Sunday, March 7, 2010

தியாகராஜ கிருதி - த4ரனு நீ ஸரி - ராகம் வராளி - Dharanu Nee Sari - Raga Varali

பல்லவி
4ரனு நீ ஸரி தை3வமு கானரா ரகு4வர

சரணம்
சரணம் 1
ஸ்ரீ-தா3ஜ வந்த3ன ஸிந்து43ந்த4
ஸ்ரீ த31ரத2 நந்த3ன ஸ்1ரித 1ஹ்ரு2த்-ஸ்யந்த3 (த4)


சரணம் 2
பாப விமோசன பங்கஜ லோசன
ப்ராபகு3டகு யோசனா ப4க்த பாலன (த4)


சரணம் 3
2ஸால விதா3ரண ஸர்வ லோகாவன
பாலய சந்த்3ரானன பதித பாவன (த4)


சரணம் 4
இந்தி3ரா பா4க்3யமா இன குலோத்தமா
சந்த3மு கனுபிம்புமா 3ஸத்த மாத்ரமா (த4)


சரணம் 5
பாதா3ரவிந்த3மு பா4வனகந்த3மு
நீ த3ய த4ன ப்3ரு2ந்த3மு நித்யானந்த3மு (த4)


சரணம் 6
வாகீ31 ஸன்னுத த்யாக3ராஜார்சித
நாக31யன பாலித நத ஸு-சரித (த4)


பொருள் - சுருக்கம்
  • இரகுவரா!
  • சீரருளும், பிரமன் வணங்கும், கடலுக்கு பாலம் அமைத்தவனே! தசரதன் மைந்தா! சார்ந்தோரின் உள்ளக் களிப்பே!
  • பாவங்களைக் களைவோனே! பங்கயற் கண்ணா! தொண்டரைப் பேணுவோனே!
  • சால மரங்களைத் துளைத்தவனே! பல்லுலகினையும் காப்போனே! மதி வதனத்தோனே! வீழ்ந்தோரைப் புனிதமாக்குவோனே!
  • இந்திரையின் பேறே! பரிதி குல உத்தமனே! கேவலம் சத்தே!
  • நாமகள் கேள்வன் போற்றும், தியாகராசன் தொழும், அரவணையோனே! பணிந்தோரைப் பேணுவோனே! நற்சரிதத்தோனே!

    • புவியில் உனக்கீடான தெய்வத்தினைக் காணேனய்யா;
    • காப்போனாயிருக்க யோசனையா?
    • காப்பாய்;
    • உருவத்தினைக் காண்பிப்பாயய்யா;
    • (உனது) திருவடித் தாமரை, தியானிப்பதற்கினியது;
    • உனது தயை பெருஞ் செல்வமும், அழியா ஆனந்தமுமாகும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
4ரனு/ நீ/ ஸரி/ தை3வமு/ கானரா/ ரகு4வர/
புவியில்/ உனக்கு/ ஈடான/ தெய்வத்தினை/ காணேனய்யா/ இரகுவரா/


சரணம்
சரணம் 1
ஸ்ரீ/-த3/-அஜ/ வந்த3ன/ ஸிந்து4/ ப3ந்த4ன/
சீர்/ அருளும்/ பிரமன்/ வணங்கும்/ கடலுக்கு/ பாலம் அமைத்தவனே/

ஸ்ரீ த31ரத2/ நந்த3ன/ ஸ்1ரித/ ஹ்ரு2த்/-ஸ்யந்த3ன/ (த4)
ஸ்ரீ தசரதன்/ மைந்தா/ சார்ந்தோரின்/ உள்ள/ (ரதம்) களிப்பே/


சரணம் 2
பாப/ விமோசன/ பங்கஜ/ லோசன/
பாவங்களை/ களைவோனே/ பங்கயம்/ கண்ணா/

ப்ராபு/-அகு3டகு/ யோசனா/ ப4க்த/ பாலன/ (த4)
காப்போனாய்/ இருக்க/ யோசனையா/ தொண்டரை/ பேணுவோனே/


சரணம் 3
ஸால/ விதா3ரண/ ஸர்வ/ லோக/-அவன/
சால/ மரங்களை/ துளைத்தவனே/ பல/ உலகினையும்/ காப்போனே/

பாலய/ சந்த்3ர/-ஆனன/ பதித/ பாவன/ (த4)
காப்பாய்/ மதி/ வதனத்தோனே/ வீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/


சரணம் 4
இந்தி3ரா/ பா4க்3யமா/ இன/ குல/-உத்தமா/
இந்திரையின்/ பேறே/ பரிதி/ குல/ உத்தமனே/

சந்த3மு/ கனுபிம்புமா/ ஸத்த/ மாத்ரமா/ (த4)
உருவத்தினை/ காண்பிப்பாயய்யா/ சத்தே/ கேவலம்/


சரணம் 5
பாத3/-அரவிந்த3மு/ பா4வனகு/-அந்த3மு/
(உனது) திருவடி/ தாமரை/ தியானிப்பதற்கு/ இனியது/

நீ/ த3ய/ த4ன/ ப்3ரு2ந்த3மு/ நித்ய/-ஆனந்த3மு/ (த4)
உனது/ தயை/ செல்வம்/ பெரிய/ அழியா/ ஆனந்தம்/


சரணம் 6
வாக்3/-ஈஸ1/ ஸன்னுத/ த்யாக3ராஜ/-அர்சித/
நாமகள்/ கேள்வன்/ போற்றும்/ தியாகராசன்/ தொழும்/

நாக3/ ஸ1யன/ பாலித/ நத/ ஸு-சரித/ (த4)
அரவு/ அணையோனே/ பேணுவோனே/ பணிந்தோரை/ நற்சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸால விதா3ரண - சால மரம் - குங்கிலியம். சால மரங்களைத் துளைத்தவன் - வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 22-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஹ்ரு2த்-ஸ்யந்த3 - உள்ள ரதம். சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு சொல் 'மனோ-ரத2' என்பதற்கு 'உள்ளக் களிப்பு' என்று பொருளாகும். தியாகராஜர், 'மனோ-ரத2' என்ற சொல்லிலுள்ள 'ரத2' என்ற சொல்லுக்கு பதிலாக, 'ஸ்யந்த3ன' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகக் கருதுகின்றேன். இங்கு 'ரத2' என்ற சொல்லுக்கு 'களிப்பு' என்று பொருள். ('ஹ்ரு2த்' மற்றும் 'மனஸ்' என்ற இரண்டு சொற்களுக்கும் 'உள்ளம்' என்று பொருளாகும்.) 'தேர்' என்ற பொருளில் 'உள்ள ரதம்' என்பது சரியாகப்படவில்லை.

3 - ஸத்த - சத்து - 'சத்-சித்-ஆனந்தம்' எனும் பரம்பொருளின் இலக்கணத்தில், 'சத்'தென. இச்சொல்லினை (சத்), 'உண்மை' என மொழிபெயர்த்தல் சரியெனப்படவில்லை. ஏனெனில், 'உண்மை' எனும் சொல், பொது வழக்கில், 'உண்மை - பொய்', 'நல்லது - கெட்டது', 'இன்பம் - துன்பம்' ஆகிய இரட்டைகளின் (த்3வந்த்3வ - தமிழில் 'தொந்தம்') வரிசையினைச் சேர்ந்ததாகும். பரம்பொருளின் இலக்கணமான 'சத்' என்பது, அத்தகைய இரட்டைகளுக்கு மேற்பட்டது. அஃது, 'சித்' எனப்படும் 'அறிவு - அறியாமை' ஆகியவற்றிகும் அப்பாற்பட்ட நிலையாகும்.

Top

பாலம் - இதனை 'அணை'யென்றும் கொள்ளலாம்.
இந்திரை - இலக்குமி.
கேவலம் - தனித்தன்மை.
நாமகள் கேள்வன் - பிரமன்.
நற்சரிதத்தோனே - 'நன்னடத்தையுடையோனே' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 07 Mar 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சீரருளும், பிரமன் வணங்கும், கடலுக்கு பாலம் அமைத்தவனே! தசரதன் மைந்தா! சாரந்தோரின் உள்ளக் களிப்பே! - சாரந்தோரின் என்பது எழுத்துப்பிழை.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பிழையைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

வணக்கம்
கோவிந்தன்