Wednesday, March 9, 2011

தியாகராஜ கிருதி - ராம ராம கோ3விந்த3 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Rama Rama Govinda - Raga Saurashtram

பல்லவி
ராம ராம கோ3விந்த3 1நனு ரக்ஷிஞ்சு முகுந்த3
சரணம்
சரணம் 1
கலி யுக3 மனுஜுலு நீகு 2மஹாத்ம்யமு
கலது3 லேத3னே காலமாயெகா3 (ரா)


சரணம் 2
காமுனி தா3ஸுலு நா பலுகுல வினி
காவலஸினடுலனாட3னாயெ கதா3 (ரா)


சரணம் 3
பாமருலனு கனி ஸிக்3கு3 படு3சு மரி
மோமு மருகு3 ஜேஸி திருக3னாயெனு (ரா)


சரணம் 4
க்ரொவ்வு க3ல நருல கொனியாட33 3சிரு
நவ்வுலதோ
நனு 4ஜூட3னாயெ கதா3 (ரா)


சரணம் 5
மதி ஹீனுலு ஸ்ரீ பதி தா3ஸுலகீ
3தி ராராத3னி பல்கனாயெ கதா3 (ரா)


சரணம் 6
நம்மினாட3னே பேருகைன நீ
தம்முனிதோனைன 5பல்கவைதிவி (ரா)


சரணம் 7
6கார்யாகார்யமு ஸமமாயெனு நீ
ஸௌ1ர்யமெந்து3 தா3சுகொண்டிவய்யோ (ரா)


சரணம் 8
7ராக ராக 8ப்3ரதுகிட்லாயெனு ஸ்ரீ
த்யாக3ராஜ நுத தருணமு காது3 (ரா)


பொருள் - சுருக்கம்
  • இராமா! கோவிந்தா! முகுந்தா!
  • தியாகராசன் போற்றுவோனே!

  • என்னைக் காப்பாய்.

    • கலியுக மனிதர்கள் உனக்கு மகிமை உண்டு, இல்லையெனும் காலம் வந்ததன்றோ!
    • காமனின் அடிமைகள் எனது சொற்களைக் கேட்டு, (தமக்கு) வேண்டியவாறு பேசலாயிற்றன்றோ!
    • இழிந்தோரைக் கண்டு, வெட்கப்பட்டுக் கொண்டு, முகத்தை மறைத்துத் திரியவேண்டியதாயிற்று!
    • கொழுப்புடைய மனிதர்களைப் புகழ்ந்ததனால், (கேலிப்) புன்னகையுடன் என்னை நோக்கலாயிற்றன்றோ!
    • அறிவீனர்கள், அரியின் தொண்டர்களுக்கு, இந்த கதி வரவேண்டாமெனப் பேசலாயிற்றன்றோ!

    • (உன்னை) நம்பினானெனும் பேருக்காகிலும், உனது தம்பியிடமாவது, சொல்லாதவன் ஆகினாய்!
    • செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள் சமமாகின.
    • உனது வீரத்தையெங்கு ஒளித்துக்கொண்டாய், ஐயகோ?

    • வர வர, பிழைப்பு இவ்விதமானது.
    • இது தருணமன்று.


  • என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ கோ3விந்த3/ நனு/ ரக்ஷிஞ்சு/ முகுந்த3/
இராமா/ இராமா/ கோவிந்தா/ என்னை/ காப்பாய்/ முகுந்தா/


சரணம்
சரணம் 1
கலி/ யுக3/ மனுஜுலு/ நீகு/ மஹாத்ம்யமு/
கலி/ யுக/ மனிதர்கள்/ உனக்கு/ மகிமை/

கலது3/ லேது3/-அனே/ காலமு/-ஆயெகா3/ (ரா)
உண்டு/ இல்லை/ யெனும்/ காலம்/ வந்ததன்றோ/


சரணம் 2
காமுனி/ தா3ஸுலு/ நா/ பலுகுல/ வினி/
காமனின்/ அடிமைகள்/ எனது/ சொற்களை/ கேட்டு/

காவலஸின-அடுல/-ஆட3னாயெ/ கதா3/ (ரா)
(தமக்கு) வேண்டியவாறு/ பேசலாயிற்று/ அன்றோ/


சரணம் 3
பாமருலனு/ கனி/ ஸிக்3கு3 படு3சு/ மரி/
இழிந்தோரை/ கண்டு/ வெட்கப்பட்டுக் கொண்டு/ மேலும்/

மோமு/ மருகு3 ஜேஸி/ திருக3னு/-ஆயெனு/ (ரா)
முகத்தை/ மறைத்து/ திரியவேண்டியது/ ஆயிற்று/


