Tuesday, December 8, 2009

தியாகராஜ கிருதி - விட3 ஜாலது3ரா - ராகம் ஜன ரஞ்ஜனி - Vida Jaaladura - Raga Jana Ranjani

பல்லவி
விட3 ஜாலது3ரா நா மனஸு வினரா

அனுபல்லவி
அடி3யாஸலசே தகி3லி
1நேனார்திப3டி3 பத3ம்பு3லனு (வி)

சரணம்
தனுவே பனுலகு சனின மரி
கன ரானிதி3 கனுகொ3னின
நினுகா3 பா4விஞ்சி ஸந்தஸில்லிதி
ஸ்ரீ 2த்யாக3ராஜ நுத (வி)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • கேளய்யா.
  • விடமாட்டாதய்யா, எனது மனது;
  • வீணாசைகளின் கையில் சிக்கி, நான் துயருற்றாலும், (உனது) திருவடிகளினை விடமாட்டாதய்யா, எனது மனது;
    • உடல் எப்பணிகளுக்குச் சென்றாலும், மேலும்
    • காணத்தகாதவற்றினைக் கண்டுகொண்டிடினும்,
    • நீயாகவே யுணர்ந்து மகிழ்வுற்றேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விட3/ ஜாலது3ரா/ நா/ மனஸு/ வினரா/
விட/ மாட்டாதய்யா/ எனது/ மனது/ கேளய்யா/


அனுபல்லவி
அடி3/-ஆஸலசே/ தகி3லி/
வீண்/ ஆசைகளின் கையில்/ சிக்கி/

நேனு/-ஆர்திப3டி3ன/ பத3ம்பு3லனு/ (வி)
நான்/ துயருற்றாலும்/ (உனது) திருவடிகளினை/ விடமாட்டாதய்யா...


சரணம்
தனுவு/-ஏ/ பனுலகு/ சனின/ மரி/
உடல்/ எந்த/ பணிகளுக்கு/ சென்றாலும்/ மேலும்/

கன/ ரானிதி3/ கனுகொ3னின/
காண/ தகாதவற்றினை/ கண்டுகொண்டிடினும்/

நினுகா3/ பா4விஞ்சி/ ஸந்தஸில்லிதி/
நீயாகவே/ யுணர்ந்து/ மகிழ்வுற்றேன்/

ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (வி)
ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆர்திப3டி3 - ஆர்திப3டி3னா.
2 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 08 Dec 2009

No comments: