சாலு சாலு நீ 1யுக்துலு நட3வது3
ஸாரஸாக்ஷ 2ஸ்ரீ க்ரு2ஷ்ணா
அனுபல்லவி
ஸூ1ல த4ராது3லகருதை3ன மமு கூடி3
ஸுக2மனுப4விம்பவே 2ஸ்ரீ க்ரு2ஷ்ணா (சா)
சரணம்
சரணம் 1
அத4ர ரத3னமுல கனி ஸொக்குசு
மேமாஸிஞ்சி வச்சிதிமி
பு3த4 ரக்ஷக 3ஸ1ல்ய ஸாரத்2யமொனரிஞ்சி
4பொ3ங்கேதெ3ருக3மைதிமி ஸ்ரீ 2க்ரு2ஷ்ணா (சா)
சரணம் 2
கண்ட3 சக்கெரவண்டி பலுகுலு வினி மேமு
காமிஞ்சி வச்சிதிமி
உண்டி3யுண்டி3 5பா3லுனி கி3ல்லி மரி தொட்ல-
னுசேதெ3ருக3மைதிமி 2ஸ்ரீ க்ரு2ஷ்ணா (சா)
சரணம் 3
த்யாக3ராஜ நுதுட3னி அதி 6ப்ரேமதோ
தருணுலு வச்சிதிமி
போ4கி3 ஸ1யன மா மாடலு மீரகு
பு3த்3தி4ஸா1லிவௌது3 ஸுமீ 2ஸ்ரீ க்ரு2ஷ்ணா (சா)
பொருள் - சுருக்கம்
- கமலக்கண்ணா! ஸ்ரீ கிருஷ்ணா!
- அறிஞரைக் காப்போனே!
- அரவணையோனே!
- போதும், போதும், உனது சூழ்ச்சிகள் நடக்காது!
- சூலமேந்தி முதலானோருக்கும் அரிதான எம்மைக் கலந்து இன்புறுவாயே!
- (உனது) இதழ்கள், பற்களைக் கண்டு சொக்கி, யாம் ஆசைப்பட்டு வந்தோம்;
- 'சல்லியன் தேரோட்டம்' செய்து ஏமாற்றுவ தறிந்திலோம்.
- கண்டசருக்கரை நிகருனது சொற்களைக் கேட்டு, யாம் காமித்து வந்தோம்;
- இருந்திருந்து, குழந்தையைக் கிள்ளிப் பின் தொட்டிலை ஆட்டுவ தறிந்திலோம்.
- தியாகராசன் போற்றுவோனென மிக்கு காதலுடன் கன்னியர் வந்தோம்;
- எமது சொற்களை மீறாதே;
- புத்திசாலி ஆவாய் (நீ), அல்லவா!
- சூலமேந்தி முதலானோருக்கும் அரிதான எம்மைக் கலந்து இன்புறுவாயே!
- போதும், போதும், உனது சூழ்ச்சிகள் நடக்காது!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சாலு/ சாலு/ நீ/ யுக்துலு/ நட3வது3/
போதும்/ போதும்/ உனது/ சூழ்ச்சிகள்/ நடக்காது/
ஸாரஸ/-அக்ஷ/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/
கமல/ கண்ணா/ ஸ்ரீ கிருஷ்ணா/
அனுபல்லவி
ஸூ1ல/ த4ர/-ஆது3லகு/-அருதை3ன/ மமு/ கூடி3/
சூலம்/ ஏந்தி/ முதலானோருக்கும்/ அரிதான/ எம்மை/ கலந்து/
ஸுக2மு-அனுப4விம்பவே/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ (சா)
இன்புறுவாயே/ ஸ்ரீ கிருஷ்ணா/
சரணம்
சரணம் 1
அத4ர/ ரத3னமுல/ கனி/ ஸொக்குசு/ மேமு/-
(உனது) இதழ்கள்/ பற்களை/ கண்டு/ சொக்கி/ யாம்/
ஆஸிஞ்சி/ வச்சிதிமி/
ஆசைப்பட்டு/ வந்தோம்/
பு3த4/ ரக்ஷக/ ஸ1ல்ய/ ஸாரத்2யமு/-ஒனரிஞ்சி/
அறிஞரை/ காப்போனே/ 'சல்லியன்/ தேரோட்டம்/ செய்து/
பொ3ங்கேதி3/-எருக3மைதிமி/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ (சா)
ஏமாற்றுவது/ அறிந்திலோம்/ ஸ்ரீ கிருஷ்ணா/
சரணம் 2
கண்ட3/ சக்கெர/-அண்டி/ பலுகுலு/ வினி/ மேமு/
கண்ட/ சருக்கரை/ நிகர்/ (உனது) சொற்களை/ கேட்டு/ யாம்/
காமிஞ்சி/ வச்சிதிமி/
காமித்து/ வந்தோம்/
உண்டி3/-உண்டி3/ பா3லுனி/ கி3ல்லி/ மரி/ தொட்லனு/-
இருந்து/ இருந்து/ குழந்தையை/ கிள்ளி/ பின்/ தொட்டிலை/
ஊசேதி3/-எருக3மைதிமி/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ (சா)
ஆட்டுவது/ அறிந்திலோம்/ ஸ்ரீ கிருஷ்ணா/
சரணம் 3
த்யாக3ராஜ/ நுதுடு3/-அனி/ அதி/ ப்ரேமதோ/
தியாகராசன்/ போற்றுவோன்/ என/ மிக்கு/ காதலுடன்/
தருணுலு/ வச்சிதிமி/
கன்னியர்/ வந்தோம்/
போ4கி3/ ஸ1யன/ மா/ மாடலு/ மீரகு/
அரவு/ அணையோனே/ எமது/ சொற்களை/ மீறாதே/
பு3த்3தி4ஸா1லி/-ஔது3/ ஸுமீ/ ஸ்ரீ க்ரு2ஷ்ணா/ (சா)
புத்திசாலி/ ஆவாய்/ (நீ) அல்லவா/ ஸ்ரீ கிருஷ்ணா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ்ரீ க்ரு2ஷ்ணா - ஸ்ரீ க்ரு2ஷ்ண.
4 - பொ3ங்கேதெ3ருக3 - பொ3ங்குடெருக3.
5 - தொட்லனுசேதெ3ருக3 - தொட்லயூசனதெ3ருக3 : முற்கூறியதே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது. அங்ஙனமே ஏற்கப்பட்டது.
6 - ப்ரேமதோ - ப்ரேமசே.
Top
மேற்கோள்கள்
3 - ஸ1ல்ய ஸாரத்2யமு - சல்லியன், பாண்டவர்களில் இளையவர்களான, நகுலன், சகாதேவனுக்குத் தாய்மாமன் ஆவான். அவன் சிறந்த தேரோட்டி. பாரதப்போரில் பாண்டவர் பக்கம் கலந்துகொள்வதற்காக, படையுடன் வருகையில், கௌரவர்கள் அவனை ஏமாற்றி தங்கள் படையில் சேரும்படி செய்கின்றனர்.(மகாபாரதம் - 5-வது புத்தகம் - உத்தியோக பருவம் - 8-வது அத்தியாயம் ) பின்னர், சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாகச் சென்று, போர்க் களத்தில், கர்ணனை சமயத்தில் கைவிட்டுப் பழிதீர்த்துக்கொண்டான். அதன் காரணமாக, கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான். இதுதான் சல்லியன் தேரோட்டம் - அதாவது சமயத்தில் கைவிடுதல் - என்று வழங்கும். முழு கதைக்கு மகாபாரதம் - சல்லிய பருவம் நோக்கவும்.
Top
விளக்கம்
1 - யுக்துலு - சூழ்ச்சிகள் - பாடலின் பின்னணியினை நோக்கவும்.
5 - பா3லுனி கி3ல்லி மரி தொட்லனுசேதி3 - உறங்கும் பிள்ளையைக் கிள்ளி, பின்னர் தொட்டிலை யாட்டித் தூங்கவைத்தல்.
இப்பாடல், 'நௌக சரித்ரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினைச் சேர்ந்ததாகும்.
Top
பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். பின்னர், கண்ணன், தன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக் கூறி, அவர்களை நம்பவைக்கின்றான். அதன் பின்னர், யாவரும் ஒடத்தில், கண்ணனுடன் கலந்து விளையாடுகின்றனர். கண்ணன், ஒவ்வொரு ஆய்ச்சிக்கும் ஒவ்வொரு உருவம் எடுத்து, எல்லோருடனும் விளையாடினான். ஆய்ச்சியர் தம்முடைய பேற்றினை வியந்து பாடுகின்றனர். பின்னர், கண்ணன், மேற்குப் பக்கம் படகை செலுத்த கோபியரை வேண்டுகின்றான். இதனை, கோபியர், சூழ்ச்சி என்று நினைக்கின்றனர். அதனைத் தான் இப்பாடலில் 'யுக்திகள் நடக்காது' என்று கண்ணனிடம் கூறுகின்றனர்.
சூலமேந்தி - சிவன்
Top
Updated on 30 Dec 2010
No comments:
Post a Comment