தில் அன்புள்ளோர் இல்லாதிருக்க,

  • தனக்கெப்படிக் கிடைத்தாயோ!

    • (உனது) திருவடி மகிமையோ!
    • பெரியோர் ஆசீர்வாத வலிமையோ!
    • இனிய சுர நாத (வழிபாட்டின்) பயனோ!

  • தனக்கு எப்படிக் கிடைத்தாயோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எட்லா/ தொ3ரிகிதிவோ/ ராம/ தனகு/-(எட்லா)
எப்படி/ கிடைத்தாயோ/ இராமா/ தனக்கு/ எப்படி...


அனுபல்லவி
சுட்ல/-அர/ க3டி3ய/ தோ3வகு/
சுற்றி/ அரை/ நாழிகை/ வழிக்கு/

நாது3 பட்ல/-அபி4மானமு/ லேக/-உண்ட33/ (எ)
என்னிடத்தில்/ அன்புள்ளோர்/ இல்லாது/ இருக்க/ எப்படி...


சரணம்
பாத3/ மஹிமோ/ பெத்33ல-/
(உனது) திருவடி/ மகிமையோ/ பெரியோர்/

ஆஸீ1ர்வாத3/ ப3லமோ/ ஸு-ஸ்வரபு/
ஆசீர்வாத/ வலிமையோ/ இனிய சுர/

நாத3/ ப2லமோ/ த்யாக3ராஜ/
நாத/ (வழிபாட்டின்) பயனோ/ தியாகராசனின்/

கே23/ ஹர/ ஸ்ரீ/ நாத2/ தனகு/-(எட்லா)
துன்பம்/ களைவோனே/ திருமகள்/ மணாளா/ தனக்கு/ எப்படி.../


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - சுட்லார - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'அருகில்', 'சுற்றில்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்ற சொல் (சுட்டார), 'எட்லா கனுகொ3ந்து3னோ' என்ற க4ண்டா ராக கிருதியிலும் காணப்படுகின்றது. இச்சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை. 'சுற்றில்' என்ற பொருள் உள்ள தெலுங்கு சொல், 'சுட்டு' ஆகும். எனவே, இதனை, 'சுட்ல'+'அர' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அப்படி, 'அர' என்பதனைப் பிரித்தால், அதனை, அடுத்த சொல்லாகிய, 'க3டிய'வுடன் சேர்த்து, 'அர க3டிய' (அரை நாழிகை) என்று பொருள் கொள்ளலாம். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டது.

Top

2 - 3டி3 - நாழிகை - 24 நிமிடங்கள். இந்திய நேரக் கணக்குப்படி, நாளுக்கு 24 நிமிடங்கள் கொண்ட 60 நாழிகைகளாகும். மேற்கத்திய கணக்குப்படி 60 நிமிடங்கள் கொண்ட 24 மணிகள் ஒரு நாளாகும்.

2 - 3டி3ய தோ3வகு - தமிழ் அகராதியின்படி, 7.5 நாழிகை அல்லது 180 நிமிடங்கள், 'காத தூரம்', அதாவது 10 மைல் அல்லது 16 கி.மீ எனப்படும். அந்த முறையில், 'நாழிகை வழி' என்பது தோராயமாக 2.1 கீ.மீ ஆகும். 'அரை நாழிகை வழி' என்பது, தோராயமாக 1 கி.மீ ஆகும்.

சுரம் - இசையின் ஏழு சுரங்கள்

Top


Updated on 11 Feb 2011