சரணம் 4
க்ரொவ்வு க3ல/ நருல/ கொனியாட33/
கொழுப்புடைய/ மனிதர்களை/ புகழ்ந்ததனால்/

சிரு நவ்வுலதோ/ நனு/ ஜூட3னாயெ/ கதா3/ (ரா)
(கேலிப்) புன்னகையுடன்/ என்னை/ நோக்கலாயிற்று/ அன்றோ/


சரணம் 5
மதி ஹீனுலு/ ஸ்ரீ/ பதி/ தா3ஸுலகு/-ஈ/
அறிவீனர்கள்/ இலக்குமி/ மணாளன் (அரியின்)/ தொண்டர்களுக்கு/ இந்த/

3தி/ ராராது3/-அனி/ பல்கனாயெ/ கதா3/ (ரா)
கதி/ வரவேண்டாம்/ என/ பேசலாயிற்று/ அன்றோ/


சரணம் 6
நம்மினாடு3/-அனே/ பேருகு/-ஐன/ நீ/
(உன்னை) நம்பினான்/ எனும்/ பேருக்கு/ ஆகிலும்/ உனது/

தம்முனிதோனு-ஐன/ பல்கவு/-ஐதிவி/ (ரா)
தம்பியிடமாவது/ சொல்லாதவன்/ ஆகினாய்/


சரணம் 7
கார்ய-அகார்யமு/ ஸமமு/-ஆயெனு/ நீ/
செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள்/ சமம்/ ஆகின/ உனது/

ஸௌ1ர்யமு/-எந்து3/ தா3சுகொண்டிவி/-அய்யோ/ (ரா)
வீரத்தை/ யெங்கு/ ஒளித்துக்கொண்டாய்/ ஐயகோ/


சரணம் 8
ராக/ ராக/ ப்3ரதுகு/-இட்லு/-ஆயெனு/
வர/ வர/ பிழைப்பு/ இவ்விதம்/ ஆனது/

ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ தருணமு/ காது3/ (ரா)
ஸ்ரீ தியாகராசன்/ போற்றுவோனே/ (இது) தருணம்/ அன்று/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலாவது சரணம், அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - நனு ரக்ஷிஞ்சு - ரக்ஷிஞ்சு.

2 - மஹாத்ம்யமு - மாஹாத்ம்யமு : 'மாஹாத்ம்ய' என்ற சம்ஸ்கிருதச் சொல், தெலுங்கில், 'மஹாத்ம்யமு' என்று வழங்கும்.

5 - பல்கவைதிவி - பல்கனைதிவி : புத்தகங்களில், இதற்கு, 'சொல்ல மாட்டாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இது 'பல்கவு' என்று இருக்கவேண்டும். எனவே, 'பல்கவைதிவி' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
6 - கார்யாகார்யமு - செய்யவேண்டிய, செய்யத்தகாத காரியங்கள் - இது குறித்து, கண்ணன் கீதையில் (அத்தியாயம் 16, செய்யுள் 24) கூறியது -

"அதனால், செய்ய வேண்டியு மற்றும் செயத்தாகத காரியங்களை அறிந்துகொள்ள, சாத்திரங்கள் உனக்கு பிரமாணமாக இருக்கட்டும். சாத்திரங்களின் கூற்றுக்களை அறிந்துகொண்டு, இங்கு பணிகள் இயற்றுவாயாக." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
3 - சிரு நவ்வுலதோ - புன்னகையுடன் - கேலிப் புன்னகை.

4 - ஜூட3னாயெ - நோக்கலாயிற்று. இச்சொல் வரும் இடத்தினைப் பொருத்து, இது 'கொழுப்புள்ள மனிதர்கள் கேலிப் புன்னகையுடன் நோக்குகின்றனர்' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், மனிதர்களைப் புகழ்ந்ததனால், 'இறைவன், தியாகராஜரை கேலியாக நோக்கினான்' என்றும் பொருள் கொள்ளலாம்.

Top

7 - ராக ராக - வர வர - புத்தகங்களில் கொள்ளப்பட்டுள்ள இந்தப் பொருளை அனுசரித்து, அதற்கான தெலுங்குச் சொல் 'ரானு ரானு' ஆகும். ஆனால், எல்லா புத்தகங்களிலும் 'ராக3 ராக3' என்று கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறாகும். இது, 'வர வர' என்ற தமிழ் வழக்கினை, நேராக தெலுங்கில், 'ராக ராக' என்று கொள்ளப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எனவே, 'ராக ராக' என்று ஏற்கப்பட்டது.

8 - ப்3ரதுகிட்லாயெனு - பிழைப்பு இப்படியானது - இதற்கு முந்தைய சரணங்களில் கூறியவற்றைக் குறிக்கும்.

மகிமை உண்டு, இல்லை - ஐயப்படுதல் - வாதித்தல்

Top


Updated on 10 Mar 2011

No comments: