Friday, November 12, 2010

தியாகராஜ கிருதி - தா31ரதே23யா - ராகம் கோகில ப்ரிய - Dasarathe Daya - Raga Kokila Priya

பல்லவி
தா31ரதே23யா ஸ1ரதே4

அனுபல்லவி
ஆஸ1ர ஹரண 1பராஸ1 கே3
கவீஸ1 ஸு-ஹ்ரு23ய நிவேஸ1 2க்4ரு2ணா-கர (தா3)

சரணம்
ஸரஸிஜ நாப4 ஜல த4ர ஸோ14
பரிபாலிதேப4 வர ப4க்த லாப4
பரிசர கீஸ1 பாப வினாஸ1
தரணி ஸங்காஸ1 த்யாக3ராஜேஸ1 (தா3)


பொருள் - சுருக்கம்
  • தசரதன் மகனே! கருணைக் கடலே!
  • அரக்கரையழித்தோனே! பராசரரால் பாடப் பெற்றோனே! கவிகளின் தலைவனுள்ளம் புகுந்தோனே! கருணாகரனே!
  • கமல உந்தியோனே! கார்முகிலின் மாட்சிமையோனே! வாரணத்தினைக் காத்தோனே! நற்றொண்டரின் லாபமே! வானரர் சேவகமுடைத்தோனே! பாவம் களைவோனே! பரிதி நிகர் ஒளியோய்! தியாகராசனின் தலைவா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தா31ரதே2/ த3யா/ ஸ1ரதே4/
தசரதன் மகனே/ கருணை/ கடலே/


அனுபல்லவி
ஆஸ1ர/ ஹரண/ பராஸ1ர/ கே3ய/
அரக்கரை/ யழித்தோனே/ பராசரரால்/ பாடப் பெற்றோனே/

கவி/-ஈஸ1/ ஸு-ஹ்ரு23ய/ நிவேஸ1/ க்4ரு2ணா-கர/ (தா3)
கவிகளின்/ தலைவன்/ உள்ளம்/ புகுந்தோனே/ கருணாகரனே/


சரணம்
ஸரஸிஜ/ நாப4/ ஜல த4ர/ ஸோ14/
கமல/ உந்தியோனே/ கார்முகிலின்/ மாட்சிமையோனே/

பரிபாலித/-இப4/ வர ப4க்த/ லாப4/
காத்தோனே/ வாரணத்தினை/ நற்றொண்டரின்/ லாபமே/

பரிசர/ கீஸ1/ பாப/ வினாஸ1/
சேவகமுடைத்தோனே/ வானரரின்/ பாவம்/ களைவோனே/

தரணி/ ஸங்காஸ1/ த்யாக3ராஜ/-ஈஸ1/ (தா3)
பரிதி/ நிகர் ஒளியோய்/ தியாகராசனின்/ தலைவா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - க்4ரு2ணா-கர - கருணா-கர.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பராஸ1 - பராசரர் - வியாச முனியின் தந்தை.

கவிகளின் தலைவன் - வால்மீகி
வாரணம் - யானை - முதலையின் பிடியிலிருந்து காத்தது

Top


Updated on 12 Nov 2010

No comments: