பல்லவிநீ
1ப4ஜன கா3ன ரஸிகுல
நேனெந்து3 கானரா ராம
அனுபல்லவி2ஸ்ரீ ப4வ ஸரோஜாஸனாதி
3 ஸ
1சீ மனோ-ரமண வந்த்
3ய இலலோ (நீ)
சரணம்ஸகு
3ண
3நிர்கு3ணபு நிஜ த
3ப்
3ப
3ரலனு
4ஷண்மதமுல
5மர்மமஷ்ட ஸித்3து4ல
வக3லு 6ஜூப ஸந்தஸில்ல கண்டினி வரானன த்யாக
3ராஜ வினுத (நீ)
பொருள் - சுருக்கம்இராமா! சிவன், மலரோன் ஆகியோராலும், சசி மணாளனாலும் வந்திக்கப்பெற்றவனே! எழில் முகத்தோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
- உனது பஜனைப் பாடல்களை ரசிப்போரை புவியில் நானெங்கும் காணேனய்யா,
- உருவ, அருவ வழிபாட்டின் மெய், பொய்மைகளை,
- அறு மதங்களின் மருமங்களை, மற்றும்
- அட்டசித்திகளின் தன்மைகளையும்
(நீ) காட்ட, களிப்புறக் கண்டேன்;
பதம் பிரித்தல் - பொருள்பல்லவிநீ/ ப
4ஜன/ கா
3ன/ ரஸிகுல/
உனது/ பஜனை/ பாடல்களை/ ரசிப்போரை/
நேனு/-எந்து
3/ கானரா/ ராம/
நான்/ எங்கும்/ காணேனய்யா/ இராமா/
அனுபல்லவிஸ்ரீ ப
4வ/ ஸரோஜ-ஆஸன/-ஆதி
3/
சிவன்/ மலரோன்/ ஆகியோராலும்/
ஸ
1சீ/ மனோ/-ரமண/ வந்த்
3ய/ இலலோ/ (நீ)
சசீயின்/ மனம்/ மகழ்விப்போனால்/ வந்திக்கப்பெற்றவனே/ புவியில்/ உனது...
சரணம்ஸகு
3ண/ நிர்கு
3ணபு/ நிஜ/ த
3ப்
3ப
3ரலனு/
உருவ/ அருவ வழிபாட்டின்/ மெய்/ பொய்மைகளை/
ஷண்/-மதமுல/ மர்மமு/-அஷ்ட/ ஸித்
3து
4ல/
அறு/ மதங்களின்/ மருமங்களை/ அட்ட/ சித்திகளின்/
வக
3லு/ ஜூப/ ஸந்தஸில்ல/ கண்டினி/
தன்மைகளையும்/ (நீ) காட்ட/ களிப்புற/ கண்டேன்/
வர/-ஆனன/ த்யாக
3ராஜ/ வினுத/ (நீ)
எழில்/ முகத்தோனே/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)வேறுபாடுகள் - (Pathanthara)
3 -
நிர்கு3ணபு நிஜ - நிர்கு
3ண நிஜமு.
Topமேற்கோள்கள்4 -
ஷண்மத - அறு மதங்கள் - அரன், அரி, சத்தி, முருகன், கணபதி, சூரியன் ஆகியோரின் வழிபாடு. முழு விவரம் அறிய
அறு மதங்கள் (ஆங்கிலம்) நோக்கவும்
5 -
அஷ்ட ஸித்3து4ல - அட்டசித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.
பாகவத புராணம், 11-வது புத்தகம், 15-வது அத்தியாயம் (உத்தவ கீதை) நோக்கவும். பதஞ்சலி யோக சூத்திரங்கள் - 3-வது அத்தியாயம் (சக்திகள்) நோக்கவும்
Topவிளக்கம்1 -
ப4ஜன கா3ன ரஸிகுல கானரா - உனது பஜனைப் பாடல்களை ரசிப்போரை புவியில் நானெங்கும் காணேனய்யா - இசை, மனிதனை உய்விப்பதற்குப் பதிலாக, புலன் நுகர்ச்சிகளைத் தூண்டுவதாக அமைந்துள்ள இழிபாட்டினை தியாகராஜர் சுட்டிக் காட்டுகின்றார்.
2 -
ஸ்ரீ ப4வ - 'ஸ்ரீ' என்ற சொல்லினை தனியாகப் பிரித்து 'இலக்குமி' (திருமகள்) என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இத்துடன் இணைந்த வரும் சொற்களை நோக்குகையில், 'ஸ்ரீ' என்பது சிவனுக்கு அடைமொழியாகவே கொள்ளவேண்டும் என்று தோன்றுகின்றது.
5 -
ஸித்3து4ல வக3லு - சித்திகளின் தன்மைகள் - இதனை 'சித்திகளின் ஏமாற்றும் தன்மைகள்' என்றும் கொள்ளலாம்.
6 -
ஜூப ஸந்தஸில்ல கண்டினி - (நீ) காட்ட, களிப்புறக் கண்டேன் - சில புத்தகங்களில், இதற்கு சரணத்தில் கூறியவற்றினில் (அருவ, உருவ வழிபாடு, அறு மதங்கள், அட்ட சித்திகள்) நான் வீணாக உழன்றேன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. பாடலின் சொற்களை நோக்குகையில் அப்படிப்பட்ட பொருள் கொள்ள வாய்ப்பில்லை
Topபல்லவியில் கூறப்பட்டவற்றிற்கும் சரணத்தில் கூறப்பட்டவற்றிற்கும் நேரிடையாக தொடர்பு ஏதும் காணப்படவில்லை. ஆனால் தியாகராஜரின் நோக்கம் 'உருவ, அருவ வழிபாடு மற்றும் அறு மத வழிபாடுகளின் பயன்கள், அட்ட சித்திகள் ஆகியவை பஜனை முறையைக் கையாள்வோனுக்கு எளிதாகவே கைகூடும்' என்பது போல் தோன்றுகின்றது.
பஜனை - இறைவனின் பெயர்களை புகழ்ந்து பாடுதல்
மலரோன் - பிரமன்
சசீயின் மனம் மகிழ்விப்போன் - இந்திரன் (சசீ - இந்திரனின் மனைவி)
உருவ வழிபாடு - (சகுண) முக்குணங்களுடை இறை வழிபாடு
அருவ வழிபாடு - (நிர்க்குண) குணங்களற்ற பரம்பொருள் வழிபாடு
Top
Updated on 03 Feb 2009