Showing posts with label Nidhi Chala. Show all posts
Showing posts with label Nidhi Chala. Show all posts

Wednesday, June 2, 2010

தியாகராஜ கிருதி - நிதி4 சால - ராகம் கல்யாணி - Nidhi Chala - Raga Kalyani

பல்லவி
நிதி4 சால ஸுக2மா ராமுனி
ஸன்னிதி4 ஸேவ ஸுக2மா 1நிஜமுக3 பல்கு மனஸா

அனுபல்லவி
3தி4 நவனீத க்ஷீரமுலு 2ருசியோ
தா31ரதி2 த்4யான ப4ஜன ஸுதா4 ரஸமு 2ருசியோ (நி)

சரணம்
33ம ஸ1மனு க3ங்கா3 ஸ்நானமு ஸுக2மா
கர்த3ம து3ர்விஷய கூப ஸ்நானமு ஸுக2மா
4மமத3ந்த4ன யுத நர ஸ்துதி ஸுக2மா
5ஸுமதி த்யாக3ராஜ நுதுனி கீர்தன ஸுக2மா (நி)


பொருள் - சுருக்கம்
  • மனமே!

  • உண்மையாகச் சொல்வாய் -

    • செல்வம் மிக்கு சுகமாமோ அன்றி இராமனின் சன்னிதி சேவை சுகமாமோ?
    • தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவையாமோ? தாசரதியின் தியானம், பஜனையெனும் அமுதச் சாறு சுவையாமோ?
    • மனவொடுக்கம், மனவமைதியெனும் கங்கை நீராடல் சுகமாமோ? அருவருப்பான, தீய விடயங்களெனும் கிணற்று நீராடல் சுகமாமோ?
    • அகந்தைக் கட்டுண்ட மனிதர்களின் புகழ்ச்சி சுகமாமோ? நல்லுள்ள, தியாகராசன் போற்றுவோனின் கீர்த்தனை சுகமாமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நிதி4/ சால/ ஸுக2மா/ ராமுனி/
செல்வம்/ மிக்கு/ சுகமாமோ/ (அன்றி) இராமனின்/

ஸன்னிதி4/ ஸேவ/ ஸுக2மா/ நிஜமுக3/ பல்கு/ மனஸா/
சன்னிதி/ சேவை/ சுகமாமோ/ உண்மையாக/ சொல்வாய்/ மனமே/


அனுபல்லவி
3தி4/ நவனீத/ க்ஷீரமுலு/ ருசியோ/
தயிர்/ வெண்ணெய்/ பால் ஆகியவை/ சுவையாமோ/

தா31ரதி2/ த்4யான/ ப4ஜன/ ஸுதா4/ ரஸமு/ ருசியோ/ (நி)
தாசரதியின்/ தியானம்/ பஜனையெனும்/ அமுத/ சாறு/ சுவையாமோ/


சரணம்
3ம/ ஸ1மமு/-அனு/ க3ங்கா3/ ஸ்நானமு/ ஸுக2மா/
மனவொடுக்கம்/ மனவமைதி/ யெனும்/ கங்கை/ நீராடல்/ சுகமாமோ/

கர்த3ம/ து3ர்/-விஷய/ கூப/ ஸ்நானமு/ ஸுக2மா/
அருவருப்பான/ தீய/ விடயங்களெனும்/ கிணற்று/ நீராடல்/ சுகமாமோ/

மமத/ ப3ந்த4ன யுத/ நர/ ஸ்துதி/ ஸுக2மா/
அகந்தை/ கட்டுண்ட/ மனிதர்களின்/ புகழ்ச்சி/ சுகமாமோ/

ஸுமதி/ த்யாக3ராஜ/ நுதுனி/ கீர்தன/ ஸுக2மா/ (நி)
நல்லுள்ள/ தியாகராசன்/ போற்றுவோனின்/ கீர்த்தனை/ சுகமாமோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ருசியோ - ருசோ.

4 - மமத - மமதா.

Top

மேற்கோள்கள்
3 - 3ம ஸ1 - ஷட்3-கு3ண ஸம்பத் (ஆறு பண்புகளெனும் செல்வம்) - மனவொடுக்கம் (த3ம), மனவமைதி (ஸ1ம), பொறுமை(திதீக்ஷ), சமநோக்கு(ஸமாதா4ன), பற்றின்மை(உபராதி), நம்பிக்கை (ஸ்1ரத்3தா4).

Top

விளக்கம்
1 - நிஜமுக3 பல்கு - உண்மையாகச் சொல்வாய் - நம் உள்ளத்தில் எழும் அறப் போராட்டங்களை இச்சொல் குறி்க்கின்றது. இது குறித்து, கடோபநிடதத்தில் கூறப்பட்டது -

நன்மை, இன்பம் - இவ்விரண்டும் மனிதனை அணுகுகின்றன.
இவற்றினை ஆராய்ந்து, நுண்ணறிவுடையவன், பிரிக்கின்றான்.
நன்மையினை, இன்பத்தினின்றும் மேம்பட்டதென, தீரன் தேர்ந்தெடுக்கின்றான்.
இன்பத்தினை, உலக சௌகரியங்களுக்காக, மந்த புத்தியுடையவன் தேர்ந்தெடுக்கின்றான்.(I-ii-2)
(ஸ்வாமி கம்பீரானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

5 - ஸுமதி - நல்லுள்ள - இறைவனையோ, தியாகராசரையோ குறிப்பதாகக் கொள்ளலாம்

Top

சன்னிதி - சமுகம்
தாசரதி - இராமன்
பஜனை - இறைவனின் புகழைப் பாடும் கூட்டு வழிபாடு
விடயங்கள் - புலன்களால் நுகரப் படுபவை

Top


Updated on 02 Jun 2010