Sunday, November 14, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ஜனக தனயே - ராகம் கலகண்டி2 - Sri Janaka Tanaye - Raga Kalakanthi

பல்லவி
ஸ்ரீ ஜனக தனயே ஸ்1ரித கமலாலயே

அனுபல்லவி
ராஜந்-நவ மணி பூ4ஷணே ஸ்ரீ
ரகு4 ராம ஸதி ஸததம் மாமவ (ஸ்ரீ)

சரணம்
11த வத3னாத்3யாஸ1ர ஜல த4ரானிலே
நத மானவ மானஸ ஸத்-ஸத3னே
21த மக2 கிரீட லஸன்-மணி க3
நீராஜித சரணே
த்யாக3ராஜார்சிதே (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • ஜனகன் மகளே! சார்ந்தோர் (இதயக்) கமலத்திலுறைபவளே!
  • ஒளிரும் நவமணி அணிகலன்கள் அணிபவளே! இரகுராமனின் மனையாளே!
  • நூறு வதனன் ஆகிய அரக்கர் நீர்முகிலைக் கலைக்கும் காற்றே! பணியும் மனிதரின் தூய உள்ளத்துறைபவளே! இந்திரன் கிரீடத்தில் திகழும் மணிகள் ஒளிர்விக்கும் திருவடியினளே! தியாகராஜன் தொழுபவளே!

  • எப்போதும் என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ஜனக/ தனயே/ ஸ்1ரித/ கமல/-ஆலயே/
ஸ்ரீ ஜனகன்/ மகளே/ சார்ந்தோர்/ (இதயக்) கமலத்தில்/ உறைபவளே/


அனுபல்லவி
ராஜந்/-நவ/ மணி/ பூ4ஷணே/
ஒளிரும்/ நவ/ மணி/ அணிகலன்கள் அணிபவளே/

ஸ்ரீ ரகு4/ ராம/ ஸதி/ ஸததம்/ மாம்/-அவ/ (ஸ்ரீ)
ஸ்ரீ ரகு/ ராமனின்/ மனையாளே/ எப்போதும்/ என்னை/ காப்பாய்/


சரணம்
1த/ வத3ன/-ஆதி3/-ஆஸ1ர/ ஜல த4ர/-அனிலே/
நூறு/ வதனன்/ ஆகிய/ அரக்கர்/ நீர்முகிலை/ (கலைக்கும்) காற்றே/

நத/ மானவ/ மானஸ/ ஸத்/-ஸத3னே/
பணியும்/ மனிதரின்/ உள்ளத்தில்/ தூய/ உறைபவளே/

1த மக2/ கிரீட/ லஸன்/-மணி க3ண/
இந்திரன்/ கிரீடத்தில்/ திகழும்/ மணிகள்/

நீராஜித/ சரணே/ த்யாக3ராஜ/-அர்சிதே/ (ஸ்ரீ)
ஒளிர்விக்கும்/ திருவடியினளே/ தியாகராஜன்/ தொழுபவளே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - 1த வத3 - நூறு வதனன் - ‘நூறுதலை ராவணனைப் பற்றி’ ஆனந்த ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
2 - 1த மக2 கிரீட லஸன்-மணி க3ண நீராஜித சரணே - இந்திரன் கிரீடத்தில் திகழும் மணிகள் ஒளிர்விக்கும் திருவடியினளே - கிரீடமணிந்து, இந்திரன், தாயின் திருவடிகளில் பணிகையில், அந்த கிரீட மணிகளின் ஒளியினால் தாயின் திருவடிகள் ஒளிர்வதாக

Top


Updated on 14 Nov 2010

No comments: