Thursday, February 25, 2010

தியாகராஜ கிருதி - ஈ மேனு கலிகி3ன - ராகம் வராளி - Imenu Kaligina - Raga Varali

பல்லவி
ஈ மேனு கலிகி3னந்து3கு ஸீதா ராம
நாமமே பல்க வலெனு

அனுபல்லவி
1காமாதி3 து3ர்கு3ண ஸ்தோம பூரிதமைன
பாமரத்வமே கானி நேமமு லேனட்டி (ஈ)

சரணம்
சரணம் 1
ஸம்ஸாரமுனு ப்3ரோவ தா3ரினி பர-
ஹிம்ஸ ஜெந்து3 2கிராதுடு3
3ஹம்ஸ ரூபுல க3தினடு33 ராம நாம
ப்ரஸ1ம்ஸ ஜேஸி உபதே3ஸி1ஞ்ச 44ன்யுடு3 காதா3 (ஈ)


சரணம் 2
தாபஸி ஸா1பமிட3கா3 5ஜலோரக3
ரூபமு கொனியுண்ட33
தாபமு ஸைரிஞ்சக தல்லடி3ல்லக31
சாப த4ருனி நாம ஸ்1ரவணமு ப்3ரோவ லேதா3 (ஈ)


சரணம் 3
கரி ராஜு தெலிய லேக ப3லுடை3
மகரி சேத கா3ஸி ஜெந்த3கா3
6அர லேக 7நிஜமுனனாதி3 மூலமனக3
வரது3டு3 வேக3மே வச்சி ப்3ரோவக3 லேதா3 (ஈ)


சரணம் 4
8ஆக3ம வேத3முலனு தா3னவுடு3
கொம்போவகா3 சதுரானனுடு3
த்யாக3ராஜ நுத தாரக நாமயனி
பா3கு33 நுதிம்ப ப4யமு தீர்பக3 லேதா3 (ஈ)


பொருள் - சுருக்கம்
  • இவ்வுடல் உண்டானதற்கு, சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
  • காமம் முதலான தீய குணங்கள் நிரம்பிய, இழிவே யல்லாது, கட்டுப்பாடற்றதாகிய, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்

    • வாழ்க்கையை நடத்த, வழிப்போக்கர்களுக்கு (வழிப்பறி செய்து) தீங்கிழைக்கும் வேடன், முற்றுமுணர்ந்தோர் கதியினை வேண்ட, இராம நாமத்தினை பரிந்துரைத்து, (நாரதர்) உபதேசிக்க, பேறுடைத்தோனல்லவா?

    • தவசி சாபமிட, நீர்வாழ் பிராணியின் உருவம் கொண்டிருக்க, துயர் தாளாது தத்தளிக்க, வில்லம்பு ஏந்துவோனின் நாமத்தின் கேள்வி உய்விக்கவில்லையா?

    • கரியரசன், அறியாது, வலியோனாகிய முதலையினிடம் துயருற, கூச்சலெழுப்பி, 'உண்மையான ஆதி மூலமே' யென, வரதன் விரைந்து வந்து காக்கவில்லையா?

    • ஆகமங்கள், மறைகளை, அசுரன் கொண்டுபோக, நான்முகன் 'தியாகராசன் போற்றும், தாரக நாமத்தோனே' என்று நன்கு போற்ற, (அவனது) அச்சத்தினைப் போக்கவில்லையா?


  • எனவே, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஈ/ மேனு/ கலிகி3ன-அந்து3கு/ ஸீதா/ ராம/
இந்த/ உடல்/ உண்டானதற்கு/ சீதா/ ராமனின்/

நாமமே/ பல்க/ வலெனு/
நாமத்தினையே/ உரைக்க/ வேண்டும்/


அனுபல்லவி
காம/-ஆதி3/ து3ர்/-கு3ண ஸ்தோம/ பூரிதமைன/
காமம்/ முதலான/ தீய/ குணங்கள்/ நிரம்பிய/

பாமரத்வமே/ கானி/ நேமமு/ லேனி/-அட்டி/ (ஈ)
இழிவே/ யல்லாது/ கட்டுப்பாடு/ அற்றது/ ஆகிய/ இவ்வுடல்...


சரணம்
சரணம் 1
ஸம்ஸாரமுனு/ ப்3ரோவ/ தா3ரினி/ பர/-
வாழ்க்கையை/ நடத்த/ வழியில்/ பிறருக்கு (வழிப்போக்கர்களுக்கு)/

ஹிம்ஸ/ ஜெந்து3/ கிராதுடு3/
(வழிப்பறி செய்து) தீங்கு/ இழைக்கும்/ வேடன்/

ஹம்ஸ ரூபுல/ க3தினி/-அடு33/ ராம/ நாம/
முற்றுமுணர்ந்தோர்/ கதியினை/ வேண்ட/ இராம/ நாமத்தினை/

ப்ரஸ1ம்ஸ ஜேஸி/ உபதே3ஸி1ஞ்ச/ த4ன்யுடு3/ காதா3/ (ஈ)
பரிந்துரைத்து/ (நாரதர்) உபதேசிக்க/ பேறுடைத்தோன்/ அல்லவா/


சரணம் 2
தாபஸி/ ஸா1பமு/-இட3கா3/ ஜல/-உரக3/
தவசி/ சாபம்/ இட/ நீர்வாழ்/ ஊர்வன (பிராணியின்)/

ரூபமு/ கொனி/-உண்ட33/
உருவம்/ கொண்டு/ இருக்க/

தாபமு/ ஸைரிஞ்சக/ தல்லடி3ல்லக3/ ஸ1ர/
துயர்/ தாளாது/ தத்தளிக்க/ அம்பு/

சாப/ த4ருனி/ நாம/ ஸ்1ரவணமு/ ப்3ரோவ லேதா3/ (ஈ)
வில்/ ஏந்துவோனின்/ நாமத்தின்/ கேள்வி/ உய்விக்கவில்லையா/


சரணம் 3
கரி/ ராஜு/ தெலிய லேக/ ப3லுடை3ன/
கரி/ அரசன்/ அறியாது/ வலியோனாகிய/

மகரி சேத/ கா3ஸி/ ஜெந்த3கா3/
முதலையினிடம்/ துயர்/ உற/

அர/ லேக/ நிஜமுன/-ஆதி3/ மூலமு/-அனக3/
கூச்சல்/ எழுப்பி/ 'உண்மையான/ ஆதி/ மூலமே/' யென/

வரது3டு3/ வேக3மே/ வச்சி/ ப்3ரோவக3/ லேதா3/ (ஈ)
வரதன்/ விரைந்து/ வந்து/ காக்கவில்லையா/


சரணம் 4
ஆக3ம/ வேத3முலனு/ தா3னவுடு3/
ஆகமங்கள்/ மறைகளை/ அசுரன்/

கொம்போவகா3/ சதுர/-ஆனனுடு3/
கொண்டுபோக/ நான்/ முகன்/

த்யாக3ராஜ/ நுத/ தாரக/ நாம/-அனி/
'தியாகராசன்/ போற்றும்/ தாரக/ நாமத்தோனே'/ என்று/

பா3கு33/ நுதிம்ப/ ப4யமு/ தீர்பக3 லேதா3/ (ஈ)
நன்கு/ போற்ற/ (அவனது) அச்சத்தினை/ போக்கவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - நிஜமுனனாதி3 மூலமனக3 - நிஜமுக3னாதி3 மூலமனக3.

Top

மேற்கோள்கள்
1 - காமாதி3 - காமம் முதலான - இச்சை, சினம், பேராசை, மயக்கம், செருக்கு, காழ்ப்பு.

2 - கிராதுடு3 - வேடன் - பிற்காலத்தில் வால்மீகி முனிவர். அம்முனிவர், முன்னம் ஓர் வேடனாக, வழிப்பறி செய்து, பிழைப்பு நடத்திக்கொண்டிருந்ததாகவும், அவருக்கு நாரதர் ராம நாமத்தினை உபதேசித்து, அதனால் அவர் முனிவரானதாகவும் கூறப்படும். ஆனால், சமஸ்கிருத அகராதியின்படி, அவர் ஓர் அந்தணரென்றும், அவருக்கு, இரகு குல மன்னர்களைத் தெரியும் என்றும் கூறப்படுகின்றது. அந்த அகராதியனில் பரம்பரையான வேடன் கதையைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது.

Top

3 - ஹம்ஸ - 'அஹம்ஸ' எனும் மகாவாக்கியத்தின் திரிபு. 'அஹம்-ஸ' என்பதற்கு 'நான்- அவனே' எனப் பொருளாகும். 'அவன்' என்பது பரம்பொருளினைக்குறிக்கும். இவ்விதம், தன்னை உணர்ந்தோரை 'ஹம்ஸ ரூபுலு' என்று தியாகராஜர் குறி்ப்பிடுகின்றார். சதாசிவ ப்ரம்மேந்திரர் எனும் அவதூதத் துறவியின் 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற பாடலில் 'ஹம்ஸஸ்-ஸோஹம்-ஸோஹம்-ஹம்ஸமிதி' என்று கூறுகின்றார்.ஹம்ஸ - அஜபா மந்திரம்

Top

5 - ஜலோரக3 - ஜல உரக3 என்பதற்கு 'நீர்வாழும் ஊர்வன' என்று பொருளாகும். சம்ஸ்கிருத அகராதியின்படி 'ஜலோரகீ3' என்பது 'நீர்ப்பாம்பு' மற்றும் (குருதி உண்ணும்) அட்டையினையும் குறிக்கும்.

வால்மீகி ராமாயணத்தில் வரும், அரவுகளின் தாயாகக் கருதப்படும் 'ஸுரஸை' எனும் நீர் அரக்கி, தேவர்களால், அனுமனின் வல்லமையினை சோதிக்க ஏவப்பட்டவள். (வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், 1-வது அத்தியாயம், செய்யுட்கள் 144-147 நோக்கவும்.) எனவே 'ஜலோரக3' என்ற சொல், அவ்வரக்கியினைக் குறிக்காது. வால்மீகி ராமாயணத்தில், வேறு ஏதும், நீர்வாழ் பாம்பினைக் குறித்து கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு புத்தகத்தில், இது, 'அட்டையாக சபிக்கப்பட்ட வான்மடந்தை'யென்று கூறப்பட்டுள்ளது. மற்றோர் புத்தகத்தில், 'முதலையாக சபிக்கப்பட்ட வான்மடந்தை'யென்று கூறப்பட்டுள்ளது.

Top

வான்மடந்தை, முதலையாக சபிக்கப்பட்ட கதை, 'அத்4யாத்ம ராமாயண'த்தினில் (யுத்த காண்டம், 7-வது அத்தியாயம்) கூறப்படுகின்றது. இதுவே, துளசிதாஸர் இயற்றிய, 'ராம்-சரித்ர மானஸ்' என்ற 'ராம காதை'யிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இக்கதையின் சுருக்கத்தினை 'ராம காதை' மற்றும் 'இலங்கைக் காண்டம்' ஆகியவற்றினில் நோக்கவும்.

Top

7 - ஆதி3 மூலமனக3 - 'ஆதி மூலமே'யென - பாகவத புராணத்தில் (8-வது புத்தகம், 3-வது அத்தியாயம், 2-வது செய்யுள்), கஜேந்திரன், 'புருஷாய ஆதி3 பீ3ஜாய' என்று கூக்குரலிட்டு, இறைவனை அழைத்ததாகக் கூறப்படும். இந்த 'ஆதி3 பீ3ஜ' என்ற சொற்கள், 'ஆதி மூலம்' என்று பரம்பை வழக்கில் உள்ளது என்று கருதுகின்றேன்.

Top

8 - ஆக3ம வேத3முலனு - ஆகம, மறைகளை அசுரன் கொண்டுபோக. பாகவத புராணத்தினில் (8-வது புத்தகம், 24-வது அத்தியாயம்), 'ஹயக்3ரீவ' (குதிரைத்தலை) அசுரன், மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், மீனாக அவதரித்து, அவ்வசுரனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிலேயே, மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகாசுரன்' என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்புராணத்திலேயே, (5-வது புத்தகம், 18-வது அத்தியாயம்), ஓர் அசுரன் மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், ஹயக்3ரீவராக அவதரித்து அவனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.

ஹயக்3ரீவரின் ஸ்தோத்திரத்தினில், மது4, கைடப4 என்ற மறைகளைக் கவர்ந்த அசுரர்களைக் கொன்று, இறைவனாகிய, ஹயக்3ரீவர் மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.

எனவே, மறைகளைக் கவர்ந்தது, ஹயக்3ரீவரா, சோமகாசுரனா அல்லது மது4, கைடப4ரா என விளங்கவில்லை. அதுபோன்றே, அசுரனைக் கொன்று, மறைகளை மீட்டது, இறைவனின், மீன் அவதாரத்தினிலா, அல்லது ஹயக்3ரீவ அவதாரத்தினிலா, என்பதும் விளங்கவில்லை. இது குறித்து, முரண்பாடுகள் இருப்பதனால், தாமே இதனைக் குறித்து முடிவு செய்யும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

Top

விளக்கம்
4 - 4ன்யுடு3 காதா3 - பிற சரணங்கள், 'ப்3ரோவ லேதா3', 'ப்3ரோவக3 லேதா3' மற்றும் 'தீர்பக3 லேதா3' என்று முடிவுறும். அது போன்றே, இச்சரணத்திலும் 'த4ன்யுடு காலேதா3' என்றிருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன்.

6 - அர லேக - கூக்குரல் எழுப்பி - 'கூக்குரலிட' என்பதற்கு, 'அருசு' மற்றும் 'அருபு' என்பவை தெலுங்கு சொற்களாகும். ஆனால், இச்சொற்கள் (அருசு, அருபு), 'அர' என்று திரியுமா என்று விளங்கவில்லை.

Top

முற்றுமுணர்ந்தோர் - 'ஹம்ஸ' எனப்படும் 'தான்-அவனே'யாகியோர்
வில்லம்பு ஏந்துவோன் - இராமன்
வரதன் - அரி
தாரக நாமத்தோன் - இராம நாமம் பிறவிக் கடலைக் கடத்துவிப்பது

Top


Updated on 25 Feb 2010

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
”எனவே, மறைகளைக் கவர்ந்தது, ஹயக்3ரீவரா, சோமகாசுரனா அல்லது மது4, கைடப4ரா என விளங்கவில்லை” என்று கூறியுள்ளீர். ஹயக்3ரீவரா என்பது சரியா?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பாகவத புராணம், 8-வது புத்தகம், 24-வது அத்தியாயம், 57-வது செய்யுள் நோக்கவும்.

வணக்கம்
கோவிந்தன்.