Tuesday, March 1, 2011

தியாகராஜ கிருதி - நேரமா ராம - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Neramaa Rama - Raga Saurashtram

பல்லவி
1நேரமா 2ராம ராம நீகிதி3
நீரஜாக்ஷ நா ஜீவாதா4

அனுபல்லவி
மார கோடி ஸௌந்த3ர்யமுனு கனி
மதி3லோன ஸுந்த மரசியுண்டே (நே)

சரணம்
கோரி கோரி நீது3 கொலுவு ஸேயு வேள
ஸாரமைன பத3 ஸாரஸமுல
பொங்கா3ர ஜூசியுரமுனனுஞ்சுதா3மோ
3கனுலனொத்துதா3மோயனி
கூரிமினி 4ப்3ரஹ்மானந்த3மந்து3சுனு
கொந்த மை மரசியுண்டினி கானி
தாரகாதி4பானன பாவன
ஸீதா நாயக ஸ்ரீ த்யாக3ராஜுனிபை (நே)


பொருள் - சுருக்கம்
  • கமலக்கண்ணா! எனதுயிரின் ஆதாரமே!
  • தாரை யரசன் முகத்தோனே! தூயோனே! சீதை நாயகனே!

  • தவறா, ராம ராம! உனக்கிது?

    • மாரர் கோடி எழிலினைக் கண்டு உள்ளத்தில் சற்று (மெய்) மறந்திருந்தால்

  • தவறா, ராம ராம! உனக்கிது?

    • மிக்கு விழைந்து உனது சேவை செய்கையில்,
    • சாரமான உனது திருவடித் தாமரைகளைக் களிப்புடன் கண்டு,
    • நெஞ்சில் இருத்துவோமா அன்றி, கண்களில் ஒத்திக் கொள்வோமா யென,
    • காதலினால் பேரானந்தம் அனுபவித்துக்கொண்டு, சற்று மெய் மறந்திருந்தேனே யன்றி,

  • தியாகராசன் மீது தவறா, ராம ராம! உனக்கிது?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நேரமா/ ராம ராம/ நீகு/-இதி3/
தவறா/ ராம ராம/ உனக்கு/ இது/

நீரஜ/-அக்ஷ/ நா/ ஜீவ/-ஆதா4ர/
கமல/ கண்ணா/ எனது/ உயிரின்/ ஆதாரமே/


அனுபல்லவி
மார/ கோடி/ ஸௌந்த3ர்யமுனு/ கனி/
மாரர்/ கோடி/ எழிலினை/ கண்டு/

மதி3லோன/ ஸுந்த/ மரசி/-உண்டே/ (நே)
உள்ளத்தில்/ சற்று/ (மெய்) மறந்து/ இருந்தால்/ தவறா...


சரணம்
கோரி கோரி/ நீது3/ கொலுவு/ ஸேயு வேள/
மிக்கு விழைந்து/ உனது/ சேவை/ செய்கையில்/

ஸாரமைன/ பத3/ ஸாரஸமுல/
சாரமான/ (உனது) திருவடி/ தாமரைகளை/

பொங்கா3ர/ ஜூசி/-உரமுன/-உஞ்சுதா3மோ/
களிப்புடன்/ கண்டு/ நெஞ்சில்/ இருத்துவோமா/ அன்றி/

கனுல/-ஒத்துதா3மோ/-அனி/
கண்களில்/ ஒத்திக் கொள்வோமா/ யென/

கூரிமினி/ ப்3ரஹ்மானந்த3மு/-அந்து3சுனு/
காதலினால்/ பேரானந்தம்/ அனுபவித்துக்கொண்டு/

கொந்த/ மை/ மரசி/-உண்டினி/ கானி/
சற்று/ மெய்/ மறந்து/ இருந்தேனே/ யன்றி/

தாரக/-அதி4ப/-ஆனன/ பாவன/
தாரை/ யரசன்/ முகத்தோனே/ தூயோனே/

ஸீதா/ நாயக/ ஸ்ரீ த்யாக3ராஜுனிபை/ (நே)
சீதை/ நாயகனே/ ஸ்ரீ தியாகராசன் மீது/ தவறா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ராம ராம - ராம ராம! - 'ஐயகோ' என்று பொருளாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நேரமா - தவறா? - தியாகராஜர், இறைவனின் எழிலான முகத்தினையும், திருவடித் தாமரைகளையும் கண்டு, மெய் மறந்து இருந்தார். உணர்வு திரும்பியவுடன், இறைவனின் அந்த முகமும், திருவடிகளும் மறைந்துவிட்டதற்கு, 'தான் மெய் மறந்திருந்தது தவறா?' என்று இறைவனிடம் கேட்பதாகத் தோன்றுகின்றது.

3 - கனுலனொத்துதா3மோ - கண்களில் ஒத்திக்கொள்வோமா? மிக்குப் புனிதமானப் பொருள் எதையும் தொட்டால், அதனைக் கண்களில் ஒத்திக்கொள்வது பொதுவாக வழக்கம்.

4 - ப்3ரஹ்மானந்த3மந்து3சுனு - பேரானந்தம் அனுபவித்துக்கொண்டு - இந்த நிலை, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற மகான்களே எய்தினார்கள் என, அப்பெருந்தகைகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறிகின்றோம். இப்பேரானந்தம் எத்தகையதென்று அறிவு பூர்வமாக வருணிக்க இயலாது. எனவே, அத்தகைய பெரியோர் யாராகிலும், நான் இங்கு கூறியவற்றில் தவறேதும் இருந்தால் மன்னிப்பார்களாக.

தாரை யரசன் - மதி

Top


Updated on 01 Mar 2011

No comments: