நீகு தனகு 1ரு2ண ரு2ணீ பா4வமு 2லேத3னேரு
அனுபல்லவி
லேக நீகே த3ய லேதோ3 ஸ்ரீ ராம (நீ)
சரணம்
சரணம் 1
சின்ன நாடா3தி3க3 சித்தமந்து3
நெலகொன்ன வாட3வை நா கோரிக ஸாக3குண்டே (நீ)
சரணம் 2
கரகி3 கரகி3 பாத3 கமலமந்து3 வ்ரால
3கருணிந்துனனி நாபை கன்னட3 ஜேஸிதே (நீ)
சரணம் 3
ஈ 4ஜன்மமுன நாது3 பூஜல கை3கொனி
ராஜில்லு 5ஸ்ரீ த்யாக3ராஜுனி மரசிதே (நீ)
பொருள் - சுருக்கம்
ஒளிரும் இராமா!
- உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்; அல்லது உனக்கே தயை இல்லையோ?
- சிறு வயது முதலாக (எனது) உள்ளத்தினில் நிலைபெற்றவனாகியும், எனது கோரிக்கை ஈடேறாவிடில், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்;
- உருகியுருகி திருவடித்தாமரையினில் வீழ, 'கருணை புரிவேன்' என்று, என்னைப் புறக்கணித்தால், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்;
- இப்பிறவியினில் எனது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, தியாகராசனை மறந்தால், உனக்கும் எனக்கும் கடன் - கடனாளி எண்ணம் இல்லையென்றனர்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீகு/ தனகு/ ரு2ண/ ரு2ணீ/ பா4வமு/ லேது3/-அனேரு/
உனக்கும்/ எனக்கும்/ கடன்/ - கடனாளி/ எண்ணம்/ இல்லை/ என்றனர்/
அனுபல்லவி
லேக/ நீகே/ த3ய/ லேதோ3/ ஸ்ரீ ராம/ (நீ)
அல்லது/ உனக்கே/ தயை/ இல்லையோ/ ஸ்ரீ ராமா/
சரணம்
சரணம் 1
சின்ன நாடு3/-ஆதி3க3/ சித்தமு-அந்து3/
சிறு வயது/ முதலாக/ (எனது) உள்ளத்தினில்/
நெலகொன்ன வாட3வை/ நா/ கோரிக/ ஸாக3க-உண்டே/ (நீ)
நிலைபெற்றவனாகியும்/ எனது/ கோரிக்கை/ ஈடேறாவிடில்/ உனக்கும்...
சரணம் 2
கரகி3/ கரகி3/ பாத3/ கமலமு-அந்து3/ வ்ரால/
உருகி/ உருகி/ திருவடி/ தாமரையினில்/ வீழ/
கருணிந்துனு/-அனி/ நாபை/ கன்னட3 ஜேஸிதே/ (நீ)
'கருணை புரிவேன்'/ என்று/ என்னை/ புறக்கணித்தால்/ உனக்கும்...
சரணம் 3
ஈ/ ஜன்மமுன/ நாது3/ பூஜல/ கை3கொனி/
இந்த/ பிறவியினில்/ எனது/ வழிபாடுகளை/ ஏற்றுக்கொண்டு/
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மரசிதே/ (நீ)
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனை/ மறந்தால்/ உனக்கும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - லேத3னேரு - லேத3னெத3ரு.
3 - கருணிந்துனனி - கருணிஞ்செத3னனி : இவ்விடத்தில் 'கருணிந்துனனி' என்பதே பொருந்தும்.
4 - ஜன்மமுன - ஜக3முன.
5 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.
Top
மேற்கோள்கள்
1 - ரு2ண ரு2ணீ - கடன் - கடனாளி - இந்துமதக் கோட்பாடுகளின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான கடன்கள் உண்டு. மனிதனின் மூன்று கடன்கள்-1; மனிதனின் மூன்று கடன்கள்-2
Top
விளக்கம்
1 - ரு2ண ரு2ணீ பா4வமு - கடன் - கடனாளி எண்ணம் - (ஒருவருக்கொருவர்) கடன்பட்டிருத்தல். தான் கொடுத்த வாக்குறுதியும் ஒரு கடனாகவே கருதப்படும். அதன்படி, இரண்டாவது சரணத்தில், இறைவன் தனக்கு வாக்குறுதி கொடுத்ததாக தியாகராஜர் கூறுகின்றார். மேலும், வழிபாட்டினை இறைவன் ஏற்றபின்னர் (மூன்றாவது சரணம்), இறைவன் தொண்டனைக் காக்கக் கடமைப்பட்டவனாவான்.
தொண்டனுக்கு, இறைவன் தொண்டில் ஈடுபட்டிருப்பது கடனாகும்; அப்படிப்பட்ட தொண்டர்களைக் காப்பது இறைவனின் கடனாகும். இப்படி, இறைவனும், தொண்டனும் ஒருவருக்கொருவர் கடன்பட்டிருத்தலைத் தான் 'ரு2ண ரு2ணீ பா4வமு' என்று தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என்று நான் நம்புகின்றேன்.
வள்ளலார், இராமலிங்க அடிகளும் இத்தகைய உறவினை தனது திருவருட்பாவில் 'இவர்க்கும்-எனக்கும்' (4496-4500) என்று பாடுகின்றார்.
Top
Updated on 13 Jan 2010