Showing posts with label Kanakangi Raga. Show all posts
Showing posts with label Kanakangi Raga. Show all posts

Tuesday, July 13, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ க3ண நாத2ம் - ராகம் கனகாங்கி - Sri Gana Natham - Raga Kanakangi

பல்லவி
ஸ்ரீ க3ண நாத2ம் ப4ஜாம்யஹம்
ஸ்ரீ-கரம் சிந்திதார்த22லத3ம்

அனுபல்லவி
ஸ்ரீ கு3ரு கு3ஹாக்3ரஜம் அக்3ர பூஜ்யம்
ஸ்ரீ-கண்டா2த்மஜம் ஸ்1ரித ஸாம்ராஜ்யம் (ஸ்ரீ)

சரணம்
ரஞ்ஜித நாடக ரங்க3 தோஷணம்
ஸி1ஞ்ஜித வர மணி-மய பூ4ஷணம்
1ஆஞ்ஜனேயாவதாரம் 2ஸு-பா4ஷணம்
குஞ்ஜர முக2ம் த்யாக3ராஜ போஷணம் (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • கண நாதனை தொழுவேனே நான்.

    • சீரருள்வோனை,
    • எண்ணியவற்றின் பயனருள்வோனை,

    • குரு குகனுக்கு மூத்தோனை,
    • முதலில் வழிபடப்படுவோனை,
    • நஞ்சு மிடற்றோன் மைந்தனை,
    • சார்ந்தோரின் பேரரசினை,

    • (உலக) வண்ண நாடக அரங்கினில் களிப்போனை,
    • கிண்கிணிக்கும் சிறந்த மணிமயமான அணிகலன்களோனை,
    • ஆஞ்சனேயனாக அவதரித்தோனை,
    • இனிய சொல்லோனை,
    • யானை முகத்தோனை,
    • தியாகராசனைப் பேணுவோனை,

  • கண நாதனை தொழுவேனே நான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ க3ண/ நாத2ம்/ ப4ஜாமி/-அஹம்/
ஸ்ரீ கண/ நாதனை/ தொழுவேனே/ நான்/

ஸ்ரீ/-கரம்/ சிந்தித-அர்த2/ ப2லத3ம்/
சீர்/ அருள்வோனை/ எண்ணியவற்றின்/ பயனருள்வோனை/ ஸ்ரீ கண...


அனுபல்லவி
ஸ்ரீ கு3ரு/ கு3ஹ/-அக்3ரஜம்/ அக்3ர/ பூஜ்யம்/
ஸ்ரீ குரு/ குகனுக்கு/ மூத்தோனை/ முதலில்/ வழிபடப்படுவோனை/

ஸ்ரீ/-கண்ட2/-ஆத்மஜம்/ ஸ்1ரித/ ஸாம்ராஜ்யம்/ (ஸ்ரீ)
நஞ்சு/ மிடற்றோன்/ மைந்தனை/ சார்ந்தோரின்/ பேரரசினை/ ஸ்ரீ கண...


சரணம்
ரஞ்ஜித/ நாடக/ ரங்க3/ தோஷணம்/
(உலக) வண்ண/ நாடக/ அரங்கினில்/ களிப்போனை/

ஸி1ஞ்ஜித/ வர/ மணி/- மய/ பூ4ஷணம்/
கிண்கிணிக்கும்/ சிறந்த/ மணி/ மயமான/ அணிகலன்களோனை/

ஆஞ்ஜனேய/-அவதாரம்/ ஸு/-பா4ஷணம்/
ஆஞ்சனேயனாக/ அவதரித்தோனை/ இனிய/ சொல்லோனை/

குஞ்ஜர/ முக2ம்/ த்யாக3ராஜ/ போஷணம்/ (ஸ்ரீ)
யானை/ முகத்தோனை/ தியாகராசனை/ பேணுவோனை/ ஸ்ரீ கண...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸு-பா4ஷணம் - 2ஸு-பூ4ஷணம்.

Top

மேற்கோள்கள்
1 - ஆஞ்ஜனேயாவதாரம் - ஆஞ்சனேயனாக அவதரித்தோன் : 'ஸங்க்ரஹ ராமாயணத்தில்' இங்ஙனம் கூறப்பட்டுள்ளதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், தியாகராஜர் இயற்றினாரா என்று ஐயமுள்ள பாடல்களின் பட்டியலில், இப்பாடலும் இடம் பெற்றுள்ளது.

நஞ்சு மிடற்றோன் - சிவன்
குரு குகன் - முருகன்
முதலில் வழிபடப்படுவோன் - எந்த சடங்கிற்கு முன்பும்

Top


Updated on 13 Jul 2010