Sunday, October 18, 2009

தியாகராஜ கிருதி - நின்னே நெர நம்மினானு - ராகம் ஆரபி4 - Ninne Nera Namminanu - Raga Arabhi

பல்லவி
நின்னே நெர நம்மினானு
நீரஜாக்ஷ நனு ப்3ரோவுமு

அனுபல்லவி
கன்ன கன்ன வாரினி வேடு3கொன்னானு
2லமு லேத3னி நே (நி)

சரணம்
சரணம் 1
தா3ர தனயுல உத3ர பூரணமு ஸேயு கொரகு
தூ3ர தே31முலனு ஸஞ்சாரமு ஜேஸி
ஸாரமிந்தைன லேக வேஸாரி ஈ
ஸம்ஸார பாராவாரமந்து3 கலுகு32லமீ
தா3ரியனி தெலிஸி ராம (நி)


சரணம் 2
ஸஞ்சித கர்மமு தொலகி3ஞ்சி நன்னே வேள
கருணிஞ்சி 1ப்3ரோசு தை3வமு நீவனுசு
யாசிஞ்சி
கொஞ்செபு நருல
நுதியிஞ்சனு நா வல்லனு காத3ஞ்சுனு து3ஸ்ஸங்க3தி
சாலிஞ்சி ஸந்ததமு ராம (நி)


சரணம் 3
பூ4தலமுனனொக்கரி சேதி த4னமபஹரிஞ்சு
கா4தகுல பரலோக பீ4தியு லேனி
பாதகுல பட்டி யம தூ3தலு கொட்டெடி3 வேள
ப்3ரோதுனனி பல்கனெவரி சேத
காத3னி ஸ்ரீ ராம (நி)


சரணம் 4
எந்து3 நிண்டி3யுண்டு3 ரகு4 நந்த3ன வேக3 நா
மனஸுனந்து3 தலசினயந்தானந்த3மை தோசே
ஸுந்த3ர வத3ன யோகி3 ப்3ரு2ந்த3 வந்தி3
பாதா3ரவிந்த3 யுக3 த்யாக3ராஜ
வந்த3னீய ஸந்ததமு (நி)


பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! இராமா! எங்கும் நிறைந்திருக்கும் இரகு நந்தனா! விரைவாக, எனது மனத்தினில், நினைத்தவுடனே, ஆனந்தமாகித் தோன்றும், எழில் வதனத்தோனே! யோகியர்களால் தொழப் பெற்ற கமலத் திருவடி யிணையோனே! தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • எவ்வமயமும் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;

  • என்னைக் காப்பாயய்யா;

    • கண்ட கண்டவர்களை வேண்டிக்கொண்டேன்; பயனில்லையென, நான் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;

    • மனைவி மக்களின் வயிற்றினை நிரப்புவதற்காக, தூர தேசங்களில் சஞ்சரித்து, சாரம் சிறிதுமின்றி, துயருற்று, இந்த சமுசாரக் கடலில் கிடைக்கும் பயன் இந்த விதமென உணர்ந்து, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;

    • முன்வினையை ஒழித்து, என்னை எவ்வேளையும் கருணித்துக் காக்கும் தெய்வம் நீயென இரந்து, அற்ப மனிதரைப் போற்ற என்னாலாகாதென, தீயோரிணக்கம் போதுமென்று, எவ்வமயமும், உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;

    • புவியில் மற்றவரின் செல்வத்தினைக் கவரும் கொலையாளிகள், மற்றும் பரலோக அச்சமற்ற பாதகர்களைப் பிடித்து, நமனின் தூதர்கள் உதைக்கும்போது, காப்பேனெனப் பகர, எவராலும் இயலாதென, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நெர/ நம்மினானு/
உன்னையே/ மிக்கு/ நம்பியுள்ளேன்/

நீரஜ/-அக்ஷ/ நனு/ ப்3ரோவுமு/
கமல/ கண்ணா/ என்னை/ காப்பாயய்யா/


அனுபல்லவி
கன்ன/ கன்ன வாரினி/ வேடு3கொன்னானு/
கண்ட/ கண்டவர்களை/ வேண்டிக்கொண்டேன்/

2லமு/ லேது3/-அனி/ நே/ (நி)
பயன்/ இல்லை/ யென/ நான்/ உன்னையே...


சரணம்
சரணம் 1
தா3ர/ தனயுல/ உத3ர/ பூரணமு ஸேயு கொரகு/
மனைவி/ மக்களின்/ வயிற்றினை/ நிரப்புவதற்காக/

தூ3ர/ தே31முலனு/ ஸஞ்சாரமு ஜேஸி/
தூர/ தேசங்களில்/ சஞ்சரித்து/

ஸாரமு/-இந்தைன/ லேக/ வேஸாரி/ ஈ/
சாரம்/ சிறிதும்/ இன்றி/ துயருற்று/ இந்த/

ஸம்ஸார/ பாராவாரமு-அந்து3/ கலுகு3/ ப2லமு/-ஈ/
சமுசார/ கடலில்/ கிடைக்கும்/ பயன்/ இந்த/

தா3ரி/-அனி/ தெலிஸி/ ராம/ (நி)
விதம்/ என/ உணர்ந்து/ இராமா/ உன்னையே...


சரணம் 2
ஸஞ்சித/ கர்மமு/ தொலகி3ஞ்சி/ நன்னு/-ஏ வேள/
முன்வினையை/ ஒழித்து/ என்னை/ எவ்வேளையும்/

கருணிஞ்சி/ ப்3ரோசு/ தை3வமு/ நீவு/-அனுசு/
கருணித்து/ காக்கும்/ தெய்வம்/ நீ/ யென/

யாசிஞ்சி/ கொஞ்செபு/ நருல/
இரந்து/ அற்ப/ மனிதரை/

நுதியிஞ்சனு/ நா வல்லனு/ காது3/-அஞ்சுனு/ து3ஸ்/-ஸங்க3தி/
போற்ற/ என்னால்/ ஆகாது/ என/ தீயோர்/ இணக்கம்/

சாலிஞ்சி/ ஸந்ததமு/ ராம/ (நி)
போதுமென்று/ எவ்வமயமும்/ இராமா/ உன்னையே...


சரணம் 3
பூ4தலமுன/-ஒக்கரி சேதி/ த4னமு/-அபஹரிஞ்சு/
புவியில்/ மற்றவரின்/ செல்வத்தினை/ கவரும்/

கா4தகுல/ பரலோக/ பீ4தியு/ லேனி/
கொலையாளிகள்/ (மற்றும்) பரலோக/ அச்சம்/ அற்ற/

பாதகுல/ பட்டி/ யம/ தூ3தலு/ கொட்டெடி3/ வேள/
பாதகர்களை/ பிடித்து/ நமனின்/ தூதர்கள்/ உதைக்கும்/ போது/

ப்3ரோதுனு/-அனி/ பல்கனு/-எவரி சேத/
காப்பேன்/ என/ பகர/ எவராலும்/

காது3/-அனி/ ஸ்ரீ ராம/ (நி)
இயலாது/ என/ ஸ்ரீ ராமா/ உன்னையே...


சரணம் 4
எந்து3/ நிண்டி3/-உண்டு3/ ரகு4/ நந்த3ன/ வேக3/ நா/
எங்கும்/ நிறைந்து/ இருக்கும்/ இரகு/ நந்தனா/ விரைவாக/ எனது/

மனஸுன-அந்து3/ தலசின/-அந்த/-ஆனந்த3மை/ தோசே/
மனத்தினில்/ நினைத்த/ உடனே/ ஆனந்தமாகி/ தோன்றும்/

ஸுந்த3ர/ வத3ன/ யோகி3 ப்3ரு2ந்த3/ வந்தி3த/
எழில்/ வதனத்தோனே/ யோகியர்களால்/ தொழப் பெற்ற/

பாத3/-அரவிந்த3/ யுக3/ த்யாக3ராஜ/
திருவடி/ கமல/ இணையோனே/ தியாகராசனால்/

வந்த3னீய/ ஸந்ததமு/ (நி)
தொழப் பெற்றோனே/ எவ்வமயமும்/ உன்னையே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி - ப்3ரோசு தை3வமு நீவனுசுயாஸிஞ்சி : இவ்விடத்தில் 'ப்3ரோசு தை3வமு நீவனுசு யாசிஞ்சி' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்Updated on 19 Oct 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 4 ல் ’எந்து3 நிண்டி3யுண்டு3’ என்பது எங்கே? நிறைந்திருக்கும் என்று தானே பொருள் தரும். நான் அறிந்தவரை எந்தூ3 என்பது தான் எங்கும் எனப்பொருள் படும். அன்னிதாவுனனு/அன்னிசோட்லனு/எக்கட3னு என்பன் பேச்சுவழக்கில் உள்ளன.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தெலுங்கு அகராதியின்படி, எந்து3ன்னு என்ற சொல் 'எங்கும்' என்று பொருளாகும். ஆனால் பேச்சுவழக்கில் 'எந்து3' என்பதும் 'எங்கும்' என்று பொருள்படும். இவ்விடத்தில் அச்சொல்லுக்கு வேறு பொருள்கொள்வதற்கில்லை.

எனவே, தியாகராஜர், 'எந்து3ன்னு' என்பதனைக் குறுக்கியோ, அல்லது பேச்சுவழக்குப்படியோ 'எந்து3' என்று எழுதியிருக்கலாம்.

வணக்கம்
கோவிந்தன்