Sunday, January 24, 2010

தியாகராஜ கிருதி - தொலி ஜன்மமுன - ராகம் பி3லஹரி - Toli Janmamuna - Raga Bilahari

பல்லவி
தொலி ஜன்மமுன ஜேயு து3டு3கு தெலிஸெனு ராம

அனுபல்லவி
12லமேமோ 2அர சேதி புண்டிகத்33மு வலெ நா (தொ)

சரணம்
ராகி3 பயிருல செந்த ரம்யமௌ
வரி மொலக ராஜில்ல நேர்சுனடரா
நாக31யன த்யாக3ராஜு பாபமுதோனு
நாம புண்யமு 3செலகு3னா (தொ)


பொருள் - சுருக்கம்
இராமா! அரவணையோனே!

  • முற்பிறவியில் செய்த தீமைகள் தெரிந்தன;
  • (அதன்) பயனோ என்னவோ; 'கைப்புண்ணுக்கு கண்ணாடி' போன்று, எனது முற்பிறவியில் செய்த தீமைகள் தெரிந்தன;

    • வரகுப் பயிருக்கருகில், அழகிய நெல் முளை செழிக்க நேர்தல் போன்றய்யா, தியாகராசனின் பாவங்களுடன் நாம (செபத்தின்) புண்ணியம் திகழுமா? (வேண்டுகோள்)
    • (அல்லது)
    • வரகுப் பயிருக்கருகில், அழகிய நெல் முளை செழிக்க நேர்தல் போன்றய்யா, (செழிக்காதென); தியாகராசனின் பாவங்களுடன் நாம (செபத்தின்) புண்ணியம் திகழுமோ? (திகழாதென)

  • முற்பிறவியில் செய்த தீமைகள் தெரிந்தன.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொலி/ ஜன்மமுன/ ஜேயு/ து3டு3கு/ தெலிஸெனு/ ராம/
முற்/ பிறவியில்/ செய்த/ தீமைகள்/ தெரிந்தன/ இராமா/


அனுபல்லவி
2லமு/-ஏமோ/ அர/ சேதி/ புண்டிகி/-அத்33மு/ வலெ/ நா/ (தொ)
(அதன்) பயனோ/ என்னவோ/ உள்ளங்/ கை/ புண்ணுக்கு/ கண்ணாடி/ போன்று/ எனது/ முற்பிறவியில்...


சரணம்
ராகி3/ பயிருல/ செந்த/ ரம்யமௌ/
வரகு/ பயிருக்கு/ அருகில்/ அழகிய/

வரி/ மொலக/ ராஜில்ல/ நேர்சுனு/-அடரா/
நெல்/ முளை/ செழிக்க/ நேர்தல்/ போன்றய்யா/
நெல்/ முளை/ செழிக்க/ நேர்தல்/ போன்றய்யா/ (செழிக்காதென)

நாக3/ ஸ1யன/ த்யாக3ராஜு/ பாபமுதோனு/
அரவு/ அணையோனே/ தியாகராசனின்/ பாவங்களுடன்/

நாம/ புண்யமு/ செலகு3னா/ (தொ)
நாம (செபத்தின்)/ புண்ணியம்/ திகழுமா/ (வேண்டுகோள்)
நாம (செபத்தின்)/ புண்ணியம்/ திகழுமோ/ (திகழாதென)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 2லமேமோ - (நீ மஹிம) ப2லமேமோ : 'நீ மஹிம' என்ற சொற்கள் சில புத்தகங்களில், bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனுபல்லவியின் பொருளை குழப்புவதுடன், எதுகை-மோனை விதிகளுக்கும் புறம்பாக இருப்பதாகக் கருதுகின்றேன்.

3 - செலகு3னா - செலகு3னா நேனு.

Top

மேற்கோள்கள்
2 - அர சேதி புண்டிகத்33மு - கைப்புண்ணுக்கு கண்ணாடி - கண்ணாடி தேவையில்லையென. அதாவது வெளிப்படையாகத் தெரிவதென. இதனை 'உள்ளங்கை நெல்லிக்கனி போன்று' என்றும் உவமை கூறுவதுண்டு. பிற்கூறிய உவமை, சம்ஸ்கிருதத்தில் 'ஹஸ்தாமலக' என்று கூறப்படும்.

‘ஹ்ஸ்மாலகீயம்’ எனும், ஆதி சங்கரர் உரை எழுதிய, வேதாந்த நூல் நோக்கவும்.

Top

விளக்கம்
சரணத்திற்கு, இரண்டு விதமாகப் பொருள் கொள்ளவியலும். கேழ்வரகு, புஞ்சைப் பயிராகும். ஆனால் நெல், நஞ்சைப் பயிராகும். எனவே, 'நஞ்சைப் பயிராகிய நெல், புஞ்சைப் பயிராகிய, கேழ்வரகிடை எங்ஙனம் செழிக்கும்' என்று தியாகராஜர் உவமை கூறி, அது போன்று, 'தன்னுடை பாவங்களிடை, தான் செய்ததோர் புண்ணியமானது (இறைவன் நாமங்களை செபித்தல்) இறைவன் கண்களுக்கு எப்படிப் படும்' என, அவர் தன்னையே இழிந்துகொள்வதாகக் கொள்ளலாம்.

அல்லது, 'புஞ்சைப் பயிரிடையே, ஓர் நெல் முளை செழிக்க நேரலாம்' என்றும், அதுபோன்று, தனது பாவங்களிடை, தான் செய்த புண்ணியத்தினை இறைவன் கண்டுகொள்ளுமாறு இறைவனை இறைஞ்சுவதாகவும் (செலகு3னா?), பொருள் கொள்ளலாம்.

Top

புத்தகங்களில், உவமைக்கு, முதலில் கூறிய (நெல் முளை செழிக்கவியலாது) என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சரணத்தின் இரண்டாவது பகுதியில், தியாகராஜர், தான், பாவங்களுடன், புண்ணியமும் செய்திருப்பதாகக் கூறுகின்றார். எனவே, எப்படி புண்ணியம் 'உள்ளது' எனக் கூறப்படுகின்றதோ, அதுபோன்று, உவமையிலும், நெல் முளை 'உள்ளது' என்றுதான் பொருள் கொள்ளவியலும். எனவே, நெல் முளை 'இல்லை' என்று பொருள் கொள்ள இயலாது.

எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, பிற்கூறிய பொருளே சரியானது என்று நம்புகின்றேன். ஆயினும் இரண்டு விதமான பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

வரகு - கேழ்வரகு

Top


Updated on 24 Jan 2010

No comments: