Showing posts with label Ennaallu Tirigedi. Show all posts
Showing posts with label Ennaallu Tirigedi. Show all posts

Thursday, February 26, 2009

தியாகராஜ கிருதி - என்னாள்ளு திரிகே3தி3 - ராகம் மாளவ ஸ்ரீ - Ennaallu Tirigedi - Raga Maalava Sri

பல்லவி
என்னாள்ளு திரிகே3தி3யென்னாள்ளு

அனுபல்லவி
1என்ன ரானி தே3ஹமுலெத்தியீ ஸம்ஸார க3ஹனமந்து3
பன்னுக3 சோருல ரீதி பருலனு வேகி3ஞ்சுசுனு (எ)

சரணம்
caraNam 1
ரேபடி கூடிகி லேத3னி ரேயி பக3லு வெஸனமொந்தி3
ஸ்ரீ பதி பூஜல மரசி சேஸினட்டி வாரி வலெ நே(னெ)


caraNam 2
உப்பு கர்பூரமு 2வரகுனுஞ்ச2வ்ரு2த்திசேனார்ஜிஞ்சி
மெப்புலகு பொட்ட நிம்பி மேமே பெத்33லமனுசு (எ)


caraNam 3
ப்4ரமனுகொனி இருகு3-பொருகு34க்ஷிம்ப ரம்மனி பில்வ
அமருசுகோ பூஜ ஜபமுனாஸாயமு சேதுனனுசு (எ)


caraNam 4
நாயந்து3ண்டே3 தப்புலு நாடே3 3தெலுஸுகொண்டி கானி
பா3ய விடு3வக மாஹானுபா4வ த்யாக3ராஜ வினுத (எ)


பொருள் - சுருக்கம்
பெருந்தகையே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • எத்தனை நாள் திரிவது?

  • எண்ணிறந்த உடல்களெடுத்து, இந்த சமுசாரக் காட்டினில், நேர்த்தியாக, திருடர்கள் போன்று, பிறரை வருத்தி எத்தனை நாள் திரிவது?

  • நாளைய கூழுக்கில்லையென, இரவு பகல் துயருற்று, மாமணாளன் வழிபாட்டினை மறந்து, செய்தவர்கள் போன்று நான் எத்தனை நாள் திரிவது?

  • உப்பு, கற்பூரம் வரைக்கும் உஞ்சவிருத்தியினால் ஈட்டி, வயிற்றை நிரப்பி, புகழுக்காக, யாமே பெரியோரென எத்தனை நாள் திரிவது?

  • திகைத்து, அக்கம்பக்கத்தார் உணவருந்த அழைப்பதற்காக, பொறுமையாக, பூசை, செபம் மாலை வரை செய்குவோமென எத்தனை நாள் திரிவது?

  • என்னிடமுள்ள தவறுகளை அன்றே யறிந்துகொண்டேன்; ஆனால், அவற்றைக் கைவிடாது எத்தனை நாள் திரிவது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னாள்ளு/ திரிகே3தி3/-என்னாள்ளு/
எத்தனை நாள்/ திரிவது/ எத்தனை நாள்/


அனுபல்லவி
என்ன ரானி/ தே3ஹமுலு/-எத்தி/-ஈ/ ஸம்ஸார/ க3ஹனமந்து3/
எண்ணிறந்த/ உடல்கள்/ எடுத்து/ இந்த/ சமுசார/ காட்டினில்/

பன்னுக3/ சோருல/ ரீதி/ பருலனு/ வேகி3ஞ்சுசுனு/ (எ)
நேர்த்தியாக/ திருடர்கள்/ போன்று/ பிறரை/ வருத்தி/ எத்தனை...


சரணம்
caraNam 1
ரேபடி/ கூடிகி/ லேத3னி/ ரேயி/ பக3லு/ வெஸனமு-ஒந்தி3/
நாளைய/ கூழுக்கு/ இல்லையென/ இரவு/ பகல்/ துயருற்று/

ஸ்ரீ/ பதி/ பூஜல/ மரசி/ சேஸின-அட்டி வாரி/ வலெ/ நேனு/ (எ)
மா/ மணாளன்/ வழிபாட்டினை/ மறந்து/ செய்தவர்கள்/ போன்று/ நான்/ எத்தனை...


caraNam 2
உப்பு/ கர்பூரமு/ வரகுனு/-உஞ்ச2வ்ரு2த்திசே/-ஆர்ஜிஞ்சி/
உப்பு/ கற்பூரம்/ வரைக்கும்/ உஞ்சவிருத்தியினால்/ ஈட்டி/

