Showing posts with label Raksha Pettare. Show all posts
Showing posts with label Raksha Pettare. Show all posts

Tuesday, October 7, 2008

ரக்ஷ பெட்டரே - ராகம் பை4ரவி - Raksha Pettare - Raga Bhairavi


பல்லவி
1ரக்ஷ பெட்டரே தொ3ரகு

அனுபல்லவி
வக்ஷ ஸ்த2லமுன வெலயு
லக்ஷ்மீ ரமணுனிகி 2ஸாய (ரக்ஷ)

சரணம்
ஸீதா கரமுனு பட்டி செலகி3ன தொ3ரகு
வாதாத்மஜுனிகி 3செயி வஸ1மைன தொ3ரகு
புருஹூதாது3ல ரக்ஷிம்ப 4பா3ஹுஜுடை3 தொ3ரகு
ஸங்கீ3த ப்ரிய த்யாக3ராஜ கே3யுடை3தொ3ரகைஸ்1வர்ய5 (ரக்ஷ)


பொருள் - சுருக்கம்
காப்பிடுவீர், துரைக்கு!

மார்பிலொளிரும் இலக்குமியின் மணாளனுக்கு அந்திக்காப்பிடுவீர்!

  • சீதையின் கரம் பற்றி விளங்கிய துரைக்கு,
  • வாயு மைந்தனுக்குக் கைவசமான துரைக்கு,
  • இந்திரன் முதலானோரைக் காக்க, அரச குலத்துதித்த துரைக்கு,
  • இசையை விரும்பும், தியாகராசனால் பாடப்பெற்ற, துரைக்கு,
செல்வக்காப்பிடுவீர்!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரக்ஷ/ பெட்டரே/ தொ3ரகு/
காப்பு/ இடுவீர்/ துரைக்கு/



அனுபல்லவி
வக்ஷ ஸ்த2லமுன/ வெலயு/
மார்பில்/ ஒளிரும்/

லக்ஷ்மீ/ ரமணுனிகி/ ஸாய/ (ரக்ஷ)
இலக்குமியின்/ மணாளனுக்கு/ அந்தி/ காப்பு இடுவீர்!



சரணம்
ஸீதா/ கரமுனு/ பட்டி/ செலகி3ன/ தொ3ரகு/
சீதையின்/ கரத்தினை/ பற்றி/ விளங்கிய/ துரைக்கு/

வாத/-ஆத்மஜுனிகி/ செயி/ வஸ1மைன/ தொ3ரகு/
வாயு/ மைந்தனுக்கு/ கை/ வசமான/ துரைக்கு/

புருஹூத/-ஆது3ல/ ரக்ஷிம்ப/ பா3ஹுஜுடு3/-ஐன/ தொ3ரகு/
இந்திரன்/ முதலானோரை/ காக்க/ அரசன்/ ஆகிய/ துரைக்கு/

ஸங்கீ3த/ ப்ரிய/ த்யாக3ராஜ/ கே3யுடு3/-ஐன/ தொ3ரகு/-ஐஸ்1வர்ய/ (ரக்ஷ)
இசையை/ விரும்பும்/ தியாகராசனால்/ பாடப்பெற்ற/ துரைக்கு/ செல்வ/ காப்பிடுவீர்!

குறிப்புக்கள் - (Notes)

வேறுபாடுகள் - (Pathanthara)

1ரக்ஷ பெட்டரே தொ3ரகு - ரக்ஷ பெட்டரே தொ3ரகு ரக்ஷ பெட்டரே

2ஸாய - ஜய : ஸாய - என்பது சரியாகும்

Top

மேற்கோள்கள்

பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து கண்ணனுக்கு அந்திக்காப்பிட்டார்

திவ்ய பிரபந்தம் - முதலாயிரம் (அந்திக்காப்பு - பக்கம் 33)

அந்திக் காப்பு விளக்கம்

4பா3ஹுஜ - அரச குலத்தோர் பரம்பொருளின் கைகளிலிருந்து தோன்றியதாக புருஷ ஸூக்தம் (13) கூறும்

5ஐஸ்1வர்ய ரக்ஷ - எட்டு ஐஸ்வர்யங்கள்

விளக்கம்

1ரக்ஷ - காப்பிடுதல் - கண்ணூறு கழிப்பதற்கு

2ஸாய ரக்ஷ - அந்திக்காப்பு - விளக்கேற்றும் வேளையில் குழந்தைகளுக்கிடுவது

3செயி வஸ1மைன - இறைவன் தொண்டனின் வயப்பட்டவன்

Top