Showing posts with label Koluvaiyunnade. Show all posts
Showing posts with label Koluvaiyunnade. Show all posts

Tuesday, September 30, 2008

கொலுவையுன்னாடே3 - ராகம் பை4ரவி - Koluvaiyunnade - Raga Bhairavi

பல்லவி
கொலுவையுன்னாடே3 கோத3ண்ட3 பாணி

அனுபல்லவி
தொலி கர்மமணக3 ஜூதாமு ராரே
தோயஜாரி 1ரோஹிணி கூடி3ன ரீதி (கொ)

சரணம்
மனஸு ரஞ்ஜில்ல ஸுர ஸதுலு
2அணிமாது3லு கொலுவ வேயி வன்னெ
கனக 31லாகனு கேரு ஸீதா
காந்ததோனு த்யாக3ராஜ 4நுதுடு3 (கொ)


பொருள் - சுருக்கம்
கொலுவீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி!

மதியும் ரோகிணியும் கூடியது போன்று,
ஆயிரம் வண்ணப் பொற் கொடியினைப் பழிக்கும்,
மனைவி சீதையுடன், மனது களிக்க,
கொலுவீற்றிருக்கின்றானே, தியாகராசனால்
போற்றப் பெற்ற, கோதண்டபாணி!

வானோர் பெண்டிரும், அணிமா சித்திகளும் சேவிக்கின்றனர்;
முன்வினையடங்க, அக்காட்சியினைக் காணலாம், வாரீர்!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொலுவை உன்னாடே3/ கோத3ண்ட3 பாணி/
கொலு வீற்றிருக்கின்றானே/ கோதண்டபாணி/



அனுபல்லவி
தொலி/ கர்மமு/-அணக3/ ஜூதாமு/ ராரே/
முன்/ வினை/ அடங்க/ காணலாம்/ வாரீர்/

தோயஜ/-அரி/ ரோஹிணி/ கூடி3ன/ ரீதி/
கமல/ பகை (மதி)/ ரோகிணியும்/ கூடியது/ போன்று/
கொலுவீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி!



சரணம்
மனஸு/ ரஞ்ஜில்ல/ ஸுர/ ஸதுலு/
மனது/ களிக்க/ வானோர்/ பெண்டிர்,

அணிமா/-ஆது3லு/ கொலுவ/ வேயி/ வன்னெ/
அணிமா/ முதலாக (சித்திகள்)/ சேவிக்க/ ஆயிரம்/ வண்ண/

கனக/ ஸ1லாகனு/ கேரு/ ஸீதா/
பொற்/ கொடியினை/ பழிக்கும்/ சீதை/

காந்ததோனு/ த்யாக3ராஜ/ நுதுடு3/
மனைவியுடன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/
கொலுவீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி!

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4நுதுடு3 - விநுதுடு3


மேற்கோள்கள்
1ரோஹிணி - ரோகிணி சந்திரனுக்குப் பிரியமான மனைவி. விவரங்களுக்கு நோக்கவும் - ரோகிணி

2அணிமாது3லு - அணிமாதி எண் சித்திகளைக் குறிக்கும்

31லாக - கார்முகில் வண்ண இராமனுடன் பொன்னிற மின்னற் கொடியாக சீதை திகழ்வதாக


விளக்கம்
மதி ரோகிணி - சீதையுடன் இராமன் கொலுவிருக்கும் காட்சி

Top