Showing posts with label Naadaadina Mata. Show all posts
Showing posts with label Naadaadina Mata. Show all posts

Monday, December 7, 2009

தியாகராஜ கிருதி - நாடா3டி3ன மாட - ராகம் ஜன ரஞ்ஜனி - Naadaadina Mata - Raga Jana Ranjani

பல்லவி
நாடா3டி3ன மாட நேடு3 தப்ப வலது3
நா தண்ட்3ரி ஸ்ரீ ராம

அனுபல்லவி
1ஏடா3தி3 நாடு33 எட3 பா3யனி வானி
போடி3மிக3 2காபாடு3து3னனி சின்ன (நா)

சரணம்
3தலகு வச்சின பா34 4தல பாக3கு ஜேது
வலசி நம்மின வானி வலலோன தகு3லுது3
இல ப4க்தி ஸாக3ரமீத3 ஜேதுனனி
தல போஸி பல்கிதிவே த்யாக3ராஜார்சித (நா)


பொருள் - சுருக்கம்
எனது தந்தையே, இராமா! தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • அன்றுரைத்த சொல், இன்று தவறலாகாது.
    • (உன்னை) இடை பிரியாதவனை, நன்கு காப்பேன் என,
    • தலைக்கு வந்த இடையூற்றினை, தலைப்பாகைக்கு மாற்றுவேன்;
    • காதலித்து நம்பியவனின் வலையில் சிக்குவேன்;
    • புவியில், பக்திக் கடலில் நீந்த வைப்பேனென,
    • ஓராண்டு காலமாக சிந்தித்து, பகன்றாயே;

  • சிறு வயதினில் உரைத்த சொல், இன்று தவறலாகாது.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாடு3/-ஆடி3ன/ மாட/ நேடு3/ தப்ப வலது3/
அன்று/ உரைத்த/ சொல்/ இன்று/ தவறலாகாது/

நா/ தண்ட்3ரி/ ஸ்ரீ ராம/
எனது/ தந்தையே/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
ஏடா3தி3/ நாடு33/ எட3/ பா3யனி வானி/
ஓராண்டு/ காலமாக/ (உன்னை) இடை/ பிரியாதவனை/

போடி3மிக3/ காபாடு3து3னு/-அனி/ சின்ன/ (நா)
நன்கு/ காப்பேன்/ என/ சிறு வயதினில்/ உரைத்த...


சரணம்
தலகு/ வச்சின/ பா34/ தல/ பாக3கு/ ஜேது/
தலைக்கு/ வந்த/ இடையூற்றினை/ தலை/ பாகைக்கு/ மாற்றுவேன்/

வலசி/ நம்மின வானி/ வலலோன/ தகு3லுது3/
காதலித்து/ நம்பியவனின்/ வலையில்/ சிக்குவேன்/

இல/ ப4க்தி/ ஸாக3ரமு/-ஈத3/ ஜேதுனு/-அனி/
புவியில்/ பக்தி/ கடலில்/ நீந்த/ வைப்பேன்/ என/

தல போஸி/ பல்கிதிவே/ த்யாக3ராஜ/-அர்சித/ (நா)
சிந்தித்து/ பகன்றாயே/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - காபாடு3து3னனி - காபாடு3து3வனி : இவ்விடத்தில், 'காபாடு3து3னனி' என்பதே சரியாகும்.

4 - தல பாக3கு ஜேது - தல பாக3கு சேடு3 : இவ்விடத்தில் 'சேடு3' (கெடுதல்) என்பது பொருந்தாது.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஏடா3தி3 நாடு33 - ஓராண்டு காலமாக - சில புத்தகங்களில், இதற்கு, 'ஓராண்டுக்கு முன் உரைத்த சொல் தவறலாகாது' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஏடா3தி3 நாடு33' என்பதற்கு 'ஓராண்டு காலமாக' என்று பொருளாகும். இதற்கு 'ஓராண்டுக்கு முன்' என்று பொருள் கொள்ளவியலாது. மேலும், அனுபல்லவியின் கடைசிச் சொல்லாகிய 'சின்ன' என்பதனை பல்லவியுடன் இணைத்தால், 'சின்ன நாடு' என்று வரும். அதற்கு 'சிறு வயதில்' என்று பொருளாகும். ஆகவே, இறைவன், தன்னுடை 'சிறு வயதினில் உரைத்த சொல்லினை' தியாகராஜர் நினைவூட்டுகின்றார்.

ஆயினும், 'ஏடா3தி3 நாடு33' - 'ஓராண்டு காலமாக' என்பது, அனுபல்லவியில் தனித்து நிற்கின்றது. அதனை, அனுபல்லவியின் எந்த சொல்லுடனும் இணைக்க முடியாது. எனவே 'ஏடா3தி3 நாடு33' - 'ஓராண்டு காலமாக' என்பதனை, சரணத்தின் 'தல போஸி' - 'சிந்தித்து' என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ளப்பட்டது.

எனவே, அனுபல்லவியையும் சரணத்தையும் இணைத்தால்தான் சரியான பொருள்கொள்ளவியலும். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், 'ஓராண்டு காலமாக' என்பது 'சிறுவயதினில் உரைத்த' என்பதுடன் ஒத்துப் போகவில்லை. ஏதோ நெரடுகின்றது.

Top

3 - தலகு வச்சின பா34 தல பாக3கு ஜேது - தலைக்கு வந்த இடையூற்றினை, தலைப்பாகைக்கு மாற்றுவேன் - இது ஒரு தமிழ் வழக்காகும். மஹா பாரதப் போரில், (கர்ண பர்வம்,- அத்தியாயம் 90) அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து, கர்ணன் எய்த அத்திரத்தினை, தேரோட்டியான கண்ணன், தேரினை, தனது கால் கட்டை விரலால் பூமியுள் அழுத்தி, அந்த அத்திரம், அர்ஜுனனின் மகுடத்தினைக் கொண்டுபோகச்செய்து, அவனுடைய உயிரினைக் காப்பாற்றினான். அது போன்று, வரும் இடையூறுகளினை எளிதாக்குவேன் என்று பொருள்பட, இங்கு இறைவன் உரைத்ததாக தியாகராஜர் கூறுகின்றார்.

Top


Updated on 07 Dec 2009