Wednesday, February 17, 2010

தியாகராஜ கிருதி - த3ய ஜூசுடகிதி3 - ராகம் கா3ன வாரிதி4 - Daya Jucutakidi - Raga Gana Varidhi

பல்லவி
3ய ஜூசுடகிதி3 வேளரா 1தா31ரதீ2

அனுபல்லவி
24 வாரண ம்ரு2கே31
3ஜலஜோத்34வார்தி ஹர மஞ்ஜுளாகார நனு (த3ய)

சரணம்
முனு நீவானதிச்சின
பனுலாஸ கொனி நே
மனஸாரக3 நிதா3னமுக3
ஸல்பினானு வர த்யாக3ராஜாப்த நனு (த3ய)


பொருள் - சுருக்கம்
  • தசரதன் மைந்தா!
  • பிறவிக்கடலெனும் யானைக்கு சிங்கமே! கமலத்துதித்தோன் துயர் களைவோனே! இனிய உருவத்தோனே!
  • பேறுடைத் தியாகராசனுக்கு இனியோனே!

    • முன்பு நீ ஆணையிட்ட பணிகளினை, நான் விருப்பத்துடன், மனதார, நிதானமாக நிறைவேற்றினேன்;
    • எனக்கு தயை செய்ய இது தருணமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ய/ ஜூசுடகு/-இதி3/ வேளரா/ தா31ரதீ2/
தயை/ செய்ய/ இது/ தருணமய்யா/ தசரதன் மைந்தா/


அனுபல்லவி
4வ/ வாரண/ ம்ரு23/-ஈஸ1/
பிறவிக்கடலெனும்/ யானைக்கு/ விலங்கு/ அரசே (சிங்கமே)!

ஜலஜ/-உத்34வ/-ஆர்தி/ ஹர/ மஞ்ஜுள/-ஆகார/ நனு/ (த3ய)
கமலத்து/ உதித்தோன்/ துயர்/ களைவோனே/ இனிய/ உருவத்தோனே/ எனக்கு/ தயை...


சரணம்
முனு/ நீவு/-ஆனதி/-இச்சின/
முன்பு/ நீ/ ஆணை/ இட்ட/

பனுலு/-ஆஸ கொனி/ நே/
பணிகளினை/ விருப்பத்துடன்/ நான்/

மனஸாரக3/ நிதா3னமுக3/
மனதார/ நிதானமாக/

ஸல்பினானு/ வர/ த்யாக3ராஜ/-ஆப்த/ நனு/ (த3ய)
நிறைவேற்றினேன்/ பேறுடை/ தியாகராசனுக்கு/ இனியோனே/ எனக்கு/ தயை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா31ரதீ2 - தா31ரதே2.

2 - 4 - ப4ய : எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு, 'பிறவிக்கடல்' எனும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ப4வ' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
3 - ஜலஜோத்34வார்தி ஹர - கமலத்துதித்தோன் துயர் களைவோனே - ஊழிக்குப் பின்னர், மறுபடியும் படைப்பு தொடங்குமுன், விஷ்ணுவின் காது மலத்தினின்றுதித்த, மது, கைடபன் என்ற இரு அரக்கர்கள், பிரமனைக் கொல்ல வந்தனர். அப்போது, பிரமன், விஷ்ணுவின் துயிலாகிய, யோகமாயையினைத் துதித்து, விஷ்ணுவை எழுப்பும்படி வேண்டினான். அதன்படி, விஷ்ணு துயிலெழுந்து, அவ்வரக்கர்களை வதைத்தார். தேவி பாகவதம், முதலாவது புத்தகம், 9-வது அத்தியாயம் நோக்கவும்.

Top

விளக்கம்
கமலத்துதித்தோன் - பிரமன்

Top


Updated on 17 Feb 2010

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
விஷ்ணுவின் காது மலத்தினின்றுதித்த- இது காது மலமா (அழுக்கு) மடலா என்று இருக்கவேண்டுமா?
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
குரும்பை எனப்படும் காது மலத்தினின்று அவ்விரு அரக்கர்களும் தோன்றியதாக தேவி பாகவதம் கூறும். நான் கொடுத்துள்ள இணைத்தளத்தில் 6-வது அத்தியாயத்தினை நோக்கவும். (அதனில் 'wax' என்பதற்கு பதிலாக 'was' என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.)

வணக்கம்
வே கோவிந்தன்