Sunday, July 19, 2009

தியாகராஜ கிருதி - ஆட3வாரமெல்ல - ராகம் யது3குல காம்போ4ஜி - Adavaaramella - Raga Yadukula Kambhoji - Nauka Charitram

பல்லவி
ஆட3வாரமெல்ல கூடி3 1மனமாடு3தா3மு ஹரினி வேடி3

சரணம்
சரணம் 1
க்ரு2ஷ்ணுடு3 ஜூட33 மனமு ஜல க்ரீட3 ஸல்ப மஞ்சி தி3னமு (ஆ)


சரணம் 2
கமல நேத்ருனி பா3ஸி ஸுக2மா ஓட33ட்டு ஜேர்ப மன தரமா (ஆ)


சரணம் 3
ராஜ குமாருடு3 வீடு3 நவ ரத்ன ஸொம்முலு பெட்டினாடு3 (ஆ)


சரணம் 4
பஸி பி3ட்33 காத3டவம்மா வீடு34யபடு3னோ தெலியத3ம்மா (ஆ)


சரணம் 5
தல்லிதோ சாடி3 பலுகுது3ரே மன தலலு 2வஞ்ச தூ3ருது3ரே (ஆ)


சரணம் 6
மாடகு 3சோடௌனு கானி மன ஆடலு தெலியக போனி (ஆ)


சரணம் 7
யுவதுலாரா மீலோனே மீரு யோசிம்ப ப்ரொத்3து3 4பொய்யெனு (ஆ)


சரணம் 8
சாலு சாலிடு ராரம்மா ஓட3 ஸலிலமந்து3 தோயரம்மா (ஆ)


சரணம் 9
த்யாக3ராஜாப்துடு3 வீடு3 வனிதல மாடலு வின லேடு3 (ஆ)


பொருள் - சுருக்கம்
  • கோபியர் - ஒருவருக்கொருவர் -

    • பெண்களெல்லோரும் கூடி, நாம் பேசுவோம், அரியை வேண்டி;

    • கண்ணன் காண, நாம் நீரில் கேளிக்கை செய்ய நல்ல நாளாகும்;

    • கமலக் கண்ணனைப் பிரிந்து சுகமா? ஓடத்தைக் கரை சேர்க்க நமக்குத் தரமா?

    • அரச குமாரன் இவன்; நவரத்தின அணிகலன்கள் வேய்ந்துள்ளான்;

    • சின்னக் குழந்தை அல்லவாமம்மா, இவன் அஞ்சுவானோ தெரியாதம்மா;

    • தாயிடம் கோள் சொல்வரே; நமது தலை குனியத் தூற்றுவரே;

    • பேச்சுக் கிடமாகும்; எனினும் நமது கேளிக்கைகள் (உலகிற்கு) தெரியாமற் போகட்டும்.

  • கண்ணன் -

    • கன்னியரே! உம்முள்ளே நீவிர் யோசிக்க, பொழுது போயிற்று;

    • போதும், போதும், இங்கு வாருங்களம்மா; ஓடத்தினை நீரினில் தள்ளுங்களம்மா.

  • கோபியர் -

    • தியாகராசனின் நண்பனிவன்; வனிதையரின் சொற்களைக் கேளான்.



பதம் பிரித்தல் - பொருள்
கோபியர் - ஒருவருக்கொருவர் -
பல்லவி
ஆட3வாரமு/-எல்ல/ கூடி3/ மனமு/-ஆடு3தா3மு/ ஹரினி/ வேடி3/
பெண்கள்/ எல்லோரும்/ கூடி/ நாம்/ பேசுவோம்/ அரியை/ வேண்டி/


சரணம்
சரணம் 1
க்ரு2ஷ்ணுடு3/ ஜூட33/ மனமு/ ஜல/ க்ரீட3/ ஸல்ப/ மஞ்சி/ தி3னமு/ (ஆ)
கண்ணன்/ காண/ நாம்/ நீரில்/ கேளிக்கை/ செய்ய/ நல்ல/ நாளாகும்/


சரணம் 2
கமல/ நேத்ருனி/ பா3ஸி/ ஸுக2மா/ ஓட3/ க3ட்டு/ ஜேர்ப/ மன/ தரமா/ (ஆ)
கமல/ கண்ணனை/ பிரிந்து/ சுகமா/ ஓடத்தை/ கரை/ சேர்க்க/ நமக்கு/ தரமா/


சரணம் 3
ராஜ/ குமாருடு3/ வீடு3/ நவ/ ரத்ன/ ஸொம்முலு/ பெட்டினாடு3/ (ஆ)
அரச/ குமாரன்/ இவன்/ நவ/ ரத்தின/ அணிகலன்கள்/ வேய்ந்துள்ளான்/


சரணம் 4
பஸி/ பி3ட்33/ காத3டவம்மா/ வீடு3/ ப4யபடு3னோ/ தெலியத3ம்மா/ (ஆ)
சின்ன/ குழந்தை/ அல்லவாமம்மா/ இவன்/ அஞ்சுவானோ/ தெரியாதம்மா/


சரணம் 5
தல்லிதோ/ சாடி3/ பலுகுது3ரே/ மன/ தலலு/ வஞ்ச/ தூ3ருது3ரே/ (ஆ)
தாயிடம்/ கோள்/ சொல்வரே/ நமது/ தலை/ குனிய/ தூற்றுவரே/


சரணம் 6
மாடகு/ சோடு-ஔனு/ கானி/ மன/ ஆடலு/ தெலியக/ போனி/ (ஆ)
பேச்சுக்கு/ இடமாகும்/ எனினும்/ நமது/ கேளிக்கைகள்/ (உலகிற்கு) தெரியாமற்/ போகட்டும்/


கண்ணன் -
சரணம் 7
யுவதுலாரா/ மீலோனே/ மீரு/ யோசிம்ப/ ப்ரொத்3து3/ பொய்யெனு/ (ஆ)
கன்னியரே/ உம்முள்ளே/ நீவிர்/ யோசிக்க/ பொழுது/ போயிற்று/


சரணம் 8
சாலு/ சாலு/-இடு/ ராரம்மா/ ஓட3/ ஸலிலமந்து3/ தோயரம்மா/ (ஆ)
போதும்/ போதும்/ இங்கு/ வாருங்களம்மா/ ஓடத்தினை/ நீரினில்/ தள்ளுங்களம்மா/


கோபியர் -
சரணம் 9
த்யாக3ராஜ/-ஆப்துடு3/ வீடு3/ வனிதல/ மாடலு/ வின லேடு3/ (ஆ)
தியாகராசனின்/ நண்பன்/ இவன்/ வனிதையரின்/ சொற்களை/ கேளான்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனமாடு3தா3மு - மனமாடு3தா3

2 - வஞ்ச - வம்பிம்ப

3 - சோடௌனு - ஜோடௌ3னு : 'சோடௌனு' சரியான சொல்லாகும்

4 - பொய்யெனு - பொய்யெனி : 'பொய்யெனு' சரியான சொல்லாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஆடு3தா3மு - இச்சொல்லுக்கு, 'பேசுவோம்' என்றும் 'விளையாடுவோம்' என்று பொருளாகும். இதனை அடுத்துவரும் 'வேடி3' (வேண்டி) என்ற சொல்லினால் 'பேசுவோம்' என்ற பொருளே சரியாகும்.

இப்பாடல், 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். யமுனை நதிக் கரையில் கோபியர் கண்ணனைக் கூடி, படகில் பயணம் செய்ய எண்ணுகின்றனர்.

பேசுவோம் - அழைப்போம் என

Top


Updated on 19 Jul 2009

No comments: