Showing posts with label Ravi Chandrika Raga. Show all posts
Showing posts with label Ravi Chandrika Raga. Show all posts

Friday, July 17, 2009

தியாகராஜ கிருதி - மாகேலரா விசாரமு - ராகம் ரவி சந்த்3ரிக - Maakelaraa Vichaaramu - Raga Ravi Chandrika

பல்லவி
மாகேலரா விசாரமு
மருகன்ன ஸ்ரீ ராம சந்த்3

அனுபல்லவி
ஸாகேத ராஜ குமார
ஸத்3-ப4க்த மந்தா3ர ஸ்ரீ-கர (மா)

சரணம்
1ஜத கூர்சி 2நாடக ஸூத்ரமுனு
ஜக3மெல்ல மெச்சக3 கரமுனனிடி3
3தி தப்பக 3ஆடி3ஞ்செத3வு ஸுமீ
நத த்யாக3ராஜ கி3ரீஸ1 வினுத (மா)


பொருள் - சுருக்கம்
மாரனின் தந்தை இராம சந்திரா! சாகேத இளவரசே! நற்றொண்டரின் மந்தாரமே! செழிப்பருள்வோனே! தியாகராசனால் வணங்கப் பெற்றோனே! மலையீசனால் போற்றப் பெற்றோனே!
  • எமக்கேனய்யா கவலை?

    • சோடுகட்டி,

    • நாடகக் கயிற்றினை, உலகெல்லாம் மெச்ச, கரத்தினில் பற்றி,

    • கதி தப்பாது, ஆட்டுவிக்கின்றாயன்றோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாகு/-ஏலரா/ விசாரமு/
எமக்கு/ ஏனய்யா/ கவலை/

மருகு/-அன்ன/ ஸ்ரீ ராம சந்த்3ர/
மாரனின்/ தந்தை/ ஸ்ரீ ராம சந்திரா/


அனுபல்லவி
ஸாகேத/ ராஜ குமார/
சாகேத/ இளவரசே/

ஸத்3-ப4க்த/ மந்தா3ர/ ஸ்ரீ/-கர/ (மா)
நற்றொண்டரின்/ மந்தாரமே/ செழிப்பு/ அருள்வோனே/


சரணம்
ஜத/ கூர்சி/ நாடக/ ஸூத்ரமுனு/
சோடு/ கட்டி/ நாடக/ கயிற்றினை/

ஜக3மு/-எல்ல/ மெச்சக3/ கரமுனனு/-இடி3/
உலகு/ எல்லாம்/ மெச்ச/ கரத்தினில்/ பற்றி/

3தி/ தப்பக/ ஆடி3ஞ்செத3வு/ ஸுமீ/
கதி/ தப்பாது/ ஆட்டுவிக்கின்றாய்/ அன்றோ/

நத/ த்யாக3ராஜ/ கி3ரி/-ஈஸ1/ வினுத/ (மா)
வணங்கப் பெற்றோனே/ தியாகராசனால்/ மலை/ ஈசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஆடி3ஞ்செத3வு - ஆடி3ஞ்சேவு

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஜத கூர்சி - சோடுகட்டி - நாடகத்தின் அங்கங்கள் யாவற்றினையும் ஒருங்கிணைத்து.

2 - நாடக ஸூத்ரமுனு - இறைவனுக்கு 'ஸூத்ரதா4ரி' - அதாவது 'பாவைக்கூத்தன்' - என்றோர் பெயருண்டு. தியாகராஜர், 'உபசாரமுலு சேகொனவய்யா' என்ற கீர்த்தனையில், இறைவனை, 'கபட நாடக ஸூத்ரதா4ரி' (வஞ்சக நாடகப் பாவைக்கூத்தன்) என்கிறார்.

மந்தாரம் - விரும்பியதை யருளும் வானோர் தரு

கதி - நடை

ஆட்டுவிக்கின்றாய் - நாமெல்லாம் பாவைகளாக, இறைவன் பாவைக்கூத்தனாக

மலையீசன் - சிவன்

Top


Updated on 17 Jul 2009

Thursday, July 16, 2009

தியாகராஜ கிருதி - நிரவதி4 ஸுக2த3 - ராகம் ரவி சந்த்3ரிக - Niravadhi Sukhada - Raga Ravi Chandrika

பல்லவி
நிரவதி4 ஸுக23 நிர்மல ரூப
நிர்ஜித 1முனி ஸா1

அனுபல்லவி
1ரதி43ந்த4ன நத ஸங்க்ரந்த3
1ங்கராதி3 கீ3யமான ஸாது4 மானஸ ஸு-ஸத3ன (நிர)

சரணம்
மாமவ மரகத மணி நிப4 தே3
ஸ்ரீ மணி லோல ஸ்1ரித ஜன பால
பீ4ம பராக்ரம 2பீ4ம கரார்சித
தாமஸ ராஜஸ மானவ தூ3
த்யாக3ராஜ வினுத சரண (நிர)


பொருள் - சுருக்கம்
  • இடையறா சுகத்தையளிப்போனே! களங்கமற்ற உருவத்தோனே! (கௌதம) முனியின் சாபத்தினைக் களைந்தோனே!

  • கடலுக்கு அணை கட்டியவனே! இந்திரனால் தொழப்பெற்றோனே! சங்கரன் முதலானோரால் பாடப் பெற்ற, சாதுக்களின் மனத்துறையே!

  • மரகத மணி நிகருடலோனே! இலக்குமியிடம் திளைப்போனே! சார்ந்தோரைப் பேணுவோனே! அச்சுமூட்டும் வல்லமையோனே! சிவன் கரங்களால் தொழப் பெற்றோனே! தாமத, இராசத மானவரிடமிருந்து விலகியுள்ளோனே! தியாகராசனால் போற்றப் பெற்றத் திருவடியோனே!

    • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிரவதி4/ ஸுக2-/த3/ நிர்மல/ ரூப/
இடையறா/ சுகத்தை/ அளிப்போனே/ களங்கமற்ற/ உருவத்தோனே/

நிர்ஜித/ முனி/ ஸா1ப/
களைந்தோனே/ (கௌதம) முனியின்/ சாபத்தினை/


அனுபல்லவி
1ரதி4/ ப3ந்த4ன/ நத/ ஸங்க்ரந்த3ன/
கடலுக்கு/ அணை கட்டியவனே/ தொழப்பெற்றோனே/ இந்திரனால்/

1ங்கர/-ஆதி3/ கீ3யமான/ ஸாது4/ மானஸ/ ஸு-ஸத3ன/ (நிர)
சங்கரன்/ முதலானோரால்/ பாடப் பெற்ற/ சாதுக்களின்/ மனத்து/ உறையே/


சரணம்
மாம்/-அவ/ மரகத/ மணி/ நிப4/ தே3ஹ/
என்னை/ காப்பாய்/ மரகத/ மணி/ நிகர்/ உடலோனே/

ஸ்ரீ மணி/ லோல/ ஸ்1ரித ஜன/ பால/
இலக்குமியிடம்/ திளைப்போனே/ சார்ந்தோரை/ பேணுவோனே/

பீ4ம/ பராக்ரம/ பீ4ம/ கர/-அர்சித/
அச்சுமூட்டும்/ வல்லமையோனே/ சிவன்/ கரங்களால்/ தொழப் பெற்றோனே/

தாமஸ/ ராஜஸ/ மானவ/ தூ3ர/
தாமத/ இராசத/ மானவரிடமிருந்து/ விலகியுள்ளோனே/

த்யாக3ராஜ/ வினுத/ சரண/ (நிர)
தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பீ4ம கரார்சித - பீ4ம நரார்சித : 'சிவன் கரங்களால் தொழப் பெற்றோனே' - 'வல்லமை மிக்க மனிதர்களால் தொழப்பெற்றோனே' என்றும் கொள்ளலாம்.

Top

மேற்கோள்கள்
1 - முனி ஸா1 - (கௌதம) முனியின் சாபம் - தன் மனைவி அகலியைக்கு இட்ட சாபம் : வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயம் 48 மற்றும் 49 நோக்கவும்.

Top

விளக்கம்
2 - பீ4 - 'ஏகாத31 ருத்3ர' எனப்படும் சிவனின் 11 பெயர்களில் இதுவும் ஒன்று. "பதினோரு ருத்திரர்கள்"

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவினில் 'ஏகாத31 ருத்3ர' என்னும் விழா கொண்டாடப்படுகின்றது : 'ஏகாத31 ருத்3ர'-1; 'ஏகாத31 ருத்3ர'-2

தாமத, இராசத - முக்குணங்களில் இரண்டு

Top


Updated on 17 Jul 2009