மெப்புலகு/ பொட்ட/ நிம்பி/ மேமே/ பெத்33லமு/-அனுசு/ (எ)
புகழுக்காக/ வயிற்றை/ நிரப்பி/ யாமே/ பெரியோர்/ என/ எத்தனை...


caraNam 3
ப்4ரமனுகொனி/ இருகு3-பொருகு3/ ப4க்ஷிம்ப/ ரம்மனி/ பில்வ/
திகைத்து/ அக்கம்பக்கத்தார்/ உணவருந்த/ வரும்படி/ அழைப்பதற்காக/

அமருசுகோ/ பூஜ/ ஜபமுனு/-ஆஸாயமு/ சேதுனு/-அனுசு/ (எ)
பொறுமையாக/ பூசை/ செபம்/ மாலை வரை/ செய்குவோம்/ என/ எத்தனை...


caraNam 4
நாயந்து3/-உண்டே3/ தப்புலு/ நாடே3/ தெலுஸுகொண்டி/ கானி/
என்னிடம்/ உள்ள/ தவறுகளை/ அன்றே/ அறிந்துகொண்டேன்/ ஆனால்/

பா3ய விடு3வக/ மாஹானுபா4வ/ த்யாக3ராஜ/ வினுத/ (எ)
கைவிடாது/ பெருந்தகையே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ எத்தனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் சரணங்கள் 1-ம் 2-ம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

3 - தெலுஸுகொண்டி - தெலுஸுகொண்டிவி : 'தெலுஸுகொண்டி' என்றால் 'தெரிந்துகொண்டேன்' - இது தன்னைக் குறிக்கும்; 'தெலுஸுகொண்டிவி' என்றால் 'தெரிந்துகொண்டாய்' - இது இறைவனைக் குறிக்கும். இச்சொற்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

அடுத்தவரும் 'பா3ய விடு3வக' என்றால் 'கைவிடாதே' அல்லது 'கைவிடாது' என்று பொருள். இந்த சொல்லைக் கொண்டு பல்லவியுடன் இணைக்கவேண்டும். 'கைவிடாது எத்தனை நாள் திரிவது' எனத்தான் சேர்க்கமுடியும். எனவே, தன்னைக் குறிக்கும் 'தெலுஸுகொண்டி' என்ற சொல் இருந்தால்தான் பொருள் முழுமை பெறும். ஆகவே 'தெலுஸுகொண்டி' தான் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
1 - என்ன ரானி தே3ஹமுலெத்தி - கபீர்தாசர் தன்னுடை ஈரடி 'தோ3ஹா'க்களில் உரைப்பது - 'மனிதப் பிறவி 84 லட்சம் யோனிகளுக்குப் பின்னர் வருகின்றது' என. இதுகுறித்து விளக்கம் நோக்கவும். கபீர்தாசரின் பாடல்கள்.

Top

விளக்கம்
2 - உஞ்ச2வ்ரு2த்தி - மனுஸ்ம்ருதியில் அந்தணர்கள் எங்ஙனம் வாழவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பறவைகள் போன்று, நெற்களத்தில் போரடித்தபின் எஞ்சிய தானியங்களைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கை நடத்தவேண்டும். இதுதான் 'உஞ்ச2வ்ரு2த்தி' என்று கூறப்படும்.

தற்காலம் வரை, உஞ்ச2வ்ரு2த்தியினால் வாழும் அந்தணர்கள், தினமும் காலையில், இறைவன் பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் வருவர். இல்வாழ்வோர், அவர்களுக்கு தானியங்களும் மற்ற பொருட்களும் அளிப்பர். அப்படி சேகரித்தவற்றினைக் கொண்டு உணவு சமைத்துண்ணவேண்டும். அவர்கள் அடுத்த பொழுதிற்காகக் கூட உணவை சேமிக்கக் கூடாது.

உஞ்ச2வ்ரு2த்தியினால் வாழ்வோருக்கு இல்வாழ்வோர் அங்ஙனம் பொருட்கள் அளிப்பது புண்ணியம் எனக் கருதப்படும். பொதுவாக, அரிசி, பருப்பு ஆகியவைதான் அளிக்கப்படும். ஆனால் தியாகராஜர் உப்பு, கற்பூரம் கூட அங்ஙனம் ஈட்டியதாக இப்பாடலில் கூறுகின்றார். மனுஸ்ம்ருதியின் மொழிபெயர்ப்பு

நேர்த்தியாக - இது கேலிச் சொல்
செய்தவர்கள் போன்று - வழிபாட்டினைக் குறிக்கும்
Top


Updated on 26 Feb 2009