Saturday, October 9, 2010

தியாகராஜ கிருதி - உன்ன தாவுன - ராகம் க4ண்டா - Unna Taavuna - Raga Ghanta - Nauka Charitram

பல்லவி
உன்ன தாவுனனுண்ட3னிய்யது3 வான
உருமுலைதே வெனக திய்யது3

சரணம்
சரணம் 1
1ஸுடி3 கா3லி2யோட3 ஜுட்டி வடி3
வடி3கா3 வானலைதே
கொட்டி (உ)


சரணம் 2
ஓட3லோ ரந்த்4ரமு கலிகெ3யீ
வனிதலகெவ்வரு 3ஸலிகெ3 (உ)


சரணம் 3
கனுலகெந்து3 கான ராது3 43தி
காளிந்தி3
மனகிக மீது3 (உ)


சரணம் 4
மதி போவு தா3ரி 5ஜனிரம்மா அபுடே3
6மத3மிந்த வத்33ண்டினம்மா (உ)


சரணம் 5
மனமொக்கசோ கூட3 ராது3
ப்ரளயமனனிதி3கா3 வேரு லேது3 (உ)


சரணம் 6
ராஜ வத3னலு ராரம்மா த்யாக3-
ராஜ ஸகு2னி ஜூட3ரம்மா (உ)


பொருள் - சுருக்கம்
ஆய்ச்சியர் ஒருவருக்கொருவர் -

  • இருக்குமிடத்தில் இருக்க விடாது மழை;
  • உறுமலோ பின் வாங்காது.

  • சுழற் காற்று படகைச் சுழற்றும்;
  • பெய்யோ பெய்யென மழையோ பொழியும்;

  • படகில் விரிசல் கண்டதே;
  • இந்த வனிதையருக்கெவர் காப்போ?

  • கண்களுக்கேதும் புலப்படாது;
  • போக்கு காளிந்தியே நமக்கு இனிமேல்;

  • மனம் சென்ற வழி சென்றனரம்மா;
  • அப்போதே, செருக்கு இத்தனை கூடாதென்றேனம்மா;

  • நாம் (படகில்) ஓரிடத்தில் சேரலாகாது;
  • ஊழியென்பது இதுவன்றோ, வேறில்லை;

    • மதி முகத்தினரே! வாருங்களம்மா!
    • தியாகராசனின் தோழனைப் பாருங்களம்மா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உன்ன/ தாவுன/-உண்ட3னு/-இய்யது3/ வான/
இருக்கும்/ இடத்தில்/ இருக்க/ விடாது/ மழை/

உருமுலு-ஐதே/ வெனக/ திய்யது3/
உறுமலோ/ பின்/ வாங்காது/


சரணம்
சரணம் 1
ஸுடி3/ கா3லி/-ஓட3/ ஜுட்டி/ வடி3/
சுழற்/ காற்று/ படகை/ சுழற்றும்/ பெய்யோ/

வடி3கா3/ வானலு-ஐதே/ கொட்டி/ (உ)
பெய்யென/ மழையோ/ பொழியும்/


சரணம் 2
ஓட3லோ/ ரந்த்4ரமு/ கலிகெ3/-ஈ/
படகில்/ விரிசல்/ கண்டதே/ இந்த/

வனிதலகு/-எவ்வரு/ ஸலிகெ3/ (உ)
வனிதையருக்கு/ எவர்/ காப்போ/


சரணம் 3
கனுலகு/-எந்து3/ கான ராது3/ க3தி/
கண்களுக்கு/ ஏதும்/ புலப்படாது/ போக்கு/

காளிந்தி3/ மனகு/-இக/ மீது3/ (உ)
காளிந்தியே/ நமக்கு/ இனி/ மேல்/


சரணம் 4
மதி/ போவு/ தா3ரி/ ஜனிரம்மா/ அபுடே3/
மனம்/ சென்ற/ வழி/ சென்றனரம்மா/ அப்போதே/

மத3மு/-இந்த/ வத்3து3/-அண்டினம்மா/ (உ)
செருக்கு/ இத்தனை/ கூடாது/ என்றேனம்மா/


சரணம் 5
மனமு/-ஒக்கசோ/ கூட3 ராது3/
நாம்/ (படகில்) ஓரிடத்தில்/ சேரலாகாது/

ப்ரளயமு/-அன/-இதி3கா3/ வேரு/ லேது3/ (உ)
ஊழி/ என்பது/ இதுவன்றோ/ வேறு/ இல்லை/


சரணம் 6
ராஜ/ வத3னலு/ ராரம்மா/ த்யாக3ராஜ/
மதி/ முகத்தினரே/ வாருங்களம்மா/ தியாகராசனின்/

ஸகு2னி/ ஜூட3ரம்மா/ (உ)
தோழனை/ பாருங்களம்மா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலாவது சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - ஸுடி3 கா3லி - ஸூடி கா3லி : புத்தகங்களில் இச்சொல்லுக்கு, 'சுழற் காற்று' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், 'ஸுடி3 கா3லி' என்பதுதான் அத்தகைய பொருள் பெறும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.

2 - ஓட3 ஜுட்டி வடி3 வடி3கா3 வானலைதே - ஓட3 ஜுட்டி வடி3கா3 வானலைதே - ஓட3 ஜுட்டி ஜுட்டி வடி3 வானலைதே.

3 - ஸலிகெ3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'உதவி', 'காப்பு' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுடைய தெலுங்கு சொல், 'ஸலிக3' ஆகும். இது ஹிந்தி மொழியிலிருந்து வந்த சொல் என்று, தெலுங்கு அகராதி கூறும்.

5 - ஜனிரம்மா - போயிரம்மா.

6 - மத3மிந்த வத்33ண்டினம்மா - மத3மிம்ப வலத3ண்டினம்மா.

Top

மேற்கோள்கள்
4 - காளிந்தி3 - பலராமன் தனது ஏரினால் உழுது, யமுனையிலிருந்து ஒரு வாய்க்கால் உண்டாக்கினான் என்றும், அதுவே, 'காளிந்தி' என்று பெயர் பெற்றதென்பர்.

Top

விளக்கம்
4 - 3தி காளிந்தி3 - போக்கு காளிந்தி - பொதுவாக, 'க3தி' என்ற சொல்லுக்கு, 'புகல்' என்று பொருளாகும். ஆனால், இப்பாடலில் விவரிக்கப்பட்டுள்ள நிலைமையை நோக்குகையில், இச்சொல்லுக்கு, 'போக்கு' அதாவது, 'இனி காளிந்தியிலேயே நாம் மூழ்கவேண்டியதுதான்' என்ற பொருள்படும்.

இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. இப்போது இந்தப் பாடல்.)

காளிந்தி - யமுனை நதி
தியாகராசனின் தோழன் - கண்ணன்

Top


Updated on 10 Oct 2010

No comments: