Thursday, July 23, 2009

தியாகராஜ கிருதி - செலிமினி ஜலஜாக்ஷு - ராகம் யது3குல காம்போ4ஜி - Chelimini Jalajaakshu - Raga Yadukula Kaambhoji, Prahlaada Bhakti Vijayam

பல்லவி
செலிமினி ஜலஜாக்ஷு கண்டே
செப்பரய்யா மீரு

அனுபல்லவி
பலுமாரு ம்ரொக்கெத3னு த3யதோ
பலுகரய்யா எந்தோ (செ)

சரணம்
சரணம் 1
1ர சாபமு கரமுனனிடி3 மெரயுனய்யா எந்தோ
கருணா ரஸமு நிண்டி3ன கன்னுலய்யா (செ)


சரணம் 2
ஜூட3 ஜூட3 மனஸு 1கரகே3 ஸுமுகு23ய்யா ப4க்துல
ஜாட3 தெலிஸி 2மாடலாடே3 ஜாணுட3ய்யா (செ)


சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ருனி பா3ஸி மேனு சிக்கெனய்யா ஹரி
செங்க3ட முன்னே நா மதி3 சிக்கெனய்யா (செ)


சரணம் 4
நா லோனி ஜாலினி பல்க ஜாலனய்யா ஹரி
மீலோ மீரே தெலிஸி மர்மமிய்யரய்யா (செ)


சரணம் 5
த்யாக3ராஜ ஸகு23னி 3தலதுனய்யா மீரு
பா3கு33 நாயங்க3லார்பு பா3பரய்யா (செ)


பொருள் - சுருக்கம்
ஐயா,
  • பலமுறை வணங்கினேன்;

  • மிக்கு (எனது) காதலினை, கமலக்கண்ணனைக் கண்டால், நீவிர் தயையுடன் சொல்லுவீரய்யா;


    • வில்லம்பு கையிலேந்தி ஒளிர்வானய்யா;

    • எவ்வளவோ கருணைச் சாறு நிறைக் கண்களய்யா;

    • காணக்காண உள்ளம் கரையும் இன்முகத்தோனய்யா;

    • தொண்டர்களின் குறிப்பறிந்து உரையாடும் வல்லவனய்யா.


  • அழகனைப் பிரிந்து மேனி இளைத்ததய்யா;

  • அரியிடம் முன்னமே எனதுள்ளம் சிக்கியுள்ளதய்யா.


  • எனதுட் துயரினைப் பகரவியலேனய்யா; ஐயகோ!

  • உம்முள் நீவிரேயறிந்து மருமத்தினைத் தெரிவிப்பீரய்யா.


  • தியாகராசனின் நண்பனென நினைக்கின்றேனய்யா.


  • நீவிர் நன்கு எனது துயரினைத் தீர்ப்பீரய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
செலிமினி/ ஜலஜ/-அக்ஷு/ கண்டே/
(எனது)/ காதலினை/ கமல/ கண்ணனை/ கண்டால்/

செப்பரய்யா/ மீரு/
சொல்லுவீரய்யா/ நீவிர்/


அனுபல்லவி
பலுமாரு/ ம்ரொக்கெத3னு/ த3யதோ/
பலமுறை/ வணங்கினேன்/ தயையுடன்/

பலுகரய்யா/ எந்தோ/ (செ)
பகர்வீரய்யா/ மிக்கு/ (எனது) காதலினை...


சரணம்
சரணம் 1
1ர/ சாபமு/ கரமுனனு/-இடி3/ மெரயுனய்யா/ எந்தோ/
அம்பு/ வில்/ கையில்/ ஏந்தி/ ஒளிர்வானய்யா/ எவ்வளவோ/

கருணா/ ரஸமு/ நிண்டி3ன/ கன்னுலய்யா/ (செ)
கருணை/ சாறு/ நிறை/ கண்களய்யா/


சரணம் 2
ஜூட3 ஜூட3/ மனஸு/ கரகே3/ ஸுமுகு23ய்யா/ ப4க்துல/
காணக்காண/ உள்ளம்/ கரையும்/ இன்முகத்தோனய்யா/ தொண்டர்களின்/

ஜாட3/ தெலிஸி/ மாடலு-ஆடே3/ ஜாணுட3ய்யா/ (செ)
குறிப்பு/ அறிந்து/ உரையாடும்/ வல்லவனய்யா/


சரணம் 3
ஸ்1ரு2ங்கா3ருனி/ பா3ஸி/ மேனு/ சிக்கெனய்யா/
அழகனை/ பிரிந்து/ மேனி/ இளைத்ததய்யா/

ஹரி செங்க3ட/ முன்னே/ நா/ மதி3/ சிக்கெனய்யா/ (செ)
அரியிடம்/ முன்னமே/ எனது/ உள்ளம்/ சிக்கியுள்ளதய்யா/


சரணம் 4
நா/ லோனி/ ஜாலினி/ பல்க/ ஜாலனய்யா/ ஹரி/
எனது/ உள்/ துயரினை/ பகர/ இயலேனய்யா/ ஐயகோ/

மீலோ/ மீரே/ தெலிஸி/ மர்மமு/-இய்யரய்யா/ (செ)
உம்முள்/ நீவிரே/ அறிந்து/ மருமத்தினை/ தெரிவிப்பீரய்யா/


சரணம் 5
த்யாக3ராஜ/ ஸகு2டு3/-அனி/ தலதுனய்யா/ மீரு/
தியாகராசனின்/ நண்பன்/ என/ நினைக்கின்றேனய்யா/ நீவிர்/

பா3கு33/ நா/-அங்க3லார்பு/ பா3பரய்யா/ (செ)
நன்கு/ எனது/ துயரினை/ தீர்ப்பீரய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கரகே3 - கரகெ3டு3.

2 - மாடலாடே3 - மாடலாடெ3டு3.

3 - தலதுனய்யா - தலதுரய்யா : 'தலதுனய்யா' என்ற சொல்லே மிக்கு பொருந்தும்.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
கமலக்கண்ணன், அழகன் - அரி

இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், அரியைக் காணாது, பிரகலாதன் கண்டவரையெல்லாம் வேண்டுவதனை தியாகராஜர் சித்தரிக்கின்றார்.

Top


Updated on 22 Jul 2009

No comments: