Sunday, February 13, 2011

தியாகராஜ கிருதி - மரியாத3 காத3ய்ய - ராகம் பை4ரவம் - Mariyaada Kaadayya - Raga Bhairavam

பல்லவி
மரியாத3 காத3ய்ய மனுபவதே3மய்ய

அனுபல்லவி
ஸரிவாரிலோ நன்னு சௌக சேயுடெல்ல ஸ்ரீ
ஹரி ஹரி நீவண்டி கருணா நிதி4கி (ம)

சரணம்
தன வாருலன்யுலனே 1தாரதம்யமுனு
4னுடை3ன தா31ரதி2கே கலத3னி கீர்தி கதா3
நினு பா32நேரனி நன்னு ப்3ரோவகுண்டே3தி3
34னத3 ஸகு23கு3 த்யாக3ராஜ பூஜித (ம)


பொருள் - சுருக்கம்
  • அரியே!
  • குபேரனின் நண்பனாகிய தியாகராசன் தொழுவோனே!

  • மரியாதையன்றய்யா!
  • (என்னைக்) காவாய், அஃதென்னவய்யா?

    • ஈடானோரில், என்னைச் சிறுமைப்படுத்துவதெல்லாம், உன்னைப் போன்ற கருணைக் கடலுக்கு,

  • மரியாதையன்றய்யா!

    • தன்னவர், பிறரெனும் பாகுபாடு, மேலோனாகிய, தாசரதிக்கே கிடையாதெனும் புகழன்றோ!
    • உன்னைப் பிரிய அறிந்திலாத என்னைக் காவாதிருத்தல்,

  • மரியாதையன்றய்யா!
  • (என்னைக்) காவாய், அஃதென்னவய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரியாத3/ காது3/-அய்ய/ மனுபவு/-அதி3/-ஏமி/-அய்ய/
மரியாதை/ யன்று/ அய்யா/ (என்னைக்) காவாய்/ அஃது/ என்ன/ அய்யா/


அனுபல்லவி
ஸரிவாரிலோ/ நன்னு/ சௌக சேயுட/-எல்ல/
ஈடானோரில்/ என்னை/ சிறுமைப்படுத்துவது/ எல்லாம்/

ஸ்ரீ ஹரி/ ஹரி/ நீவு/-அண்டி/ கருணா/ நிதி4கி/ (ம)
ஸ்ரீ ஹரி/ ஹரி/ உன்னை/ போன்ற/ கருணை/ கடலுக்கு/ மரியாதை...


சரணம்
தன வாருலு/-அன்யுலு/-அனே/ தாரதம்யமுனு/
தன்னவர்/ பிறர்/ எனும்/ பாகுபாடு/

4னுடை3ன/ தா31ரதி2கே/ கலது3/-அனி/ கீர்தி/ கதா3/
மேலோனாகிய/ தாசரதிக்கே/ கிடையாது/ எனும்/ புகழ்/ அன்றோ/

நினு/ பா3ய/ நேரனி/ நன்னு/ ப்3ரோவக/-உண்டே3தி3/
உன்னை/ பிரிய/ அறிந்திலாத/ என்னை/ காவாது/ இருத்தல்/

4னத3/ ஸகு23கு3/ த்யாக3ராஜ/ பூஜித/ (ம)
குபேரனின்/ நண்பனாகிய/ தியாகராசன்/ தொழுவோனே/ மரியாதை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாரதம்யமுனு - இங்ஙனமே அனைத்து புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தில், 'தாரதம்யமு முனு' என்ற வேறுபாடு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'தாரதம்ய' என்றோ 'தாரதம்யமு' என்றோதான் இருக்கவேண்டும். 'தாரதம்யமு முனு' என்ற வேறுபாடும் சரியெனப்படவில்லை.

Top

மேற்கோள்கள்
3 - 4னத3 ஸகு23கு3 த்யாக3ராஜ - குபேரனனின் நண்பணாகிய தியாகராசன் - சிவன் - சிவன், குபேரனுக்கு வேண்டியவன் என்பது பற்றிய கதை சிவ மகா புராணத்தினில் (ருத்ர ஸம்ஹிதை - குணநிதி எனும் அந்தணனின் மகன்) கொடுக்கப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
2 - நேரனி - இச்சொல்லுக்கு 'நேராத' என்றும் 'கற்றறியாத' என்றும் பொருள்கள் உண்டு. இவ்விடத்தில், பிற்கூறிய பொருளில் ஏற்கப்பட்டது.

தாசரதி - தசரதன் மைந்தன் - இராமன்

Top


Updated on 13 Feb 2011

1 comment:

Unknown said...

infinite pranams to you what a great service.
dhanyavadanam
Ashok
8056009575