Sunday, February 14, 2010

தியாகராஜ கிருதி - இதி3 ஸமயமுரா - ராகம் சா2யா நாட - Idi Samayamura - Raga Chaaya Nata

பல்லவி
இதி3 ஸமயமுரா இன குல திலக

அனுபல்லவி
1வித3ளித கலி து3ர்மத33ஜ க3மன
2மொத3ட பல்கினதி3 நிஜமுக3 ஜேய (இதி3)

சரணம்
3கலி புருஷுடு3 நாடகமுனு கட்ட
தலசினாடு3 ஸ்ரீ த்யாக3ராஜ நுத
42ல மதமுலனே யாக3முலகு
மேகலுக3 நருல 5ஜேஸி நீ3ய ஜூட3 (இதி3)


பொருள் - சுருக்கம்
  • பரிதி குலத்திலகமே! கலியின் வன்செருக்கினை யடக்கியவனே! களிறு நடையோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

    • முன்பு பகன்றதனை மெய்ப்பிக்க இது தருணமய்யா;
      • இழிந்த மதங்களெனும் வேள்விகளுக்கு, (பலி) ஆடுகளாக மனிதர்களைச் செய்து, கலி புருடன் நாடகமிசைக்க எண்ணியுள்ளான்;

    • நீ கருணை காட்ட இது தருணமய்யா.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    இதி3/ ஸமயமுரா/ இன/ குல/ திலக/
    இது/ தருணமய்யா/ பரிதி/ குல/ திலகமே/


    அனுபல்லவி
    வித3ளித/ கலி/ து3ர்-மத3/ க3ஜ/ க3மன/
    அடக்கியவனே/ கலியின்/ வன்செருக்கினை/ களிறு/ நடையோனே/

    மொத3ட/ பல்கினதி3/ நிஜமுக3 ஜேய/ (இதி3)
    முன்பு/ பகன்றதனை/ மெய்ப்பிக்க/ இது...


    சரணம்
    கலி/ புருஷுடு3/ நாடகமுனு/ கட்ட/
    கலி/ புருடன்/ நாடகம்/ இசைக்க/

    தலசினாடு3/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/
    எண்ணியுள்ளான்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

    2ல/ மதமுலு/-அனே/ யாக3முலகு/
    இழிந்த/ மதங்கள்/ எனும்/ வேள்விகளுக்கு/

    மேகலுக3/ நருல/ ஜேஸி/ நீ/ த3ய/ ஜூட3/ (இதி3)
    (பலி) ஆடுகளாக/ மனிதர்களை/ செய்து/ நீ/ கருணை/ காட்ட/ இது...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    5 - ஜேஸி நீ - ஜேஸுனே : இவ்விடத்தில் 'ஜேஸி நீ' என்பதே பொருந்தும்.

    Top

    மேற்கோள்கள்
    1 - வித3ளித கலி து3ர்மத3 - பாகவத புராணத்தில் (முதல் புத்தகம் – 17-வது அத்தியாயம்) (செய்யுட்கள் 38 - 41) பரீட்சித்து மன்னனுக்கும் கலி புருடனுக்கும் நடந்த உரையாடலினை நோக்கவும் –

    "இங்ஙனம் வேண்டப்பட்ட பரீட்சித்து மன்னன், சூதாட்டம் (பொய்), மது (போதை), மாது (காமம்), கொலைக்களம் (கொடுமை), பொன் (பகைமை) எனும் ஐந்து வகையான அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடக்குமிடங்களைக் கலிக்கு அளிக்க, அவ்விடங்களை அவன் கவர்ந்தான்.

    எனவே, பேறு விழையும் அரசர்கள், தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விடங்களை அணுகார்; இச்செயல்களில் ஈடுபடார்."

    Top

    2 - மொத3ட பல்கினதி3 - முன்பு பகன்றது - கீதையில் கண்ணன் கொடுத்த வாக்குறுதி.(4-வது அத்தியாயம், 7,8-வது செய்யுட்கள் ) -

    "எவ்வப்போது அறத்திற்கு ஊறு விளைகின்றதோ, அவ்வப்போது தீயோரை அழிப்பதற்கும், நல்லோரைக் காப்பதற்கும், அறத்தினை நிலை நாட்டவும் நான் ஒவ்வோர் யுகத்திலும் அவதரிப்பேன்."
    (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

    Top

    விளக்கம்
    3 - கலி புருஷுடு3 - தற்போது நடக்கும் கலியுகத்தினை ஒரு மனிதனாக உருவகப்படுத்தி.

    4 - 2ல மதமுல - இழிந்த மதங்கள் - கலி புருடன் உறையும் பொய்மை, குடிபோதை, காமம், கொடுமை மற்றும் பகைமை ஆகிய தீய செயல்களைக் குறிக்கும்

    Top


    Updated on 14 Feb 2010
  • No comments: