Sunday, March 21, 2010

தியாகராஜ கிருதி - நாயெட3 வஞ்சன - ராகம் நபோ4மணி - Nayeda Vanchana - Raga Nabhomani

பல்லவி
நாயெட3 வஞ்சன ஸேயகுரா ஓ 1ராக4
நலுகு3ரிகை நம்ம லேது3ரா ஸ்ரீ ராம சந்த்3

அனுபல்லவி
மாயபு மானவுலனு ஜேரி மத்ஸருடை3 திரிகி3தினா
தா3யாது3ல போரைன கானி தா3ஸுட3னை வேடு3கொன்ன (நா)

சரணம்
வாதா3டு3சு பா3லுருயெச்சடி வாட3வு நிலுரா பு3த்3தி4
லேதா3யன தாளிமி க3லவாரை தலி-த3ண்ட்3ருலு ஜூசி
மோத3முதோ தனயுலனுசுனு முத்3து3 பெட்டி கௌகி3லி கூர்ச
லேதா3யடு நே காதா3 ப்3ரோவவே த்யாக3ராஜ ஸன்னுத (நா)


பொருள் - சுருக்கம்
ஓ இராகவா! இராம சந்திரா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • என்னிடம் வஞ்சனை செய்யாதீருமய்யா; நாலுபேருக்காக நம்பவில்லையய்யா;

  • மாயை வயப்பட்ட மனிதருடன் கூடி, பொறாமையுடையவனாய் திரிந்தேனா?
  • தாயாதியரின் போரானாலும், தொண்டனாகி, வேண்டிக் கொண்ட என்னிடம் வஞ்சனை செய்யாதீருமய்யா;

    • வாதாடும் சிறுவர், "எங்கிருந்து வந்தவன் நீ? நில்லடா; அறிவு இல்லையா?" யெனினும்,
    • பெற்றோர், சகிப்புடையோராகி, அவரை நோக்கி, கனிவுடன், தமது மக்களென, முத்தமிட்டு, அணைக்க வில்லையா?
    • அங்ஙனம் நானல்லவோ? காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாயெட3/ வஞ்சன/ ஸேயகுரா/ ஓ ராக4வ/
என்னிடம்/ வஞ்சனை/ செய்யாதீருமய்யா/ ஓ இராகவா!/

நலுகு3ரிகை/ நம்ம லேது3ரா/ ஸ்ரீ ராம/ சந்த்3ர/
நாலுபேருக்காக/ நம்பவில்லையய்யா/ ஸ்ரீ ராம/ சந்திரா/


அனுபல்லவி
மாயபு/ மானவுலனு/ ஜேரி/ மத்ஸருடை3/ திரிகி3தினா/
மாயை வயப்பட்ட/ மனிதருடன்/ கூடி/, பொறாமையுடையவனாய்/ திரிந்தேனா/

தா3யாது3ல/ போரு/ ஐன கானி/ தா3ஸுட3னை/ வேடு3கொன்ன/ (நா)
தாயாதியரின்/ போர்/ ஆனாலும்/ தொண்டனாகி/ வேண்டிக் கொண்ட/ என்னிடம்...


சரணம்
வாதா3டு3சு/ பா3லுரு/-எச்சடி/ வாட3வு/ நிலுரா/ பு3த்3தி4/
வாதாடும்/ சிறுவர்/ "எங்கிருந்து/ வந்தவன் (நீ)/ நில்லடா/ அறிவு/

லேதா3/-அன/ தாளிமி/ க3லவாரை/ தலி-த3ண்ட்3ருலு/ ஜூசி/
இல்லையா/" யெனினும்/ சகிப்பு/ உடையோராகி/ பெற்றோர்/ (அவரை) நோக்கி/

மோத3முதோ/ தனயுலு/-அனுசுனு/ முத்3து3/ பெட்டி/ கௌகி3லி கூர்ச/ லேதா3/
கனிவுடன்/ (தமது) மக்கள்/ என/ முத்தம்/ இட்டு/ அணைக்க/ வில்லையா/

அடு/ நே/ காதா3/ ப்3ரோவவே/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (நா)
அங்ஙனம்/ நான்/ அல்லவோ/ காப்பாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராக4 - ராம.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
அனுபல்லவியில், 'தாயாதியரின் போர்' என்று கூறி, சரணத்தில், 'வாதாடும் சிறுவர்' என்று கூறுவது, 'எங்களுக்குள் இந்த தாயாதி சண்டையினை, பெற்றோர் போன்று, நீ பொருட்படுத்தாது, என்னைக் காப்பாய்', என்றாகும் - 'அடு நே காதா?' (அங்ஙனம் நானல்லவா) என்பதன் உட்பொருள் அதுதான்.

தாயாதி - பங்காளி
Top


Updated on 21 Mar 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு
அ.ப- மத்ஸருடை3  என்பதற்கு, ‘பொறாமையுடைத்து’ என்று பொருள் கொடுத்துள்ளீர். பொறாமையுடையவனாய்/ பொறாமை கொண்டவனாய் என்றால் சுலபமாக விளங்கும்.
நன்றி
கோவிந்தசாமி 

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

நீங்கள் பரிந்துரைத்தபடியே 'பொறாமையுடைவனாய்' என்று திருத்தியுள்ளேன்.

நன்றி,
வணக்கம்
கோவிந்தன்