Showing posts with label Atla Palukuduvu. Show all posts
Showing posts with label Atla Palukuduvu. Show all posts

Friday, November 6, 2009

தியாகராஜ கிருதி - அட்ல பலுகுது3வு - ராகம் அடா2ணா - Atla Palukuduvu - Raga Athana

பல்லவி
1அட்ல பலுகுது31விட்ல பலுகுது3-
வந்து3கேமி ஸேது ராம நீ(வட்ல)

அனுபல்லவி
2தொட்லனர்ப4குலனூதுவு மரி மரி
1தோசினட்லு கி3ல்லுது3வு ஸ்ரீ ராம நீ(வட்ல)

சரணம்
ஜீவுல ஸி1க்ஷிஞ்சக3 நேர்துவு
சிரஞ்ஜீவுலுகா3 ஜேய நேர்துவுரா
பா4வமெரிகி3 ப்3ரோதுவு ஸத்34க்த
பா43தே4ய ஸ்ரீ த்யாக3ராஜ வினுத (அட்ல)


பொருள் - சுருக்கம்
இராமா! உயர் தொண்டர்களின் பேறே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • நீ அப்படியும் பேசுவாய்; இப்படியும் பேசுவாய்; அதற்கு நானென்ன செய்ய?

    • தொட்டிலில் பிள்ளையையாட்டுவாய்; பின்னர் தோன்றியபடி கிள்ளுவாய்;

    • உயிர்களை தண்டிக்கச் செய்வாய்; நீண்ட ஆயுளுடையோராக்கவும் செய்வாயய்யா;

  • நோக்கமறிந்து காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அட்ல/ பலுகுது3வு/-இட்ல/ பலுகுது3வு/-
அப்படியும்/ பேசுவாய்/ இப்படியும்/ பேசுவாய்/

அந்து3கு/-ஏமி/ ஸேது/ ராம/ நீவு/-(அட்ல)
அதற்கு/ (நான்) என்ன/ செய்ய/ இராமா/ நீ/ அப்படியும்...


அனுபல்லவி
தொட்லனு/-அர்ப4குல/-ஊதுவு/ மரி மரி/
தொட்டிலில்/ பிள்ளையை/ ஆட்டுவாய்/ பின்னர்/

தோசினட்லு/ கி3ல்லுது3வு/ ஸ்ரீ ராம/ நீவு/-(அட்ல)
தோன்றியபடி/ கிள்ளுவாய்/ ஸ்ரீ ராமா/ நீ/ அப்படியும்...


சரணம்
ஜீவுல/ ஸி1க்ஷிஞ்சக3/ நேர்துவு/
உயிர்களை/ தண்டிக்க/ செய்வாய்/

சிரஞ்ஜீவுலுகா3/ ஜேய/ நேர்துவுரா/
நீண்ட ஆயுளுடையோராக/ ஆக்கவும்/ செய்வாயய்யா/

பா4வமு/-எரிகி3/ ப்3ரோதுவு/ ஸத்3-/ப4க்த/
நோக்கம்/ அறிந்து/ காப்பாய்/ உயர்/ தொண்டர்களின்/

பா43தே4ய/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ (அட்ல)
பேறே/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ அப்படியும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அட்ல, இட்ல, தோசினட்லு - அட்ட, இட்ட, தோசினட்டு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - தொட்லனர்ப4குலனூதுவு கி3ல்லுது3வு - தொட்டிலில் பிள்ளையை ஆட்டுவாய், பின்னர் கிள்ளுவாய். 'பிள்ளையைக் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுதல்' எனும் தமிழ் வழக்கினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.

இச்சைகள் - அவை நிறைவேறுதல் - இச்சைகளினால் ஏற்படும் துயரம் - அவற்றின் நிவர்த்தி - மறுபடியும் இச்சைகள் - இங்ஙனம் ஒரு சுழற்சியாக வருதலை தியாகராஜர் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது. திருமலையானின் பெரும் தொண்டரான 'அன்னமய்ய' தனது 'நானாடி ப3துகு' என்ற கீர்த்தனையில் கூறுவது 'பாவங்கள் அறா, புண்ணியங்கள் தீரா' என. 'அந்தர்யாமி' என்ற கீர்த்தனையில் 'நீ நிறுத்தாது, இவை (பாவங்களும் புண்ணியங்களும்) நில்லா' எனவும் கூறுகின்றார்.

Top


Updated on 06 Nov 2009